Home Tamil Nadu India Planet Earth Human Freedom


அவன் சந்தனக் கடத்தல் வீரப்பன் இல்லை.
அவன் சர்வாதிகாரி சதாம் ஹூசைன் இல்லை.


பிராபகரன் ஒரு மானிக் பாட்ஷா.

சென்னை, டிசம்பர் 29.



சந்தனக் கடத்தல் வீரப்பன், காட்டில் மறைந்திருந்து வாழ்ந்து வந்தான். வீரப்பன் பலவித சமுகவிரோத செயல்களில் ஈடுபட்டு இருந்தான். வீரப்பன் செய்த காரியங்கள் எல்லாம், அவனது சுயநலத்துக்காக செய்தவைகள். ஆக, வீரப்பனை அழித்த செயல் சரியான செயலே.



ஆனால், பிரபாகரன் செய்த காரியங்கள் எல்லாம் பொது நலத்துக்காக செய்த காரியங்கள். பொது மக்களை மனதில் கொண்டு, எடுத்த முடிவுகள். அப்படி எடுத்த பல முடிவுகள் தவறானவையாக இருந்திருக்கின்றது. ஆனால், வீரப்பனை ஒழித்ததுபோல் பிராபகரனை அழிக்க நினைப்பது சரியான செயல் அல்ல.



அடுத்து, இராக்கின் சதாம் ஹுசைன். சதாம் ஹுசைன், தனது மக்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி, அடிமைகளாக ஆக்கி, அரண்மனைகளில் சர்வாதிகாரியாக வாழ்ந்து வந்தான்.



ஆனால், பிரபாகரன், தனது மக்களுக்கு தைரியம் கொடுத்து, அவர்கள் அடிமைகளாக ஆகிவிடாமல் பாதுகாப்பு அளித்து வருகிறான். மக்களோடு மக்களாக, காடுகளில் வாழ்ந்து வருகிறான் பிராபகரன். காசுக்காக, இராக் மக்கள், சதாம் ஹுசைனை காட்டிக் கொடுத்தார்கள். ஆனால், இலங்கையில், தன் தலைவனுக்கு, மக்களே அரணாக இருக்கிறார்கள்.



பிராபகரன் - ஒரு மானிக் பாட்ஷா.



ரஜினியின் பாட்ஷா படத்தில், மாணிக்கமும், அன்வரும் நண்பர்கள். அநியாயத்தைகண்டு அஞ்சி ஓடிவிடாமல், அதை எதிர்த்து நிற்பார்கள். அப்படி இவர்கள் ஆண்டனியை எதிர்த்து நிற்கும்போது, ஆண்டனியின் ஆட்கள், அன்வரை கொன்று விடுவார்கள். அந்த செய்தியை கேட்ட மாணிக்கம், அன்வரை கொன்ற அனைவரையும் கொன்று விடுவான்.



அப்ப, அங்கே போலீஸ் வரும். போலீஸ் அதிகாரி கேட்பார்:



கிஸ்னே மாரா?

அதாவது, இந்த கொலைகளை யார் செய்தது என்று.



அதற்கு, கூடியிருந்த கூட்டத்திலிருந்து, ஒரு வயதான கிழவி, முன்னேவந்து,

மேனே மாரா.

நான்தான் இந்த கொலையை செய்தேன். என்னை கைது செய் என்பாள். அதனை தொடர்ந்து, வயதான கிழவன், என்னை கைது செய் என்பான். அப்படியே அனைத்து மக்களும், தங்களை கைது செய் என்பார்கள்.



மாணிக்கம் - மானிக் பாட்ஷாவாக மாறிவிடுவான்.

அதுதான் - மக்கள் சக்தி.

மக்கள் வழங்கும் தீர்ப்பு - சட்டப் புத்தகத்தை பார்த்து அல்ல.

மக்கள் வழங்கும் தீர்ப்பு - தர்மத்தின் அடிப்படையில் ஆகும்.



மானிக் பாட்ஷாவை, மக்களிடமிருந்து பிரித்தெடுத்து,

தண்டிக்க நினைப்பது இயலாத காரியம்.



ஆனால், அதுக்காக மானிக் பாட்ஷாவை தண்டிக்காமல் விட முடியாது.



மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்தும் பொறுப்பை கொடுப்பதே,

சரியான தண்டனை; ஆயுள் தண்டனை.



