அந்தக்காலத்தில், பள்ளிக்கூடங்களில், மாணவர்களிடம், வாத்தியார்கள் சொல்வார்கள். பூமியில், ஐந்து கண்டங்கள் இருக்கின்றது. அவைகள், ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என்று.
உடனே, மாணவர்கள் கேள்வி கேட்பார்கள். ஐயா, சந்திரனில், மற்ற கிரகங்களில் எல்லாம் கண்டங்கள் இருக்காவென்று. மாணவர்கள் கேள்விகேட்கும்போதுதான், ஆசிரியர்களுக்கு ஞானம் பிறக்கின்றது. மாணவர்கள் கேள்வி கேட்பார்கள் - எப்பொழுது. மாணவர்களுக்கு, ஆசிரியர்களைக்கண்டு பயம் இல்லாதபோது, மாணவர்கள் கேள்வி கேட்பார்கள். மாணவர்கள் கேள்வி கேட்கும்போது, அந்த கேள்வியின்மூலம், ஆசிரியர்களுக்கு ஞானம் பிறக்கும்.
ஆக, சந்திரனில், சூரியனில் - கண்டங்கள் கிடையாது. சந்திரன், சூரியன் என்று அனைத்து கிரகங்களும், மனிதனால், கண்டங்களாகவும், நாடுகளாகவும் பிளவுபடாமல், முழுமையாக இருக்கின்றது.
மனிதன் கால்பட்ட பூமி மட்டுமே, கண்டங்களாகவும், நாடுகளாகவும் பிளவுபட்டு கிடக்கின்றது.
மனிதன் மட்டுமே, பூமியை, ஆசியா, இந்தியா, மெக்சிகோ என்று வித்தியாசப்படுத்தி பார்க்கின்றான்.
பூமியில் வாழும் மற்ற உயிரினங்கள் அப்படி வேறுபடுத்தி பார்ப்பதில்லை. பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் பாஸ்போர், விசா இல்லாமலே உலகை வலம் வருகின்றன.
காற்றுக்கு வேலி இல்லை; வானத்துக்கு பார்டர் கிடையாது; கடலுக்கு விரிசல் இல்லை.
மனிதகுலம் தோன்றுவதற்கு முன்பு, இந்த பூமி, எந்தவித வரைபடமும் இல்லாமல், முழுமையான, ஒன்றுபட்ட கிரகமாகத்தான் இருந்திருக்கின்றது.
மனிதன் வரைந்த வரைபடம் உண்மைக்கு எதிரானது. பூமியில், கண்டங்கள், நாடுகள், வேலிகள் என்று பிளவுபடுத்தி உருவாக்கியது - எல்லாம் இயற்கைக்கு எதிரான செயல்.
இன்று, இயற்கை, நமக்கு உண்மையை உணரவைக்கின்றது. ஜப்பானில் ஏற்படும் நிலநடுக்கம், இந்தியாவில் சுணாமி ஏற்படச் செய்யும். மெக்சிகோவில் வாழும் மனிதர்களுக்கு வந்த நோய், பூமியின் மறுபகுதியில் வாழும் மனிதர்களையும் பாதிக்கும் என்ற உண்மையை, இயற்கை நமக்கு உணரவைக்கின்றது.
அதைவிட மிகப்பெரிய உண்மை என்னவென்றால் - பொதுவாக, அனைத்து பிரச்சனைகளையும், நாம், இது பணக்காரங்கள் - ஏழைகள் பிரச்சனை; அல்லது, இது அந்த மதம் - இந்த மதம் பிரச்சனை; இது அந்த ஜாதி - இந்த ஜாதி பிரச்சனை; மொழி சம்பத்தப்பட்ட பிரச்சனை; நாடுகளுக்கு இடையேவான பிரச்சனை.
இப்பவருகின்ற பிரச்சனைகள் எல்லாம் - நாடு, மதம், மொழிகளைக் கடந்து, மனித சமுதாயத்தின் பிரச்சனையாக, நம்மையும் அறியாமல், பார்க்க ஆரம்பித்து இருக்கின்றோம்.
பன்றிக்காய்ச்சல் - ஒரு மனிதனிடமிருந்து, மற்றொரு மனிதருக்கு பரவ வாய்ப்பு உண்டு என்று பார்க்கின்றோம். அங்கு, மனிதன் முன்னிலைப்படுத்த படுகின்றான். மனித சமுதாயம் முன்னிலைப்படுத்தப்படுகின்றது.
அதுதான் உண்மையின் மகத்துவம். உண்மையான சந்தோசமும், மக்களை ஒன்றுபடுத்துகிறது. உண்மையான சவாலும், சோதனையும், மக்களை ஒன்றுபடுத்துகிறது.
பன்றிக்காய்ச்சல் - உண்மையான சவால்; இடைத்தேர்தல் - உண்மைக்கு எதிரான , பொய்யான பிரச்சனை.
ஜெயலலிதாவின் முடிவு - இடைத்தேர்தல் புறக்கணிப்பு - மிகச் சரியான, உண்மையான, சத்தியமான முடிவு. அந்த தெளிவான முடிவினால், மக்களின் கவனம் சிதராமல், மக்களின் உண்மையான பிரச்சனையில் முழுமையாக செலுத்த முடிகிறது.
உண்மையான பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போதுதான், மக்களும் உண்மையை உணருவார்கள். ஓசியிலே டீவி வாங்கினால், பன்றிக்காய்ச்சலும் ஓசியிலேயே வரும் என்று.
உண்மையை உணரும்போது, மக்கள் டீவி வேண்டாம்; வண்ணத் தொலைக்காட்சி வேண்டாம். சிறப்பாக அரசாங்கம் நடத்தி, இந்தமாதிரி நோய்கள் எல்லாம், திடுதிப்பென்றுவந்து, மக்களை அல்லல்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள், அதுவே போதும் என்று சொல்வார்கள், மக்கள்.
