Home Tamil Nadu India Planet Earth Human Freedom


பாட்டில் உள்ளே அடைக்கப்பட்டு
அமைதியாக இருக்கும் தண்ணீர்

Living is MeditationLiving is Meditation

சுதந்திரமாக ஓடித்திரியும்
அமைதியான நதி நீர்

சென்னை, டிசம்பர் 25.

பொதுவாக தியானம் என்றால்,

ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு,

ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் சொல்வது

என்று வழக்கமாகி விட்டது.



ஒரு இடத்தில் அமர்ந்து கொள்வதால்,

உடல் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகின்றது.



அதைத்தவிர, ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் சொல்வதால்,

மனதையும் கட்டுப்படுத்த முடிகின்றது. ஒரே சொல்லை

மீண்டும் மீண்டும் சொல்வதால், மனதை வலுகட்டாயமாக,

மற்ற சிந்தனைகளிலிருந்து மீட்டுக் கொண்டுவந்து,

மனதை அமைதிபடுத்த முடிகின்றது.



இப்படி அடைகின்ற மன அமைதி,

வலுகட்டாயமாக அடையும் அமைதி,

இந்த பாட்டில் உள்ளே அடைக்கப்பட்டு,

அமைதியாக இருக்கும் தண்ணீரைப் போன்றதாகும்.



ஆக, தியானம் என்பது,

இப்படி ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு,

ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் தொடர்ந்து சொல்வது

என்ற வழிமுறை சரியான செயல் அல்ல.



அப்ப தியானம் என்றால் என்ன?



தியானம் என்பது - ஒரு காரியத்தில் முழுஈடுபாட்டோடு செய்யும் செயல்.



ஒரு காரியத்தில் - முழுஈடுபாடு எப்ப வரும்?



ஒரு நேரத்தில் - ஒரு காரியத்தை செய்யும்போது.



அதாவது, சாப்பிடுகின்றபோது,

புத்தகம் படிக்காமல், அரசியல், குடும்ப பிரச்சனை

என்று பேசாமல், சாப்பிடுவது,

அந்த செயல் தியானம் ஆகும்.



சாப்பிடும்போது, பேச வேண்டும் என்றால்,

பேச்சு சாப்பாட்டினைபற்றிய பேச்சாக இருக்கலாம்.



அதுபோல, கிரிக்கெட் விளையாடும்போது,

அதில் முழுகவனம் செலுத்தி,

குடும்பம், அலுவலகம், ஆட்சி அரசியல்

என்று பிற சிந்தனைகள் எதுவும் இல்லாமல்

கிரிக்கெட் விளையாடுவது - தியானம் ஆகும்.



அதுபோல, சபா கச்சேரி கேட்கும் நேரத்தில்,

சிந்து பைரவி" சுகாசினி மாதிரி,

முழுகவனம் செலுத்தி கச்சேரி கேட்க வேண்டும்.

அருகில் இருக்கையில் இருப்பவர்களின் பேச்சு

கச்சேரி கேட்பதற்கு இடைஞ்சலாக இருக்கும்போது

வருகின்றதே ஒரு கோபம் - அது பாரதியாரின் கோபம்.

அந்த மேடையில், சிவகுமாரோடு,

நாட்டுப்புற பாடலின்மேல் நடக்கும் விவாதம்;

விவாதத்தை தொடர்ந்து, பாடும் பாட்டு - பாடறியேன்,

படிப்பறியேன், பள்ளிக்கூடம் நானறியேன்

அனைத்து செயலுமே, முழுஈடுபாட்டோடு செய்யும் செயல்.

ஆக அந்த செயல் - தியானம் ஆகும்.



சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்

வாழ்க்கையை முழுமையாக வாழ்வதே தியானம்.



இப்படி, ஒரு நேரத்தில், ஒரு காரியத்தில் முழுமையான ஈடுபாடு கொண்டு பழகிவிட்டால், இரவில் தூங்கும்போது, அந்த தூக்கம் என்ற ஒரு காரியத்தை மட்டுமே முழுமையாக செய்யும்படி அமையும். அதாவது, நல்லா தூங்குவீங்க.



அதைவிட்டுப்புட்டு, சாப்பிடும்போது, புத்தகம் படிப்பது;

தொலைக்காட்சி பார்க்கும்போது, வேற ஏதாவது பேசிக் கொண்டே இருப்பது;

வாகனத்தில் செல்லும்போது, போனில் பேசிக் கொண்டே போவது;

என்று பல காரியங்களை ஒரே நேரத்தில் செய்யும் பழக்கம் ஏற்படுத்தி விட்டீர்களானால், படுத்து தூங்கும்போதும், தூங்குவதை தவிர, வேறு சிந்தனைகளும் வந்து நிற்கும். ஆக, தூக்கம் கலைந்து விடும்.



சொல்ல வந்தது என்னவென்றால்,

எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், நீரோடை ஓடுகிறதே

அந்த மாதிரி அமைதிதான் மனதுக்கு ஏற்றது.



பாட்டில் உள்ளே அடைத்து வைக்கும் தண்ணீர் அமைதி,

மனசுக்கு ஏற்றதல்ல.



அந்த நீரோடை அமைதி,

உங்க சாப்பாட்டை நீங்க ரசித்து, சுவைத்து சாப்பிடும்போது கிடைக்கும்.

விளையாட்டில் முழுஈடுபாட்டோடு விளையாடும்போது கிடைக்கும்.

ஆணும், பெண்ணும் முழுஈடுபாட்டோடு காதல் செய்யும்போது கிடைக்கும்.



காதலியோடு இருக்கும்போது,

ஆபிஸ் ஈ-மெயில் பார்ப்பது சரியான செயல் அல்ல.



You don't need to go to Art of Living for Meditation.

Living your life is Meditation.



Year 2007 Articles...       Year 2005 Articles...       Year 2004 Articles...
 
Reproduction or translation into any language, in whole or in part, in any form or medium without express written permission
from us is prohibited. contact S. Balachandran [balachandran@muthamil.com]
All rights reserved. © 2007 Muthamil.com