வழக்கறிஞர் காந்தி
  • Lawyer Gandhi February 22, 2009

    In May 1883, the 13-year old Mohandas was married to 14-year old Kasturbai in an arranged child marriage, as was the custom in the region. However, as was also the custom of the region, the adolescent bride was to spend much time at her parents' house, and away from her husband. Mohandas and Kasturbai had four children, all sons: Harilal, Manilal, Ramdas, and Devdas.

    At his middle school in Porbandar and high school in Rajkot, Gandhi remained an average student academically. He passed the matriculation exam for Samaldas College at Bhavnagar, Gujarat with some difficulty. While there, he was unhappy, in part because his family wanted him to become a barrister.

    On 4 September 1888, less than a month shy of his nineteenth birthday, Gandhi traveled to London, England, to study law at University College London and to train as a barrister.

    He returned to India after being called to the bar of England and Wales by the Inner Temple but had limited success establishing a law practice in Mumbai.

    Later, after applying and being turned down for a part-time job as a high school teacher, he ended up returning to Rajkot to make a modest living drafting petitions for litigants, a business he was forced to close when he ran afoul of a British officer.

    In his autobiography, he refers to this incident as an unsuccessful attempt to lobby on behalf of his older brother. It was in this climate that, in 1893, he accepted a year-long contract from an Indian firm to a post in Natal, South Africa, then part of the British Empire.

    அது மோகன்லால் கரம்சந்த் காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை வரலாறு.

    ஆக, வழக்கறிஞர்களே, மகாத்மா காந்தி, உங்களோட சீனியர். மருத்துவர்களுக்கோ, பொறியியல் வல்லுனர்களுக்கோ இல்லாத பெருமை, வழக்கறிஞர்களுக்கு உண்டு. காந்தியின் தொழிலைத்தான், நீங்களும் செய்கிறீர்கள். பெருமைப் படுங்கள்.

    மருத்துவர்களால், உடல் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியுமே தவிர, நல்லதோர் சமுதாயத்தை உருவாக்க முடியாது. ஆனால், நீதித்துறையின் காவலர்களான உங்களால் முடியும்.

    பொறியில் வல்லுனர்களால், வசதியான சமுதாயத்தை உருவாக்க முடியுமே தவிர, நேர்மையான, உண்மையான சமுதாயத்தை உருவாக்க முடியாது. ஆனால், சத்தியத்தின் காவலர்களான உங்களால் முடியும்.

    உங்கள் தொழில், அது ஒரு சமுதாய சேவை. அந்த சேவையின்மூலம், சமுதாயத்தோடு ஒன்றி வாழ்பவர்கள் நீங்கள். உங்களால் மட்டுமே சொல்ல முடியும், இந்த சமுதாயம் நல்லவழியில் சென்று கொண்டு இருக்கின்றதா அல்லது தீயவழியில் சென்று கொண்டு இருக்கின்றதாவென்று. நீங்கள் மனது வைத்தால், பொய்மையை ஒழித்து, சத்தியத்தை நிலைநிறுத்த முடியும். உங்களால், மாற்றியும் அமைக்க முடியும்.

    நீங்கள், தவறு செய்பவருக்கு, சரியான தண்டனை வாங்கித்தரும்போது, சமுதாயம் சிறப்படைகிறது. நீங்கள், தவறு செய்பவருக்கு, துணைபோகும்போது, சமுதாயம் அழிவை நோக்கிச் செல்கிறது.

    ஆக, உங்கள் சக்தியினால், நல்லதோர் சமுதாயத்தை ஆக்கவும் முடியும்; சீர்கெட்ட சமுதாயத்தை அழிக்கவும் முடியும்; அல்லது இரண்டையும் மாற்றி செய்யவும் முடியும்.

    சமுதாயம்தான் நீங்கள்; நீங்கள்தான் சமுதாயம்.

    உண்மையாகவே பாருங்கள். இந்த இலங்கை பிரச்சனை, ஒரு சமுதாய பிரச்சனை. யாராவது டாக்டரோ, கம்ப்யூட்டர் மக்களோ அல்லது பொறியியல் வல்லுனர்களோ, ஏதாவது குரல் கொடுக்கின்றார்களா.

    நீங்கள் உணர்வுள்ள, பொறுப்புள்ள சமுதாய மக்கள். கவலையேபடாதீங்க; கல்லைவிட்டு எறிவதற்கும்; தீவைப்பதற்கும்.

    உணர்வுள்ள பிரச்சனையை உணரும்போது, ஆத்திரமும், கோபமும் வராமல் இருந்தால் - அவன் மனிதனே இல்லை. உணர்வற்ற, சமுதாய பொறுப்பற்ற, சுயநலமான மனிதர்கள் - ஏறக்குறைய உயிர் அற்றவர்களே ஆவார்கள்.

    ஆனால், கோபமும், ஆத்திரமும் வரும்போது, நாம் அழிக்கும் பொருட்கள் எல்லாம், நம்ம வீட்டுச் சொத்து; அந்த உண்மையையும் நீங்கள் உணரவேண்டும்.

    உங்களுக்கு வருகின்ற நியாயமான கோபத்துடன், அழிப்பது நம்ம வீட்டுச் சொத்து என்ற உண்மையை நீங்கள் உணருகின்றபோது, அடுத்து நீங்கள் எடுக்கும் முடிவு, அந்த முடிவின் செயலாற்றல் - எல்லாம் அற்புதமாக அமையும்.

    வீட்டிலே அப்படித்தானே நடக்குது. கோபம் வருது. நம்ம வீடு என்ற நினைப்பும் வருது. நம்ம குடும்பம், நம்ம சொந்தம் என்று எல்லாத்தையும் எண்ணிப்பார்க்க வேண்டிருக்கு. அப்படி எல்லாத்தையும் எண்ணிப் பார்த்து எடுக்கும் முடிவு, பிறகு அந்த முடிவை செயலாற்றும்போது, இறுதியில், எல்லாமே நல்லதாகவே நடந்துவிடுகிறது.

    ஆக, மோகன்லால் கரம்சந்த் காந்தி உங்க சீனியர்; பெருமைபடுங்கள். உங்களைப் பார்த்து, நாளைய சமுதாயம் நீதித்துறைக்கு நிறையபேர் வரவேண்டும். அப்பொழுது, அவர்கள் சொல்வார்கள், எங்கள் வழி; மஹாத்மா காந்தி வழி, என்று.

    இங்கு, பத்திரிக்கைகளுக்கு ஒரு விசயம் சொல்ல வேண்டும்.

    தீக்குளித்தல்

    வெந்நீர் குளியல், பன்னீர் குளியல், பால் குளியல் போல தீக்குளித்தல் - ஒரு குளியல் இல்லை.

    அது உடம்பு வெந்து, எலும்பு கருகி, சாம்பலாக போவது. அதுதான் உண்மை.

    உண்மையை உண்மையாகப் போடும்போது, படிப்பவர்களுக்கும் உண்மையை உணரமுடியும்.

    நீங்கபாட்டுக்கு, குளியல் என்று போட்டீர்களானால், மக்களால், உண்மையை உணரமுடியாமலே போய்விடுகிறது.