அப்படி செய்யும்போது, மானிக் பாட்ஷா, மீண்டும் மாணிக்கமாகிறான். தம்பி, தங்கைகளை படிக்க வைக்க வேண்டிய பொறுப்பு; அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பு. ஆக அத்தனை பொறுப்புகளையும் மாணிக்கம் நிறைவேற்றுகிறான்.



ஆக, பிராபகரன் - ஒரு மானிக் பாட்ஷா. இன்றைக்கு, மீண்டும் மாணிக்கமாக தயாராக இருக்கிறார். பிராபகரன் தலையில் முழு பொறுப்பை ஒப்படைப்பதே, சரியான தண்டனையாக அமையும்.



வரலாறு சரியாக தெரியாததால் இந்த கேள்வி :



அன்றைய காலகட்டத்தில், ஏன், வரதராஜ பெருமாள் என்பவரை முதல்வராக ஆக்கினார்கள். ஏன், பிராபகரனை முதல்வராக ஆக்கவில்லை.



அப்பவே, பிராபகரனுக்கு ஆக்கபூர்வமான பொறுப்பை அளித்திருந்தால், பல தவறுகள் நடந்திருக்க வாய்ப்பேயில்லாமல் போயிருந்திருக்கும்.




Sri Lankan Tamil woman known as Rasamma, 58, stands outside her low-budget hostel in Colombo, 07 June 2007, after being evicted as part of a crackdown against minority Tamils. Armed Sri Lankan police forced hundreds of ethnic minority Tamils out of the capital Colombo, 07 June 2007, as part of an effort to clear the city of feared Tamil Tiger cells, officials and witnesses said. Police stormed Tamil-majority areas of the capital under the cover of darkness and forced guests at low-budget hostels to get into buses escorted by armed men, residents said



சில வருடங்களுக்கு முன்பு, இலங்கை இராணுவம் வலிமையானதாக இல்லை. ஆனால், இன்றைக்கு, இலங்கை இராணுவம் மிகவும் வலிமையானதாக உருவாகி இருக்கின்றது. இராணுவம் வலிமையாகும்போது, ஜனநாயகம் வலிமையிழந்துவிடுகிறது..



பாகிஸ்தானில், பெயருக்குத்தான் ஜனநாயகம். இராணுவ தளபதிகளின் ஆணையின்படியே, அங்குள்ள பிரதமர், அதிபர் எல்லாம் செயல்பட வேண்டிய கட்டாயம்.



பர்மாவில், முழுக்க முழுக்க இராணுவ சர்வாதிகாரம். ஒரு காலத்தில், ஆசியாவின் அரிசி சோலையாக இருந்தது பர்மா. இன்றைக்கு பசி, பட்டினி. எல்லாம் இராணுவத்தின் நிர்வாகம்.



கிட்டத்தட்ட இலங்கை, அந்த இலக்கை நோக்கித்தான் செல்கிறது. இன்றைக்கு, இலங்கை இராணுவ தளபதிகள், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப்பார்த்து சொல்கிறார்கள் - அரசியல் கோமாளிகள் என்று.



ஆக, அங்கேயே ஆரம்பித்துவிட்டது இராணுவத்தின் சர்வாதிகார சிந்தனை. வெகு விரைவில், இலங்கை அரசியல்வாதிகளைப்பார்த்து, தளபதிகள் சொல்வார்கள்:

இலங்கை அரசியல்வாதிகள் - இலங்கை கோமாளிகள் என்று.



ஆக, ஒரு நாட்டின் இராணுவ வளர்ச்சி - அழிவை நோக்கிய வளர்ச்சி.



விடுதலைப்புலிகளை ஒழித்து முடிந்து விட்டபிறகு, இந்த இராணுவத்தை யாரும் கலைத்துவிட முடியாது. புலிகள் ஒழிந்தபிறகு, இராணுவம், இலங்கை மக்களின் மீது, சர்வாதிகாரத்தை திணிக்கும். இதுதான் வரலாற்று உண்மை.



இப்பவே பார்த்தீர்களானால், இலங்கை இராணுவத்தின் அடக்குமுறையின் எல்லையை உணர்வீர்கள்.



இராணுவம், கிளிநொச்சியில் சண்டைபோட மட்டும் உபயோகப்படுத்தப்படவில்லை.



இராணுவம், கொழும்பில், மக்களை சோதிக்க உபயோகப்படுத்தப்படுகிறது.