எல்லோரும்தான் உழைக்கிறாங்க; ஒரே ஒரு வித்தியாசம். நாம மாடு மாதிரி உழைக்கிறோம்; அவுங்க மனுஷன் மாதிரி உழைக்கிறார்கள். உழைக்கணும்; சிந்திச்சு, அறிவை உபயோகப்படுத்தி உழைக்கணும்.
விமான நிலையத்தில், வந்திறங்கும் பிரயாணிகளை, பன்றிக்காய்ச்சல் நோய் இருக்கிறதா என்று பரிசோதித்து, பிறகு, ஊருக்குள் அனுப்ப வேண்டும். அதுதான் வேலை. அந்த வேலைக்கு ஆட்கள் விமான நிலையத்தில் அமர்த்தப்பட்டார்கள்.
ஆக, அங்கே வேலை செய்த மருத்துவர்கள், மற்றும் உதவியாட்கள் எல்லாம் உழைச்சாங்க. மாடுமாதிரி உழைச்சாங்க. ஆனால், பலன் இல்லை. அங்க உழைச்ச உழைப்பு வீண்.
விமான நிலையத்தில் வேலை செய்த மருத்துவர்கள், மற்றும் உதவியாட்கள், அவர்களை அந்த வேலைக்கு அனுப்பிவைத்த நிர்வாகிகள், அமைச்சர் - யாரும் சிந்தித்து, அறிவுபூர்வமாக உழைக்கவில்லை. அதுதான் உண்மை.
விமான நிலையத்தில் வந்திறங்கும் பிராயாணிகளை, மருத்துவர்கள் எந்தவித சோதனையும் செய்யவில்லை. சும்மா, ஒரு காகிதத்தில் விபரங்களை நிரப்பச் சொன்னார்கள். அந்த காகிதத்தில் நிரப்பப்பட்ட விபரம் சரியாவென்றுகூட பார்க்கவில்லை.
பிரயாணிகளை, எந்தவித மருத்துவ சோதனையும் செய்யவில்லை. உடம்பு சூடாக இருக்கிறதா என்று தொட்டுக்கூட பார்க்கவில்லை. வாயில், கேள்வி கேட்டதோடு சரி; காய்ச்சல் ஏதாவது இருக்கா; சரி, போங்க. அவ்வளவுதான்.
அந்த மருத்துவர்கள் உழைக்கவில்லை என்று சொல்லவே முடியாது. உழைத்தார்கள்; மாடாக உழைத்தார்கள்; உழைப்பு பயனில்லாமல், வீணாக போனது.
வெளிநாடுகளிலிருந்துவரும் விமானங்கள், பெரும்பாலும், நடு இராத்திரியில்தான் வரும். அந்த நடு இராத்திரியில், தூக்கம் கலைந்து, மேஜைபோட்டு உட்கார்ந்து, வரும் பிரயாணிகளிடம் கேள்வி கேட்பதென்பது - விரும்பி செய்யும் வேலை அல்ல. கடினமான வேலைதான். ஆனால், அந்த கடின உழைப்பு, வீணாகிப் போனதே. அதைத்தானே, அந்த காலத்திலே, எம்.ஆர். இராதா சொல்லியிருக்கின்றார்.
முதலில், அமைச்சர் உணர்ந்திருக்க வேண்டும். பிறகு, அமைச்சர், அதிகாரிகளை உணரவைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், அந்த அதிகாரிகள், வேலை செய்யும் மருத்துவர்களை உணரவைத்திருப்பார்கள். எதை - உண்மையை.
டாக்டர் தம்பீ, கடினமான வேலைதான். இப்படி நடு இராத்திரியிலே, தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு வேலைசெய்வதென்பது கடினமான வேலைதான். ஆனா, நீ செய்யக்கூடிய இந்த வேலை - சாதரண வேலை கிடையாது. நீ, இந்த வேலையை, ஏனோ-தானோ என்று செய்தாயேயானால், இந்த நோய், நம்ம நாட்டுக்குள்ளே புகுந்து, பல உயிர்களை பலி வாங்கிடும். ஆக, நீ செய்ற வேலை - வேலையே இல்லை. நீ காவல் தெய்வம். நாட்டுக்குள்ளே கொடிய நோய் வராமல் தடுக்கும் - காவல் தெய்வம்.
ஆனா, நம்ம அதிகாரிகள் உண்மையை சொல்லி வேலை வாங்குவதில்லேயே. அவுங்களுக்கு மேலே உள்ளவங்களைப் பார்த்துத்தானே, அவுங்க கத்துக்குறாங்க.
இந்தாய்யா டாக்டர், இந்தவாரம் உனக்கு ஏர்போர்ட்டில் நைட் சிப்ட்.
அதுக்கு, டாக்டர், என்ன சார், இப்படி உயிரை வாங்குறீங்க.
யோவ், ஒழுங்கா வேலை செய்; இல்லாட்டி, அருப்புக்கோட்டைக்குப் பக்கத்திலே கிராமத்துக்கு மாத்திடுவேன்.
இதுதான், நாம வேலை வாங்குற ஸ்டைல். கடின உழைப்பு இருக்கும். பலன் இருக்காது.
மாத்தணும். எல்லாம் மாத்தணும். வேறு வழியேயில்லை.
தமிழக ஆளுநரை, மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி செய்தால், ஆளுநர், ஐந்து வருடம், கவனம் சிதராமல், காரியம் செய்வார். திருமங்கலம், பர்கூர் என்று அடிக்கடி தொல்லை தருவது சரியான செயல் அல்ல.