This is Dr.Manmohan Singh with First Lady. The picture is from Times of India newspaper. Times of India should come forward and make this picture available for the public without any restrictions.
Dr.Manmohan Singh speaks to the People of India.
My dear fellow citizens of India,
இது மிகவும் முக்கியமான தருணம்; ஆதலால், மன்மோகன் சிங், நேரடியாக மக்களிடம் உரையாற்றுகிறார்.
எனதருமை இந்திய குடிமக்களே, உங்களிடம், நேரடியாக மனம் திறந்து பேச முடிவுசெய்து, இன்று உங்கள் முன் இருக்கின்றேன். நமது முன்னோர்கள், தங்களது வாழ்க்கையை தியாகம் செய்து, புதுமையான வழியில் போராடி, நமக்கு சுதந்திரம் வாங்கி தந்திருக்கின்றார்கள்.
சுதந்திரம் அடைந்தபிறகு, நமது பெரியோர்கள், சான்றோர்கள் கூடி, பேசி, விவாதித்து, மிகவும் அருமையான அரசியல் அமைப்பை, நமக்கு உருவாக்கி கொடுத்திருக்கின்றார்கள். அந்த அரசியல் அமைப்பின் வழிகாட்டுதலில், நாம் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, உலகிலேயே சிறப்பான, மாபெரும் மக்களாட்சியை நடத்தி வருகின்றோம்.
நமது முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த அரசியல் அமைப்பு மிகவும் சிறப்பானது; அதன் அடிப்படையிலேயே, நாம் தொடர்ந்து மக்களாட்சி நடத்துவதில், எந்தவித இடையூரும் இல்லை. நாம் அனைவரும், மகாத்மா காந்தியாகவும், ஜவர்ஹலால் நேருவாகவும், சரோஜினி நாயுடுவாகவும், காமராஜராகவும், வல்லபாய் பட்டேலாகவும், அம்பேத்காராகவும் - நேர்மையாகவும், உண்மையாகவும், சத்தியமாகவும் நடந்து கொண்டால், நமது அரசியல் அமைப்பு, இன்றும் சிறப்பாகவே செயல்படும். எந்தவித மாற்றமும், ஏற்படுத்த அவசியமே இல்லை.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றது. மனிதர்கள் மாறிவிட்டார்கள். நேர்மை, உண்மை, சத்தியம் என்று நல்ல நெறிமுறைகளை கடைபிடித்து, மக்கள் பொது வாழ்வில் சேவையாற்றுவது, கடினமாகி விட்டது. இன்றைய உண்மை நிலையை, நாம் உணரவேண்டியது மிகவும் அவசியம். அந்த உண்மையை நாம் உணரும்போது, நம் முன்னோர்கள், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வகுத்துக் கொடுத்த அரசியல் அமைப்பு, இன்று உள்ள சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லை. ஆக, இன்றைய காலத்திற்கேற்ற மாற்றங்களை நாம், நமது அரசியல் அமைப்பில் ஏற்படுத்த வேண்டியிருக்கின்றது.
உதாரணத்துக்கு, அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், தேர்தலில் போட்டியிடுபவர்கள், வாக்காளர்களுக்கு, பணம் கொடுத்து ஓட்டு வாங்கவில்லை; அப்படி யோசித்தும்கூட பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி, ஓட்டுக்கு பணம் கொடுத்தால், மக்கள், கை நீட்டி வாங்கி இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட வேட்பாளரை, ஊரே சேர்ந்து ஒதுக்கி வைத்திருக்கும்.
இன்றைய நிலைமை அப்படி இல்லை. பணம் கொடுக்க, வெட்கப்படுவதில்லை; கை நீட்டி, பணம் வாங்க மக்கள், வெட்கப்படுவதில்லை. இந்தமாதிரி சூழ்நிலையில், அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட, அரசியல் அமைப்பு பொய்யாகிப்போய்விட்டது.
மக்கள், மீண்டும் உண்மையானவர்களாகவும், சத்தியமானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் மாறியபின், நாம் மீண்டும், நம் முன்னோர்கள் உருவாக்கிய அரசியல் அமைப்பை, மீண்டும் கொண்டு வருவோம். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், நாம் புதியதோர் அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு, காலத்தினால் தள்ளப்பட்டு இருக்கின்றோம்.
ஆக, நம் முன்னோர்கள், குறையுள்ள அரசியல் அமைப்பை ஏற்படுத்தி விட்டார்களே என்று வேதனை அடைய தேவையில்லை; அவர்கள் உருவாக்கிய அரசியல் அமைப்பில், குறையொன்றும் இல்லை. அந்த அரசியல் அமைப்பு, இன்றைய மக்களுக்கு ஏற்றதாக இல்லை.
புதிய அரசியல் அமைப்பை உருவாக்க கால அவகாசம் தேவை. புதிய அரசியல் அமைப்பை உருவாக்க, தேசத்தின் வளர்ச்சியை, தங்கள் நோக்கமாக கருதும் பெரியவர்கள்கூடி, சிந்தித்து, ஆராய்ந்து, விவாதம் செய்து, நல்லதோர் அரசியல் அமைப்பை, நாளைய தலைமுறைக்காக உருவாக்குவார்கள்.
