சென்ற
புத்தாண்டு
கொண்டாட்டங்கள்போது,
சவேராவில்
நடந்த விபத்து.
மீண்டும்
நடந்துவிடக்கூடாது
என்ற முன்னெச்சரிக்கையினால்,
சொல்லும்
விசயம்.
பாதுகாப்புவின்
அவசியத்தை
மக்கள் உணரவேண்டும்.
வியாபார
நிர்வாகங்களும்,
பாதுகாப்பின்
அவசியத்தை
உணரவேண்டும்.
அரசு
நிர்வாகிகளும்,
பாதுகாப்பின்
முக்கியத்துவத்தை
உணர்ந்து,
மற்றவர்களுக்கும்
உணரவைக்க வேண்டும்.
வாழ்க்கையென்றால்,
விபத்துக்கள்
ஏற்பட வாய்ப்பு
உண்டு.
விபத்துக்கள்
ஏற்படும்போது,
அதிலிருந்து
எப்படி மீண்டுவருவது
என்ற அறிவு,
நாம்
மக்களுக்கு
அளிப்பதில்லை.
விபத்திலிருந்து
மீண்டுவருவதற்கு,,
மக்களை
தயார்படுத்துவதில்லை.
நமது
அரசாங்கமும்,
விபத்திலிருந்து
மீட்பதற்கு,
தயார்
நிலையில்
இருப்பதில்லை.
ஒவ்வொரு
CRISIS நம்மை,
நாம்
நடத்தும் அரசாங்கத்தை
சோதித்து
பார்க்கின்றது.
ஒவ்வொரு
CRISIS லேயும்,
நாம்
உயிர்களை
இழக்கின்றோம்;
அல்லது
பொருட்களை
இழக்கின்றோம்.
எந்தவித
CRISIS யையும்
எதிர்கொள்ளும்
தைரியத்தையும்,
அந்த
விபத்திலிருந்து
மீண்டுவருகின்ற
திறமையையும்,
ஆற்றலையும்
மக்களுக்கு
பயிற்சிமூலம்
அளிக்க வேண்டும்.
நாம்
நடாத்தும்
அரசாங்கமும்,
எந்தவித
CRISIS யையும்
எதிர்கொண்டு,
சமாளிக்கும்
திறமையையும்,
ஆற்றலும்
உள்ள இயக்கமாக
உருவாக்க வேண்டும்.
வாழ்க்கையென்றால்,
பிரச்சனைகள்
நிச்சயம் உண்டு.
பிரச்சனையே
வாராது என்று
நாம் மெத்தனமாக
இருப்பது சரியான
செயல் அல்ல.
முன்னெச்சரிக்கையாக
இருந்திருந்தால்,
சென்ற
ஆண்டு,
இந்த
விபத்தை
தவிர்த்திருந்திருக்கலாம்.
சரி,
முன்னெச்சரிக்கையாக
இல்லை;
விபத்து
நடந்து விட்டது.
அதிலிருந்து
பாதுகாப்பாக
எல்லோராலும்
வெளிவருவது
அவ்வளவு கடினமான
விசயமா.
இதென்ன,
அட்லாண்டிக்
கடலில்,
பனிப்பாறை
இடித்து,
டைட்டானிக்
கப்பலா மூழ்கிக்கொண்டு
இருக்கு.
இப்படி
நீச்சல் குளத்தில்
விழுந்து,
மனித
உயிர்கள் இழப்பு
என்பது நம்பவே
முடியாத விசயம்.
ஆனால்,
உயிரிழப்புகள்
ஏற்பட்டது
உண்மை.
ஆக,
யாருமே
பிரச்சனையை
எதிர்கொள்ள
தயார் நிலையில்
இல்லை.
மக்கள்
இல்லை;
சவேரா
ஹோட்டல் நிர்வாகம்
தயார் நிலையில்
இல்லை.
நகர
அரசு நிர்வாகம்
தயார் நிலையில்
இல்லை.
சமீபகாலத்தில்,
அமெரிக்காவில்,
குழந்தைகளின்
பரத நாட்டிய
நிகழ்ச்சி
நடந்தது.
அந்த
நிகழ்ச்சி
ஆரம்பமாகும்
முன்பு,
அறிவிப்பு
செய்கிறார்கள்.
வலதுபக்கம்
இரண்டு எமெர்ஜன்சி
கதவு இருக்கின்றது.
அதுபோல
இடதுபக்கம்
இரண்டு எமெர்ஜன்சி
கதவு இருக்கின்றது.
எந்தவித
விபத்து ஏற்பட
நேரிட்டால்,
பதற்றமில்லாமல்,
மெதுவாக,
இந்த
எமெர்ஜன்சி
கதவுகளின்வழியாக
வெளியேறி விடுங்கள்
என்று மக்களை
தயார் படுத்துகிறார்கள்.
பரத
நாட்டிய நிகழ்ச்சி
ஆரம்பமாகி
விட்டது.
கொஞ்ச
நேரம் கழித்து,
அந்த
கூடத்தில்
பணிபுரியும்
ஊழியர் ஒருவர்
மேடைக்குவந்து,
“I am afraid, I need to cancel this program and ask you all to
vacate this auditorium immediately.” என்றார்.
