Effective City Government - இன்றைய தேவை.
  • Neel Metal Fanalca

    இந்தியா மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறது. அனைத்து மக்களுமே கடின உழைப்பு உழைக்கின்றார்கள். முன்னேற வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றது. செல்வம் செழித்துக் கிடக்கின்றது.

    வீடுகளில், செல்வச் செழிப்பை காண முடிகிறது. வீடுகளில், அனைத்து வசதிகளும், நவீன உபகரணங்களும் நிறைந்து இருக்கின்றது. இந்தியாவில், இந்த காலக்கட்டத்தில், ஏழை என்பவர் - செல்வம் குறைவாக உள்ளவர் என்றே அர்த்தம்; செல்வம் இல்லாதவர் என்று பொருள் அல்ல. ஆக, வீடுகளில், தேனும், பாலும் ஓடத்தான் செய்கிறது.

    வீட்டைவிட்டு வீதிக்குவரும்போது, நாம் வசிக்கும் தெரு - குண்டும் குழியுமாக இருக்கின்றது. தெருக்கோடியில், குப்பைத்தொட்டி நிரம்பி வழிந்து, துர்நாற்றம் வீசுகிறது. நாம் வசிக்கும் வீதிகளில், போக்குவரத்து சீர்கெட்டு கிடக்கிறது.

    ஒருவழியாக, காரிலோ, ஆட்டோவிலோ ஏறி, ஷாப்பிங் செண்டர், திரையரங்குகள் என்று சென்றுவிட்டால், ஏதோ மேலை நாடுகளில் இருப்பதுபோல் தோன்றுகிறது.

    அந்த டைடல் பார்க் அருகில், அசெண்டாஸ் என்ற கட்டிடம் இருக்கிறது. அங்கு சென்று பார்த்தால், அமெரிக்காவில் இருப்பதுபோன்ற உணர்வே வந்துவிடுகிறது. உலகத்தரம் வாய்ந்த கட்டிடங்கள்; சுத்தமாகவும், சுகாதாரமான சுற்றுப்புற சூழல்கள்.

    அதேபோல், எப்படியாவது நகரத்துக்கு வெளியே போய்விட்டால் போதும். ரோடு, சும்மா ஜாம்முன்னு பாரின்மாதிரியே இருக்கு.

    திருமங்கலம் ஊருக்குள்ளே தெரு மோசமாக இருக்கு. எப்படியாவது ஹைவேஸ்க்கு போய்விட்டால் போதும். அப்புறம் சூப்பர் ரோடு.

    தமிழ் சினிமாவில், கதை சென்னை, மதுரை என்றே போய்க்கிட்டு இருக்கும். பாட்டுக் காட்சிகள் மட்டும், நம்மை வெளிநாடுகளில் அழைத்து செல்வதுபோல் இருக்கும்.

    அதுபோல், நம்ம வீடு நல்லாயிருக்கு; நம்ம தெரு, நம்ம தெருவில் போக்குவரத்து, நம்ம தெரு குப்பை; குப்பைத்தொட்டி அருகில் உள்ள இடம் - எல்லாம் மோசமாக இருக்கு. நெடுஞ்சாலை, இரயில் - அதெல்லாம் சிறப்பாக இருக்கின்றது.

    இதே நிலைதான், இந்தியாவில் எந்த மாநிலத்துக்கு போனாலும்.

    அடையாறு சிக்னலைஒட்டி, ஒரு குப்பைத்தொட்டி இருக்கு பாருங்க. அந்தவழியாக நடந்து போகின்றவர்கள், வாகனங்களில் போகின்றவர்கள் - ரொம்ப கஷ்டம்.

    அதே சமயத்தில், அடையாறு வழியாக, மாமல்லபுரத்துக்கு ஒரு பஸ் போகின்றது. அந்த பஸ்ஸில் ஏறி அமர்ந்து பயணம் செய்தால், அவ்வளவு சொகுசாக இருக்கும். சூப்பர் டீலக்ஸ் வால்வோ பஸ், குளிர்பதனம் வசதியோடு, குறைந்த செலவில், அருமையான கடற்கரையை ரசித்துக் கொண்டே பயணம் செய்யலாம்.

    புது டில்லியில், இரயில் நிலையத்தை ஒட்டியுள்ள இடம், பஹர்கன்ச். மிகவும் சீர்கெட்டு இருக்கின்றது. கொஞ்சம் கஷ்டப்பட்டு, அந்த இடத்தை தாண்டிவந்துவிட்டால், மெட்ரோ, சூப்பரான மேம்பாலங்கள் என்று முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றது.

    இராஜஸ்தான் முழுவதும், சூப்பர் ஹைவேஸ். ஆனால், ஜெய்ப்பூர் நகரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது.

    நெடுஞ்சாலை - மத்திய அரசாங்கம். சிறப்பாகச் செயலாற்றுகிறது.

    மாநில அரசாங்கம் - எல்லா பொறுப்புகளையும், தன் கையில் வைத்துக் கொண்டு திணறுகிறது. தமிழக துணை முதல்வர் - சென்னை மாநகர மேயர்போல் செயல்படுகிறார். அடையாறில் பூங்கா, 2010இல் திறக்கப்படும் என்று, சென்னை மேயர் சொல்ல வேண்டும். தமிழக் துணை முதல்வர் சொல்வது சரியல்ல; அருகில் சென்னை மேயர், சும்மா நின்று கொண்டு இருக்கின்றார்.

    நகர அரசாங்கத்துக்கு பொறுப்பு, அதிகாரம் அளிக்க வேண்டும். சென்னை மேயர் அறிவிக்க வேண்டும் - 2010இல், அடையாறு பூங்கா திறக்கப்படும் என்று. அப்படி செய்தால், அங்கங்கு வழிந்தொழும் குப்பைக்கும், தீர்வுகாண முயல்வார் மேயர்.

    இப்ப இருக்கும் நிலை எப்படியென்றால், சென்னை மாநகரத்தில், நிறைவான விசயம் இருக்கா; அந்த நிறைவுக்கான நல்ல பெயர், தனக்கு என்று துணை முதல்வர் பறித்துச் சென்று விடுகிறார்.

    சென்னை மாநகரத்தில், குறைவான விசயம் இருக்கா; அந்த குறைவுக்கான பழிச்சொல், மேயருக்கு. சென்னைவாசிகள் பலருக்கு, மேயர் - பெயரைக்கூட தெரியாது.

    இப்படி நிலைமை இருந்தால் - எந்த மேயர் சிறப்பான சேவை செய்வார்.

    நகர அரசாங்கத்துக்கு, பொறுப்பு, அதிகாரம் கொடுத்துவிட வேண்டும். நல்லபெயரும் மேயருக்கே சென்றடைய வேண்டும். பழிச்சொல்லும் மேயருக்கே என்று இருக்க வேண்டும்.

    சிறப்பான நகர அரசாங்கம் இல்லாத ஒன்றே - இந்தியாவின் இன்றைய குறை.

    அந்த குறையை நிவர்த்தி செய்துவிட்டால், இந்தியா வளர்ந்த நாடாகவே மாறிவிடும்.