Slumdog Millionaire
  • Slumdog Millionaire February 10, 2009

    ஹாலிவுட், ஹிட்லருக்கு நிறைய கடமைபட்டு இருக்கு. ஹிட்லரின் நாசி படைகள், ஸ்வஸ்திக் சிம்பள் என்று, பல நூறு படங்களை எடுத்து வியாபாரம் செய்து விட்டார்கள்.

    இரண்டாம் உலகப்போர் படங்கள் அலுத்துப்போனபிறகு, ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் துப்பறியும் படங்கள் வரத் தொடங்கின. பிறகு, ஸ்டார் வார்ஸ் போன்ற சயின்ஸ் ஃப்க்ஷன் படங்கள் வரத் தொடங்கின. அதன் பிறகு, ஆர்னால்ட் ஸ்வார்ட்ஸ்நேகரின் அதிரடி படங்கள், ஸ்பைடர்மேன், பேட்மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களாக படங்கள் வரத் தொடங்கின.

    இவையெல்லாம் முடிந்தபிறகு, மேட்ரிக்ஸ் போன்ற Special Effects படங்கள் வெளிவரத் தொடங்கின. நெறைய கம்ப்யூட்டர் கிராப்பிக்ஸ் இருந்தது. எல்லாம் பிரமாண்டமாக, செயற்கையாக இருந்தது.

    இதற்கிடையில், ஆட்களே இல்லாமல், வெறும் கம்ப்யூட்டர் அனிமேஷனில், லயன் கிங் என்று நிறைய படங்கள் வந்து குவிந்தது.

    ஆக, கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள், அவர்கள் பார்த்த படங்கள் எல்லாம், ரொம்ப செயற்கையான, வெறும் கனவுலகம் தான். சாதரண மனிதர்களின் வாழ்க்கை, Sound of Music போன்ற படங்களைப் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

    அப்படிப்பட்ட வேளையில், சாதரண மனிதர்களின், சாதரண கதையை பார்க்கும்போது, உண்மையான வாழ்க்கையை பார்த்து, ஆச்சரியமும், வியப்பும் அடைந்துபோய் இருக்கின்றார்கள்.

    பெரிய மஹாராஜ கதை இல்லை. குடிசைகளிலும், ரோடுகளிலும் வாழும், மனிதர்களை பார்க்கும்போது, அவர்களுக்கு, இதுவும் பூமியில் உள்ள ஒரு இடம் என்று நம்ப முடியவில்லை. ஏதோ வேறு ஒரு கிரகம், அந்த கிரகத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைமுறை என்று, வியந்து பார்க்கின்றார்கள்.

    பொதுவாக, வளர்ந்த நாடுகளில் வாழும் மக்கள், அவர்களது அரசாங்கத்தை, ஆயிரம் குறை சொல்வார்கள். பேச்சு சுதந்திரம், கண்டபடி கல்யாணம் செய்து கொள்ள அரசு அனுமதி, ஸ்டாக் மார்க்கெட் வீழ்ச்சி, பொருளாதார சீர்குலைவு என்று பெரிய பெரிய பிரச்சனைக்களை பேசி வாதாடுவார்கள்.

    இதே பூமியில், மனிதன் அடிப்படை வசதிகூட இல்லாமல் வாழ்கின்றான் என்பதை பார்க்கும்போது, அவர்கள், தங்களுக்கு கிடைத்த வாழ்க்கை வசதிகளை, நன்றியுணர்வோடு எண்ணி பெருமைபடுகிறார்கள்.