ஆக, இராணுவம், புலிகளை ஒழிப்போம் என்று ஆரம்பித்து,

கொழும்புவில் வாழும் தமிழ் மக்களை சோதனை என்ற பெயரில் கஷ்டத்துக்குள்ளாக்குகிறது.



எல்லாவற்றையும்விட, பெரிய உண்மை என்னவென்றால்...



இராணுவம் - சிங்கள மக்களுக்கும் எதிராக செயல்படுகின்றது.



அதுதான் சர்வாதிகாரத்தின் சிறப்பு.



முதலில் ஆட்டை கடிக்கும்; அப்புறம் மாட்டை கடிக்கும்;

அப்புறம் மனிதனை கடித்துவிடும். மனிதன் என்றால்

தமிழ், சிங்களம் என்று பிரிவினையில்லாமல்,

அனைத்துதரப்பு மனிதனையும் கடித்துவிடும்.



இப்பவே, இராணுவத்தின் அடக்குமுறையினால்,

பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டு இருக்கிறது, இலங்கையில்.



பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்படுவது

சிங்கள மக்களுக்கு, இலங்கை இராணுவம் கொடுக்கும் முதல் அடி.



ஆக, சிங்களம், தமிழ் என்று கூறுபோட்டு பார்க்காமல்,

பொறுப்புள்ள இலங்கை தலைவர்கள், தங்கள் கடமையை உணர்ந்து,

விரைவில் செயலாற்ற வேண்டும்.



செயலாற்ற தவறினால், பர்மாவை பாருங்கள்.

அரசியல் தலைவர்கள், வருடக்கணக்கில் வீட்டுச் சிறையில் வாடுகிறார்கள்.



இப்ப, இந்தியாவுக்கு, இலங்கை இராணுவ வளர்ச்சியினால்

ஏற்படக்கூடிய ஆபத்து என்னவென்று பார்ப்போம்.



இலங்கை இராணுவ வீரர்கள், இதுநாள்வரை வடக்கு பகுதிக்கு வந்ததே இல்லை.

இதுதான் அவர்களது முதல் பயணம். இன்றைக்கு, அவர்கள், பூநகரியை கைப்பற்றி விட்டோம்; சின்ன பரந்தனை பிடித்து விட்டோம் என்று முன்னேறி வருகிறார்கள்.



அந்த இளம் இராணுவ வீரர்களுக்கு இலங்கையின் எல்லை எதுவென்று தெரியாது.

ஆக, ஆர்வக் கோளாறினால், கப்பலை கொஞ்சம் வேகமாக ஓட்டிவந்து,

பிடித்து விட்டோம், இராமேஸ்வரத்தை,” அல்லது "கைப்பற்றி விட்டோம், தூத்துக்குடியை" என்று ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்கள். எச்சரிக்கை.



சில வருடங்களுக்கு முன்னால், இலங்கை கிரிக்கெட் டீம், உலகத்துக்கு தெரியாது.

இலங்கை கிரிக்கெட் டீம் வலிமை அடைந்தது; நம்மை தோற்கடித்தது.



அதுபோல், இதுநாள்வரை, இலங்கை இராணுவம் வலிமையிழந்து இருந்தது.

இன்றைக்கு, பல தேசத்து இராணுவ தளபதிகள் அளிக்கும் பயிற்சியினால்,

இலங்கை இராணுவம் வலிமை அடைந்து வருகிறது.



இன்னைக்கு வேண்டுமானால், ராஜபக்சே, மன்மோகன் சிங்கோடு நட்போடு பழகலாம். ஆனால், மன்மோகன் சிங், இந்தியாவின் நிரந்தர பிரதமராக இருக்கப்போவதில்லை. அதுபோல், ராஜபக்சே, இலங்கையின் நிரந்தர அதிபராக இருக்கப் போவதில்லை. ஆனால், இலங்கை இராணுவம், மேலும் மேலும் வலிமை பெற்று, நிரந்தரமாக வாய்ப்புகள் அதிகம்.



வலிமையான இராணுவம் - சும்மா இருக்காது.



ஆக, இராணுவத்தினால், புலிகள் மட்டும் ஒழிக்கபடபோவதில்லை.

மனித சமுதாயமே அழியும் ஆபத்தை உணருங்கள், before its too late.

Year 2007 Articles...       Year 2005 Articles...       Year 2004 Articles...
 
Reproduction or translation into any language, in whole or in part, in any form or medium without express written permission
from us is prohibited. contact S. Balachandran [balachandran@muthamil.com]
All rights reserved. © 2007 Muthamil.com