War is Over in Sri Lanka
  • Slaves of Sri Lanka April 27, 2009

    மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி.

    இந்த மாதிரி ஒரு மனிதன், இந்த பூமியில் நடமாடி இருந்திருக்கின்றான் என்றால், நம்பவே முடியவில்லை. அதைத்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் சொன்னார்.

    அதுவும், மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, இந்தியாவில் பிறந்து, உண்மைக்காவே வாழ்ந்து இருக்கின்றார் என்றால் யாராலேயும் நம்ப முடியாது.

    டயனோசர் வாழ்ந்த பூமி என்றால் நம்மால் நம்ப முடியவில்லையோ, அதேபோல், மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி வாழ்ந்த பூமி, இதுவென்றால், நம்பவே முடியவில்லை.

    அந்தக்கால மனிதர்கள் அனைவருமே சொக்கத்தங்கங்கள். ஆக, அந்தக்காலத்தில் மோகந்தாஸ் கரம்சந்த் காந்திபோல் மனிதர்கள் வாழ்வது ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்று நினைத்து விடாதீர்கள்.

    அது தவறான கருத்தாகும். காந்தியுடன் வாழ்ந்த ஜின்னா, நேரு என்று தங்களது சுயநலத்தை முன்னிறுத்திதான் மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.

    பதவி வேண்டாம். கட்சி வேண்டாம். மக்களின் நலமே தன்னோட சிந்தனை, செயல் என்று வாழ்ந்து இருந்திருக்கின்றார் காந்தி.

    இன்னைக்கு இவ்வளவு கொடுமைகள், சிலோனில் நடப்பதைக் கண்டு, நிச்சயம் காந்தி சும்மா இருந்திருக்க மாட்டார். நிச்சயம் உண்ணா விரதம் இருந்திருப்பார்.

    காந்தி உண்ணாவிரதம் என்றால், அது குறைந்தது மூன்று வாரங்கள் நீடித்திருக்கின்றது.

    காந்தி உண்ணாவிரதம் இருந்தால், ஓம் பூரி மாதிரி ஒரு முரட்டுத்தனமான இந்து ஒருத்தன் வருவான். சப்பாத்தி ரொட்டியை, காந்தியின்மீது தூக்கி எறிவான். “காவ்வோ, காவ்வோ,” ரொட்டியை தின்னுத்தொலை என்று உரிமையோடு, அன்பின் மிகுதியால் காந்தியைத் திட்டுவான்.

    நாம நம்ம வீட்டுப் பிள்ளைகள் பிடிவாதம் பிடிக்கின்றது என்று நினைக்கின்றோம். ஆனால், காந்தி படு பிடிவாதக்காரர்.

    ஓம் பூரியைப் பார்த்து புன்னகை செய்துவிட்டு, “உன்னோட முஸ்லீம் சகோதரன் எங்கே?” என்று கேட்ப்பார். அப்ப அங்கே நஸ்ரூதின் ஷா முஸ்லீமாக அருகில் இருப்பார். ஓம் பூரி, நஸ்ரூதின் ஷாவைக் கட்டிப் பிடிப்பார். காந்தி எழுந்து உட்காருவார். விரதம் முடியும்.



    காந்தியின் செயல், மனிதனின் மனதில் மாற்றத்தை ஏற்ப்படுத்தும்.

    அதுதான் அவரது சக்தி.

    அது எந்தவொரு கொடுங்கோளான, இறுகிய கல் மனதாக இருந்தாலும், காந்தியின் செயல், அந்த கல் மனதுக்குள் புகுந்து, இளக்கி விடும். கல் மனது, குழந்தை மனதாகிவிடும்.

    இன்றைய காலக்கட்டத்தில், காந்தி வாழ்ந்திருந்தால், நிச்சயம் உண்ணாவிரதம் இருந்திருப்பார். இப்படி கடைசி நேரத்தில் உண்ணாவிரதம் இருந்திருக்க மாட்டார். பல ஆண்டுகளுக்கு முன்னமே காந்தி இருந்திருப்பார், உண்ணாவிரதம்.

    காந்தியைப் பொருத்தவரை, அவரு குஜராத்தி, பிரபாகரன் தமிழ், மஹிந்தா சிங்களம் என்றெல்லாம் கிடையாது.

    காந்திக்கு, அனைவரும் மனிதர்கள்.

    காந்திக்கு தெரியும், இதெல்லாம் இரண்டு நாள் உண்ணாவிரதத்தில் முடியக்கூடிய காரியம் இல்லை என்று. மேலும் காந்தி உண்ணாவிரதம் என்றால், அங்கேயே, கிளிநொச்சி அல்லது வவுனியாவுக்கே சென்று, அங்கேதான் உண்ணாவிரதம் இருப்பார்.

    ஒரு வாரம், யாரும் கண்டுக்க மாட்டாங்க.

    பல வாரங்கள் கழித்து, பிரபாகரன், காந்தியிடம் வந்து, அவரது காலடியில் துப்பாக்கியை வைப்பார். அதற்கு பின், சில வாரங்கள் கழித்து, மஹிந்தா ராஜபக்சே துப்பாக்கியை கீழே போடுவார். இலங்கையில் அனைத்து மக்களுக்கும் சம உரிமை கிடைத்துவிடும்.

    ஆக, காந்தியின் உண்ணாவிரத முடிவில், மக்கள் அனைவரும் தங்களது வீட்டுக்குச் சென்று விடுவார்கள். இப்ப மாதிரி, இராணுவ முகாம்களுக்கு செல்ல மாட்டார்கள்.

    இலங்கை அரசாங்கம், பிரபாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடும், காந்தியின் உண்ணாவிரத முடிவில். மேலும், இந்தியாவும், பிரபாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கிவிடும்.

    இன்றைய காலகட்டத்தில்கூட பாருங்க. நாம நினைத்தால் இன்னைக்கே போரை நிறுத்தலாம்.

    இந்தியா, பிரபாகரனுக்கு பொது மன்னிப்பு.

    அவ்வளவுதான். போர் முடிந்துவிடும்.

    இந்தியா பிரபாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கி, இந்திய இராணுவ ஹெலிகாப்டரில் பிரபாகரனை இந்தியாவுக்கு அழைத்துவந்து, மருத்துவமணையில் தங்கவைத்து, பிறகு நல்ல புத்திமதி சொல்லி, துப்பாக்கியை வேண்டாம் என்று எடுத்துச் சொல்லி, அரசியல் வழியில் செல்லும்படி சொல்லலாம். முடியும். முடியக்கூடிய காரியம்தான்.

    ஆனால், நமது மனது கல்லாகி கிடக்கின்றது.

    ஆக, ராஜபக்சே மட்டும் போரை நடத்தவில்லை. நாமலும்தான் சேர்ந்து போரை நடத்துகின்றோம்.

    காந்தியை நினைவுகூற ஒரு வாய்ப்பு கிடைத்தது. நன்றி.