|
ஆக,
எழுத்தாளர்
என்ற முன் அநுபவம்
தேவையில்லை.
"ரைட்டர்"
என்ற
முத்திரை
பதிக்கப்பட்டு
இருந்தால்
ஆங்கிலத்தில்
மட்டும் எழுதிவிட்டு,
தமிழாக்கத்திற்கு
வேறு
ஒரு எழுத்தாளரை
நாடி இருக்க
வேண்டும்.
“எழுத்தாளர்"
என்ற
முத்திரை
பதிக்கப்பட்டு
இருந்தால்
தமிழில்
மட்டும் எழுதிவிட்டு,
ஆங்கில
மொழிபெயர்ப்புக்கு
வேறு
ஒருவரை தேடி
இருக்க வேண்டும்.
முத்திரை
எதுவும் இல்லாததால்
எந்தவித
தயக்கமும்
இல்லாமல்
தமிழ்,
ஆங்கிலம்
இரண்டிலும்
சாதனை
படைத்து விட்டார்
காயத்ரி.
அது
என்னவோ,
தமிழ்
"பச்சையப்பாஸ்"
க்கே
சொந்தம்
என்று
ஒரு எண்ணம்
இருந்து வருகிறது.
கிண்டி,
குரோம்பேட்டையில்
படித்த பொறியாளர்களாலும்
ஸ்டான்லி
போன்ற மருத்துவ
கல்லூரியில்
படித்த மருத்துவர்களாலும்,
தமிழை
கையில் எடுத்து,
கொஞ்சி
விளையாட முடியும்
என்பது உண்மை.
சுஜாதா
- நம்
எல்லோர்க்கும்
முன்னோடி.
வீட்டிலே
உள்ள அனைவரும்
மருத்துவர்
என்றால்,
எவ்வளவு
போரடிக்கும்.
டின்னர்
மேஜையில்,
நடக்கும்
உரையாடல் இப்படித்தான்
இருந்திருக்கும்.
நாளைக்கு
எத்தனை ஆப்பரேஷன்?
கேட்டராக்ட்
எத்தனை?
அம்பி,
காலை
ஆப்பரேஷன் நீ
பண்ணிவிடு.
மதியம்
அவள் பண்ணிடுவாள்.
மருந்து
ஆர்டர் செய்திருந்தோமே,
வந்துடுத்தா?
கண்ணாடி,
சன்
கிளாஸ்,
காண்டாக்ட்
லென்ஸ்.
குடும்பமே
ஒரே தொழில்
செய்தா,
வேலை
செய்யும் இடமும்,
வீடும்
ஒரே மாதிரியாக
மாறிவிடும்.
அப்புறம்
வாழ்க்கை
எல்லோருக்கும்
போரடிக்க ஆரம்பித்து
விடும்.
இது
ஒரு முரட்டுத்தனமான
துணிச்சல்.
ஐடியா
எல்லோருக்கும்
தோணும்.
ஆனால்,
அதை
செயல்வடிவமாக்குவது,
ஒரு
புத்தகமாக,
மெய்பொருளாக்குவது
எளிதல்ல.
இப்படித்தான்,
ஒரு
இளைஞன்,
சீனாவைபற்றி,
புத்தகம்
எழுத விரும்பினான்.
அதற்காக,
அவன்
சீனாவுக்கு
சென்று,
பல்வேறு
தகவல்களை சேகரித்தான்.
இறுதியாக
அவனுக்கு தேவையானது
- சில
புள்ளி விவரங்கள்.
அந்த
விவரங்கள்
கிடைத்தவுடன்,
புத்தகத்தை
எழுதி முடித்துவிடலாம்
என்று இருந்தான்.
அந்த
இருபது வயது
இளைஞனுக்கு,
இன்று
வயது எழுபது.
இன்னும்
அந்த புள்ளி
விவரங்கள்
கிடைக்கவில்லை.
புத்தகம்
வெளிவரவேயில்லை,
இது
நாள் வரை.
ஆக,
எண்ணத்தை
மெய்பொருளாக்குவது
எளிதான காரியம்
அல்ல.
மிகப்பெரிய
சவால் என்னவாக
இருந்திருக்கும்
என்றால்,
நீயாவது,
ரஜினியைபற்றி
புத்தகம் எழுதுவதாவது,
அதை
யாரு படிக்கிறது
என்ற கேலி,
கிண்டல்.
மனசுக்குள்ளே
உதித்த அந்த
தீ பொறியை,
தன்னம்பிக்கை
என்ற எண்ணையை
ஊற்றி,
அக்னியை
வளர்த்து,
அதற்கு
சிறகுகள் வளர்ந்து,
இன்றைக்கு
பூவுலகில் வலம்
வருகிறது,
அக்னி
பறவையாக.
இந்த
புதுமையான
வழியில் பயணத்தை
ஆரம்பித்ததால்,
கடந்த
சில வருடங்களாக,
அவுங்க
வீட்டிலேயே
டின்னர்
மேசை உரையாடல்
மாறி இருந்திருக்கும்.
என்னம்மா,
எப்படி
போகுது உன்னோட
புராஜெக்ட்.
இன்னைக்கு
யாரை சந்தித்து
பேசினே.
நீ
சொல்கிறதை
பார்த்தாக்கா,
ரஜினி
ஒரு நல்ல மனுஷன்
மாதிரிதான்
தெரியுது.
ஆக,
புதுமை,
வாழ்வில்
புத்துணர்வை
ஏற்படுத்தும்.
|