மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறது, இந்தியா.
  • Developing India

    இந்தியா. அன்னை இந்தியா.

    மிகமிகச் சிறப்பாக முன்னேறி வருகின்றது.

    அனைவருக்கும் பாராட்டுக்கள். அனைவரையும், முதுகில் தட்டிப் பாராட்டுகின்றேன்.

    மக்கள் அனைவரும் கடின உழைப்பு உழைத்து முன்னேறுகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் மிகச்சிறப்பாக செயலாற்றி வருகின்றன. அரசியல் மூலம், பொது வாழ்வில் ஈடுபட்டு, மக்களுக்கு சேவை செய்யும் அனைத்து அரசியல்வாதிகளும் பாராட்டுக்கு உரியவர்களே.

    அரசாங்க அதிகாரிகள். அதிகாரிகள் அல்ல; நிர்வாகிகள். சிவில் சர்வீஸ் புரியும் அனைத்து அரசாங்க நிர்வாகிகளும் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர். பாராட்டுக்கள்.

    சிறுகுழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், பள்ளி, கல்லூரி மாணவமணிகள், இளைய தலைமுறையினர், பெரியோர்கள் - அனைவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்.

    இந்தியாவின் வளர்ச்சி, பெருமைப்பட வைக்கின்றது. இது சாதரண வளர்ச்சி அல்ல; மாபெரும் வளர்ச்சி. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள், கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குமேல் எடுத்துக் கொண்டன, இந்த வளர்ச்சியை அடைய.

    கடந்த சில ஆண்டுகளில், மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது, இந்தியா. அற்புதமான வளர்ச்சி.

    தெற்கில் தமிழ்நாட்டிலிருந்து, வடக்கே டில்லிவரை - அனைத்து இடங்களிலும், வளர்ச்சி சிறப்பானதாகவே தெரிகிறது.

    என்னங்க, ரொம்பத்தான் பெருமைப்பட்டுகிறீங்க. குறைகளே இல்லையா;

    குறைகள் - குறைகளாக தெரியவில்லை.

    குறைகள், மேலும் வளர்ச்சிக்கான வாய்புகளாகவே தெரிகின்றன.

    அநேகமாக, அப்துல் கலாம்பாயின் கனவு, வெகு விரைவில் நிறைவேறும்.

    பாதிக்குமேல், ஏற்கனவே நிறைவேறி விட்டது.

    அன்னை இந்தியா, மிகச் சரியான திசையில், மிகச் சரியான வேகத்தில், தன்னோட பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், நாகரீகத்தையும், கலாசாரத்தையும் இழக்காமல், பொருளாதாரத்திலும், அறிவியலிலும், மற்றும் எல்லா துறைகளிலும், மிகச் சிறப்பாகவே முன்னேறி வருகின்றது.

    முன்னேற்றத்தை கண்கூடாக காண முடிகின்றது.

    குறைகள், குறைகளாகத் தெரியவில்லை. வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக திகழ்கின்றன.

    மீண்டும் ஒருமுறை, அனைவரையும், முதுகில் தட்டிக் கொடுத்து, பாராட்டுகின்றேன்.

    தொடரட்டும், இந்தியாவின் வளர்ச்சி.