    சமீபத்தில், ஒரு பெரிய அரங்கில், பில் கேட்ஸ், ஒரு பெரிய கண்டெயினரை திறந்து விட்டார். அந்த கண்டெயினரில், பல ஆயிரம் கொசுக்கள் இருந்தது. கொசுக்கடி என்றால், எப்படி இருக்கும் என்று அநுபவித்து பாருங்கள் என்று செயல்முறை விளக்கம் கொடுத்துக் கொண்டு இருந்தார். இந்த பூமியில், பல கோடி மக்கள், இந்த கொசுக்கடியை வாழ்நாள் முழுவதும் அநுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இதை முற்றுலுமாக ஒழிக்க வேண்டும். அப்படி செய்தால்தான், மலேரியா போன்ற நோய்களை ஒழிக்க முடியும் என்று விளக்கினார். பில்கேட்ஸின் முயற்சிக்கு, பலர் ஆதரவு தர முன்வந்தார்கள்.

    ஒரு காலகட்டவரை, பணத்தை தொறத்தி தொறத்தி சம்பாதிக்கின்றார்கள். பிறகு, அரசாங்க உதவியில்லாமல், தங்களது சொந்த முயற்சியில், பூமிக்கும், மக்களுக்கும் நல்லது செய்கிறார்கள்; எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி.

    படத்தில், அநியாயத்துக்கு உண்மையை, முகத்தில் அறைந்து சொல்லியிருக்கின்றார்கள். என்னதான் நம்மை தேற்றிக்கொண்டாலும், இது வெறும் படம்தான் என்று, அந்த அமிதாப் பச்சன் காட்சியிலிருந்து மீண்டுவரவே முடியவில்லை. அதுவும், பம்பாயில், தாராவியெல்லாம் பார்த்திருந்தால், நிச்சயம் உங்களால், அந்த நினைவிலிருந்து தப்பிக்கவே முடியாது.

    அதுவும், அமெரிக்கர்களின் மத்தியில், நமது உடம்பு கூனி குறுகிப்போய், முகத்தை தொங்கத்தான் போடவேண்டி இருக்கின்றது. ஆனால், அந்த காட்சி பொய் இல்லையே.

    உண்மை. சுட்டெரிக்கும் உண்மை.இன்னும் ஒன்பது ஆண்டுகளில், பாம்பே, நியூயார்க் ஆகுமா? இந்தியா வளர்ந்த நாடாக ஆகுமா? கேள்வியும், பதிலும் மாறி, மாறி வந்து போய்க் கொண்டு இருந்தது.

    பம்பாய், தாராவியும் உண்மை. சந்திரனில் விண்கலம் உல்லாச நடைபோடுவதும் உண்மை. ஆக, நிலைமை, ரொம்ப மோசமில்லை.

    சந்திரனில் விண்கலம், பெருமைதரும் விசயமாக இருக்கின்றது. அணுகுண்டு சோதணையும், அறிவியல் வளர்ச்சிதான்; சந்திரனில் விண்கலமும் அறிவியல் வளர்ச்சிதான். அறிவியலிலும், ஒண்ணு ஆக்க வளர்ச்சி; இன்னொன்று அழிவின் பாதையில் செல்லும் வளர்ச்சி.

    ஆக, சந்திரனும் உண்மை; தாராவியும் உண்மை. அதுதான் உண்மையின் மகிமை. உண்மையை உணர்ந்து விட்டால், நமக்கு செல்லவேண்டிய பாதை தெளிவாக தெரிய ஆரம்பிக்கின்றது. உண்மையை மறைத்து, போலித்தனம் செய்ய ஆரம்பித்து விட்டால், அதை தொடர்ந்து செய்ய வேண்டிய கட்டாயமாகி விடுகிறது.

    ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விழாவில் இசை நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் என்ற செய்தியை கேட்டு மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒரு விருது நிச்சயம் உண்டு; மூண்று விருதுகளைப் பெற்றாலும் ஆச்சரியமில்லை.

    இறுதியாக, வாழ்க்கை ஒரு சக்கரம். நாம, முத்துவிலிருந்து, எந்திரனை நோக்கி செல்கிறோம். அவுங்க, எந்திரனிலிருந்து, முத்துவை நோக்கிச் செல்கிறார்கள்.