சென்னை,
டிசம்பர்
15, 2008.
சென்னை
பூக்கடை போலீஸ்
நிலையத்தில்
பணியில் ஒழுங்கீனமாகவும்,
கட்டபஞ்சாயத்தில்
ஈடுபடுவதாகவும்
இன்ஸ்பெக்டர்
கோவிந்தராஜன்
மீது புகார்கள்
வந்தது.
இதையடுத்து
இன்ஸ்பெக்டர்
கோவிந்தராஜன்
பூக்கடை போலீஸ்
நிலையத்தில்
இருந்து நெல்லை
மாவட்டத்துக்கு
மாற்றப்பட்டார்.
-இது
செய்திதாள்களில்
வெளிவந்த செய்தி.
இது
சரியான வழிமுறையா
என்று பார்ப்போம்.
தனியார்
நிறுவனம்,
எல்
அண்ட் டி இல்
வேலை பார்க்கும்
ஒருவர்,
தனது
உத்யோகத்தில்
நேர்மையாக
நடந்து கொள்ளாமால்
தவறு செய்து
விட்டார் என்றால்,
உடனே
அவரை சென்னையிலிருந்து,
ஆந்திராவில்
உள்ள கிராமத்தில்
இருக்கும்
தொழிற்சாலைக்கு
மாற்றியா உத்தரவு
பிறப்பிக்கப்படும்.
தனியார்
நிறுவன,
சன்
தொலைக்காட்சியில்
வேலை பார்க்கும்
ஒருவர்,
தனது
உத்யோகத்தில்
நேர்மையாக
நடந்து கொள்ளாமல்
தவறு செய்து
விட்டார் என்றால்,
உடனே
அவரை தமிழ்
தொலைக்காட்சியிலிருந்து,
மலையாளம்
அல்லது கன்னடம்
தொலைக்காட்சிக்கு
மாற்றியா உத்தரவு
பிறப்பிக்கப்படும்.
ஆக,
தமிழக
காவல்துறையில்,
இப்படி
தவறு செய்பவர்களை
நெல்லைக்கு
மாற்றுவது
எந்தவகையில்
நியாயம்?
அதற்கும்மேலாக,
நெல்லை
வாழ் மக்கள்
என்ன தரம்
தாழ்ந்தவர்களா?
நெல்லை
வாழ் மக்கள்,
வரி
செலுத்துவதில்லையா?
அதெப்படி,
இப்படி
நேர்மையற்ற
காவல் அதிகாரிகளை,
நெல்லைக்கு
அனுப்பலாம்?
இப்படி
மாற்றலாகி
நெல்லைக்குப்போன
அதிகாரிகளின்கீழ்
வேலை செய்பவர்கள்
எப்படி நேர்மையாக
வேலை செய்வார்கள்?
இவர்களுக்கு
கீழே வேலை செய்யும்
ஏட்டு,
இலஞ்சம்
வாங்கினால்,
இந்த
அதிகாரியால்
தட்டிக்கேட்க
முடியுமா?
அந்த
ஏட்டு சொல்ல
மாட்டாரா,
“போங்க
சார்,
விளையாடாதீங்க.
என்மேல்
குத்தம் கண்டு
பிடிக்கிறீங்க.
நீங்க
திரும்ப சென்னை
பூக்கடைக்கு
போகின்ற வழியை
பாருங்க.
அதுக்கு,
சரியான
அதிகாரியை
பார்த்து,
ஆக
வேண்டிய காரியத்தை
பாருங்க.”
ஆக,
இப்படி
மாபெரும் தமிழக
போலிஸ் என்பதற்கு
பதில்,
நிறைய
சிறிய நகர போலிஸ்
என்று மாற்றம்
கொண்டு வந்தால்,
சிறப்பாக
சேவை நடக்கும்.
அப்படிவரும்போது,
சென்னை
பூக்கடை போலிஸ்
தவறு செய்தால்,
நெல்லைக்கு
மாற்றல் கிடையாது.
வீட்டுக்கு
போக வேண்டியதுதான்.
நெல்லை
நகர போலிஸ்,
தரம்
வாய்ந்தவர்களாகவே
இருப்பார்கள்.
நெல்லை
வாழ் மக்களுக்கு
தரமான சேவை
கிடைக்கும்.