Bill Clinton saved two lives.
  • Bill Clinton saved two lives

    Recently, President Bill Clinton went to North Korea and safely brought back those two lives.

    Just for two lives, they took so much effort, action and at the end, they did achieve the result too. That is Effective Leadership.

    நம்ம ஊரிலே இருக்கும் தலைவர்கள், நெறைய பேச்சு பேசுவார்கள். பக்கமாக கதை, கவிதை எழுதுவார்கள். ஊர்வலம் போவார்கள். மனிதச் சங்கலி அமைத்து போராடுவார்கள். உண்ணாவிரதம் இருப்பார்கள். ஆனால், இறுதியில் எந்தவித பலனும் இருக்காது.

    கிளிண்டன், இரண்டு உயிர்களைக் காப்பாற்றி விட்டார். நாம், பல ஆயிரம் உயிர்களை, சாகக்கொடுத்துவிட்டு இருக்கின்றோம்.

    இன்றைய காலக்கட்டத்தில், கொடுங்கோல் மன்னன் ஒருவன் இருக்கின்றான் என்றால், அவன் வடகொரிய நாட்டு அதிபர்தான். அவரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இலங்கை அதிபர், மஹிந்தா ராஜபக்சே, புத்தருக்கு சமம்.

    வடகொரியா நாட்டு இராணுவத்தோடு, இலங்கையின் இராணுவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இலங்கை இராணுவம் - சுண்டைக்காய்.

    ஆனால், நம்மலாலே ஒண்ணும் முடியவில்லை. கிளிண்டன் சிறப்பாக முடித்து விட்டார்.

    வடகொரிய நாட்டு அதிபர், சாதரணமான ஆள் இல்லை. கிளிண்டனை பணயகைதியாக பிடித்து வைத்துக்கொள்ளக் கூடியவர். உண்மையிலேயே, கிளிண்டன், தன் உயிரை பணயம் வைத்துத்தான், வடகொரியாபோய்விட்டு, பத்திரமாக திரும்பியிருக்கின்றார். அதுவும் வெறும் கையோடு திரும்பவில்லை. காரியத்தை சிறப்பாகவே முடித்து, இரண்டு உயிர்களை மீட்டு வந்திருக்கின்றார்.

    அதெல்லாம்விட, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை. போறதுக்கு முன்னாடியும், யாருக்கும் தெரியாது. போய்விட்டு, இரண்டு உயிர்களை மீட்டுவந்தபிறகும்கூட, விளம்பரம், ஆர்ப்பாட்டம் எதுவும்மில்லை. இனம், மொழி, மதம், நாடு, குடிமக்கள் என்று எதுவும் சொல்லாமல், மனித குலத்துக்கு, தான் ஆற்றிய சேவை என்றே எண்ணுகிறார்.