˱, 21, 2008
͙ .
ב ב!
, ҙ!!
э,
㴱 ͎.
Ƒ, ґ
ð Ѱ ϙ.
ϴ.
Ѱ , Ƒ, ґ
Ƒ ڙ ב.
, ׯ.
, ґ, ґ
ݍ Ѱ ϙ.
ґ, ґ,
ր.
. . ל .
״ .
உடுமலை : உடுமலை அருகே சாமராயப்பட்டி யிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், முதல்வர் மற்றும் துறை அமைச்சர்களுக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. கோவை மாவட்டம், உடுமலை அருகே சாமராயப்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 217 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் நேற்று, முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஐந்து துறை அமைச்சர்களுக்கான தேர்தல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்., 3ம் தேதி நடந்தது. வேட்பாளர்கள் ஐந்து ரூபாய் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதியாக ஒன்பது வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். பரபரப்பான ஓட்டுப்பதிவு, நேற்று காலை 9.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடந்தது.
ஓட்டுப் பதிவுக்கு, வழக்கமான நடைமுறை பின்பற்றப்பட்டது. "குட்டி வாக்காளர்கள்' தங்கள் அடையாள அட்டையைக் காட்டி பிஞ்சு விரலில் அடையாள மை வைத்துக் கொண்டனர். ஓட்டுப்பதிவு அதிகாரிகள், கையெழுத்து பெற்றுக் கொண்டு ஓட்டுச் சீட்டுகளை வழங்கினர். மாணவர்கள், மறைவான பகுதிக்குச் சென்று, விருப்பமான வேட்பாளர்களுக்கு ஓட்டளித்தனர்.
வழக்கத்துக்கு மாறாக, இந்த ஓட்டுப் பதிவுக்கு போலீசார் பாதுகாப்பில் ஈடுபடவில்லை. மாணவர்களே தேர்தல் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். வேட்பாளர்கள் ஒன்பது பேர் களத்தில் இருந்தபோதும், எந்த சலசலப்பும் ஏற்படவில்லை. ஓட்டுப்பதிவு பகல் 12.30 மணிக்கு முடிந்தது. இத்தேர்தலில், 185 வாக்காளர்கள் ஓட்டளித்தனர்; 85 சதவீதம் ஓட்டுப்பதிவு ஆனது. மாலையில், பலத்த மாணவர் பாதுகாப்புக்கு இடையே ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. ஓட்டு எண்ணிக்கையில் ஆறு அலுவலர்கள் ஈடுபட்டனர். மிகுந்த பரபரப்புக்கு இடையே தேர்தல் முடிவை, "தலைமைத் தேர்தல் அதிகாரி' வெளியிட்டார்.
சாவி சின்னத்தில் போட்டியிட்ட எட்டாம் வகுப்பு மாணவி விஜயசாந்தி "முதல்வர்' ஆகவும், மாணவர் சங்கத் தலைவராகவும், பந்து சின்னத்தில் போட்டியிட்ட ஏழாம் வகுப்பு மாணவி புவனேஸ்வரி "துணை முதல்வர்' ஆகவும் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் கரகோஷம் எழுப்பினர்.
இந்த தேர்தல் குறித்து பள்ளி தலைமையாசிரியர் பஹிமுன்னிசா கூறியதாவது: பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய கடமைகளையும் நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும் மாணவர்கள் தெரிந்துகொள்ள, முதல்கட்டமாக, மாணவர் சங்க தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்வர், துணை முதல்வர், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட ஐந்து துறை அமைச்சர்கள் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. மாணவர் சங்க தேர்தல் நடந்த பின், "முதல்வர்' உட்பட "அமைச்சர்கள்' பதவியேற்பர். இவ்வாறு தேர்தல் நடத்துவதால், மாணவர்களுக்கு ஜனநாயகக் கடமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும். பள்ளியின் வழக்கமான பணிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் ஈடுபடுவர். மாணவர் பிரதிநிதிகள் கண்காணிப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்வர். இவ்வாறு பள்ளி தலைமையாசிரியர் கூறினார்.
"அமைச்சர்களுக்கு' இலாகா ஒதுக்கீடு : சாமராயப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த தேர்தலில் வென்ற மாணவர்களுக்கு இலாகாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்தந்த துறைகளில் மாணவர் பிரதிநிதிகள் கவனம் செலுத்துவர்.
"சுகாதாரத் துறை அமைச்சர்' பள்ளியின் தூய்மை, கழிப்பிட சுத்தம் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார். "பாதுகாப்புத் துறை அமைச்சர்' பள்ளியின் உபகரணங்கள் பாதுகாப்பையும், பள்ளி முடியும் நேரத்தில் கதவுகள் பூட்டப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிப்பார்.
"சத்துணவுத் துறை அமைச்சர்' தினந்தோறும் சத்துணவின் தரம், முட்டை, காய்கறி ஆகியவற்றின் அளவுகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்வார். "உள்துறை அமைச்சர்' பள்ளி நேர பணிகளைக் கண்காணித்தல், மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லுதல் போன்ற பணிகளைக் கண்காணிப்பார்.
வாரந்தோறும், "அமைச்சரவை' கூட்டப்பட்டு ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்படும். அமைச்சரவையில் எதிர்ப்பு அதிகரித்தால், "அமைச்சர்கள்' ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.
|