உடனே
விழாவுக்கு
ஏற்பாடு செய்திருந்தவர்கள்,
அவரை
அணுகி,
என்ன
விசயம் என்று
கேட்டார்கள்.
நம்மை
பொறுத்தவரைக்கும்
அது சாதாரண
விசயம்.
பொதுவாக
நம்ம மக்கள்
விழாவுக்கு
தாமதமாக வரும்
பழக்கம்.
தாமதமாக
வந்ததால்,
இருக்கைகளைதேடி
அமராமல்,
இரண்டு
பக்கமும் உள்ள
நடைபாதையில்
நின்று கொண்டு
இருந்தார்கள்.
அவ்வாறு
நடைபாதையை
மறித்து நின்று
கொண்டு இருந்தால்,
விபத்து
ஒன்று ஏற்பட்டால்,
மக்கள்
எமெர்ஜன்சி
வழியை அடையமுடியாது
என்ற உண்மையை
உணர்ந்து,
அந்த
ஊழியர்,
நிகழ்ச்சியை
ரத்து செய்யும்
முடிவை எடுத்து,
அந்த
முடிவை செயல்படுத்த
ஆரம்பித்து
விட்டார்.
அதுதாங்க
பொறுப்பு;
சிறப்பான
மேலாண்மை;
மேன்மையான
நிர்வாகம்.
புயல்
வருமுன் காப்பவன்
தான் -
அறிவாளி;
வந்தபின்
தவிப்பவன்
ஏமாளி.
இத்தனைக்கும்
அந்த ஊழியர்,
உயர்
பதவியில் இருக்கும்
அதிகாரி இல்லை.
அன்றைக்கு
வேலையில் இருந்தவர்,
பள்ளிக்கூடத்தில்,
பன்னிரெண்டாவது
வகுப்பு படிக்கும்
ஒரு இளம்பெண்.
இந்த
வேலை, ஒரு
வாலிண்டர் வேலை.
பள்ளியில்
படிக்கும் இளைய
சமுதாயம்,
இந்த
மாதிரி வாலிண்டர்
வேலை செய்யும்போது,
அவர்களுக்கு
"கிரிடிட்
மார்க்"
கிடைக்கும்.
அது
உயர் கல்விக்கு
உதவும்.
இந்த
வாலிண்டர்
வேலைக்கு கூலி
கிடையாது.
அப்படியிருந்தும்,
அவ்வளவு
சிறப்பாக
செயலாற்றுகின்றார்கள்.
இளைய
சமுதாயத்க்கு,
இளம்
வயதினிலேயே,
பொறுப்புணர்வை
வளர்க்கிறார்கள்.
அந்த
இளைய சமுதாயம்,
பொறுப்புள்ள
குடிமக்களாக
உருவாகிறார்கள்.
இதெல்லாம்
அரசு நிர்வாகிகளின்
பொறுப்பின்மையைத்தான்
காட்டுகிறது.
அரசியல்வாதிகளை
இனி ஒரு குறையும்
சொல்ல முடியாது.
அந்த
அளவுக்கு,
பட்டை
தீட்டப்பட்ட
வைரங்களாக
ஜொலிக்கின்றார்கள்.
நெருப்பில்
சுடப்பட்ட
தங்கம்,
கழிவுகள்
நீங்கி,
சொக்கத்தங்கமாக
திகழ்கிறார்கள்.
ஆக,
இனி
- அரசு
நிர்வாகிகள்.
அரசு
நிர்வாகத்தையும்
மாற்றி அமைக்க
வேண்டும்.
அதே
சமயத்தில்,
அரசு
நிர்வாகிகளின்
பொறுப்பை உணர்த்தி,
சிறப்பாக
செயல்பட வைக்க
வேண்டும்.
தனியார்
நிர்வாகத்தில்
இல்லாத ஒரு
சிறப்பு,
அரசு
நிர்வாகத்தில்
உண்டு.
தனியார்
நிர்வாகத்தில்
- அதிக
சம்பளம்,
போனஸ்
எல்லாம் உண்டு.
அரசு
நிர்வாகத்தில்,
சம்பளத்தை
தவிர,
இலஞ்சம்
உண்டு என்று
தவறாக சொல்வதாக
நினைத்துக்
கொள்ள வேண்டாம்.
அது
இல்லை;
தனியார்
நிர்வாகத்தில்
இல்லாத ஒன்று
அரசு நிர்வாகிகளுக்கு
உண்டு.
அது
என்னவென்றால்,
சமுதாயத்தில்
தனி அந்தஸ்து;
மதிப்பு;
மரியாதை.
அதுவும்
ஒரு நேர்மையான
நிர்வாகி என்று
மக்கள் மனதில்
இடம் பிடித்துவிட்டால்,
அந்த
நிர்வாகிக்கு,
தனி
அந்தஸ்து,
மதிப்பு,
மரியாதை
உண்டு.
உதாரணத்துக்கு,
நம்ம
நரேஷ் குப்தா.
ஆக,
பணம்
சம்பாதிக்கணும்
என்ற நோக்கம்
இருந்தால்,
தனியார்
நிறுவனத்துக்குபோய்
வேலை செய்யுங்க.
மக்கள்
மனதில் இடம்
பிடிக்க ஆசை
என்றால்,
சிறப்பாக
செயலாற்றுங்கள்.
மக்களின்
ஆதரவு உண்டு,
உங்களுக்கு.