|
இராமாயணத்தில்,
இராமன்
இலங்கை மீது
படையெடுத்து
சென்று இருப்பான்.
போரின்
இறுதி கட்டம்.
இராமனுக்கும்
இராவணனுக்கும்
நேரடி யுத்தம்
நடக்கும்.
அந்த
யுத்தத்தில்,
இராவணன்
ஆயுதங்களையெல்லாம்
இழந்து,
நிராயுதபாணியாக
நிற்பான்.
அப்பொழுது,
ஒரே
அம்பில்,
இராமன்
இராவணனை கொன்று
இருக்க முடியும்.
ஆனால்,
இராமன்
இராவணனைப்
பார்த்து,
“இன்று
போய், நாளை
வா" என்கிறான்.
இராவணன்
கொடியவன் தான்;
தன்னோட
மனைவி சீதாவை
சிறையெடுத்து
சென்றவன்.
அப்படியிருந்தும்,
இராவணன்
மனம்
திருந்தி வாழ்வதற்கு
, ஒரு
சந்தர்ப்பம்
அளிக்கின்றான்
இராமன்.
ஆக,
இன்றைய
காலகட்டத்தில்,
அனைவரும்
தங்கள் நிலையில்
உறுதியாக
இருக்கின்றார்கள்.
எந்தவித
அழுத்தத்துக்கும்
அடிபணியும்
எண்ணம்
இல்லை.
அது
மிகவும் பாராட்டப்பட
வேண்டிய விசயம்.
இலங்கையின்
இராணுவம்,
பல
உயிரிழப்புகளை
சந்தித்தபோதிலும்,
மிகவும்
உறுதியாக
இருக்கின்றது.
பிராபகரனை
ஒழித்துவிட்டுத்தான்
மறுகாரியம்
என்று உறுதியோடு
செயல்படுகிறது.
அதுபோல,
மன்மோகன்
சிங்கின் அரசாங்கமும்,
பிராபகரனை
பழிக்கு
பழி வாங்கியே
தீருவது என்று
மிகவும் உறுதியாக
இருக்கின்றது.
ஆக,
போர்
நிறுத்தம் என்ற
பேச்சுக்கே
இடமில்லை.
பிராபகரனுக்கு
பொது மன்னிப்பு,
நிச்சயம்
இல்லை.
போர்
முடிவே -
இறுதியானதாகும்.
பிராபகரனின்
சாவே -
போரின்
முடிவாகும்.
அதற்கு
விலையாக,
எத்தனை
உயிர்களையும்,
எத்தனை
உடல்
உறுப்புகளையும்
இழக்க ராஜபக்சேயும்
உறுதியாக
இருக்கின்றார்.
மன்மோகன்
சிங்கும் உறுதியாக
இருக்கின்றார்.
கிளிநொச்சியில்
வாழும் மக்களின்
உயிரிழப்பு;
விடுதலை
புலிகளின்
உயிரிழப்பு;
சிங்கள
இராணுவ வீரர்களின்
உயிரிழப்பு;
அந்த
இராணுவ வீரர்களின்
கால்,
கை
என்ற
உடல் உறுப்புகளின்
இழப்பு.
இதில்
யார் தீவிரவாதி?
அடுத்தவர்களின்
உயிரிழப்புக்கு
காரணமாக இருக்கும்
அனைவருமே
தீவிரவாதிக்கள்
தான்.
நேற்றைக்கு
வேண்டுமானால்,
பிரபாகரன்
தீவிரவாதி.
ஆனால்,
இன்னைக்கு,
ராஜபக்சே
தீவிரவாதி.
மன்மோகன்
சிங்கும் தீவிரவாதியே.
|