அதுவரை, அரசாங்க நிர்வாகத்தில், மாற்றங்கள் ஏற்படுத்த முடிவு செய்திருக்கின்றேன். தற்போதைய ஜனாதிபதியும், இந்த மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு தந்திருக்கின்றார். மன்மோகன் சிங்காகிய, நான், இந்தியாவின் நிர்வாக ஜனாதிபதியாக பொறுப்பேற்கின்றேன். இந்தியாவின் ஜனாதிபதியாக, வரும் தலைமுறையினருக்கு, நல்லதோர் முன்னுதாரனமாக, சிறப்பான நிர்வாகத்தை, நான் நடைமுறைப்படுத்துவேன். ஜனாதிபதியாக, நான் எடுக்கும் முடிவுகள், மக்களவையில், மக்களின் பிரதிநிதிகள் விவாதம் செய்து, நிறை - குறைகளை எடுத்துரைப்பார்கள். குறைகளைக் களைந்து, ஜனாதிபதியின் முடிவுகள், சட்டமாக இயற்றப்படும். மக்களவை இயற்றிய சட்டங்களின் அடிப்படையில், நீதித்துறை செயலாற்றும்.
மத்தியில் ஏற்படும் இந்த மாற்றம், மாநிலங்களிலும் ஏற்படும். மாநிலங்களில், முதல்வர் பொறுப்பில் உள்ளவர்கள், அந்த மாநிலத்தின் ஆளுநர்களாவார்கள். மாநில ஆளுநர் எடுக்கும் முடிவுகள், மாநிலங்களின் மக்கள் பிரதிநிதிகள் , நிறை குறைகளை விவாதித்து, குறைகளை களைந்து, சட்டங்களை இயற்றுவார்கள். மாநிலங்களின் நீதித்துறை, சட்டங்களின் அடிப்படையில் நீதி வழங்கும்.
புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் குழு, ஆந்திராவில் உள்ள ஹரிக்கோட்டாவில் கூடி விவாதிக்கும். அந்த குழுவில் இடம் பெறுபவர்கள், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, தேசத்தின் நலனுக்காக சிந்தித்து, செயல்படுபவர்களாக இருக்க வேண்டும் என்பதால், சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றது. அதன்படி, புதிய அரசியல் அமைப்பு குழுவில் இடம் பெறுபவர்கள், எந்தவித தேர்தலிலும் வேட்பாளராக போட்டியிடக் கூடாது; அது தவிர, எந்தவித பதவியையும், நாடி செல்லக்கூடாது. இந்த குழுவில் இடம் பெறுபவர்கள் அனைவரும், Founding Mothers and Fathers of India என்ற தகுதியை மட்டும் பெறுவார்கள், வரலாற்றில்.
இந்திய தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும் நன்றி.
The transition of power will take place on January 26, 2010. The current President of India will step down and the Chief Justice of India will administer oath of confidence to Dr. Manmohan Singh and make him as the First Effective Executive President of India at Redfort, New Delhi.
President of India Dr. Manmohan Singh, along with First Lady will move into Rashtrapathi Bhavan.
கே.பாலசந்தர் படம், இரு கோடுகள். மணைவி ஜெயந்திக்கு, கணவனைப்பற்றிய உண்மை தெரியவந்துவிடும். கணவன் ஜெமினி கணேசனுக்கும், கலெக்டர் சவுக்கார் ஜானகிக்கும் உறவு என்று. ஜெயந்தி, ரயில் தண்டவாளத்தில் விழுந்து, தற்கொலை செய்ய முடிவு செய்து, ஆவேசமாக தண்டவாளத்தில், ஆற்றுப் பாலத்தின் மீது சென்று கொண்டிருப்பாள். ஜெயந்தியின் வயதான அப்பா, எஸ்.வி.சகஸ்ரநாமம், தன் பெண்ணை, பொறுமையோடு இரு என்று சொல்லிக் கொண்டே வருவார். ஜெயந்தி கேட்க மாட்டார். எதிர்தாப்லே, ரயில் வேகமாக வந்து கொண்டு இருக்கும். சகஸ்ரநாமத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. டபாரென்று குதித்து விடுவார், அப்பா சகஸ்ரநாமம். ஆத்துலே தண்ணி ஓடிக்கொண்டு இருக்கும். அப்பா சகஸ்ரநாமம், ஆத்துலே குதிச்சு, நீச்சலடிச்சு, கரையோரமாக ஒதுங்கி, காத்துக் கொண்டிருப்பார். அவருக்கு தெரியும், மகள் ஜெயந்து வருவாள் என்று.
பதறி அடித்துக் கொண்டு, ஓடி வருவார் ஜெயந்தி, ஆத்தங்கரைக்கு. அங்கே, அப்பா, கூல்லாக நின்று கொண்டு இருப்பார். அந்த நேரத்தில், உன்னை காப்பாத்த வேறு வழி தெரியவில்லை. ஆதலால், நான் குதிச்சிட்டேன். இப்ப, நீ என்னை தேடி வந்துட்டே; வீட்டிலேபோய், அமர்ந்து, மாப்பிள்ளையிடம் பேசலாம் என்பார் சகஸ்ரநாமம்.
ஒரு சின்ன கோட்டின், பக்கத்திலே பெரிய கோட்டை போட்டு விடு. சின்ன கோடு, கவனம் இழந்துவிடும். மகள் தற்கொலையை தடுக்க, அப்பா குதிச்சுட்டார். இரண்டு உயிரும் காப்பாற்றப்பட்டது. அதுபோல, மன்மோகன் சிங் ஜனாதிபதி ஆவது; புதிய அரசியல் அமைப்பின் குழு, ஆந்திராவில் என்று பெரிய கோட்டைப் போட்டுவிட்டால், ஆந்திராவின் இன்றைய பிரச்சனை, சிறியதாகி மறைந்து விடும்.
கே.பாலசந்தரிடம் இருந்து, நாங்களும் நிறைய கற்றுக் கொண்டிருக்கின்றோம், அவரது படங்களின் மூலம்.