Who is the Chief Executive of Sri Lanka? President Mahinda Rajapaksa or his brothers?
February 05, 2009
Constitutionally, the President of Sri Lanka has the Responsibility to take decision; Authority to execute that decision; and Accountable for the outcome of that decision. Mahinda Rajapaksa is the CEO of Sri Lanka; not his brothers.
உடன்பிறப்புகளின்
உபத்திரங்கள்,
தொல்லைகள்.
பொதுவாக
சொந்தங்களை
வீட்டிலேயேவிட்டு
விட்டு,
வேலைக்கு
செல்வது சிறந்தது.
அப்படி
செய்யும்போது,
சொந்தங்கள்,
வேறு
வேலையை தேடிச்
செல்வார்கள்;
அந்த
வேலையில் சிறந்தும்
விளங்குவார்கள்;
சிறப்பும்
அடைவார்கள்.
உங்கள்
தொழிலும் பாதிப்பு
இல்லாமல் வளரும்;
உங்கள்
சொந்தங்களும்,
அவர்களது
தொழிலில்
வளருவார்கள்.
வீட்டிலும்
சொந்தங்களின்
உறவு வலுப்படும்.
அலுவலகம்
அலுவலகமாக
இருக்கும்.
வீடு
வீடாக இருக்கும்.
சொந்தங்களுக்கு
உதவுகின்றோம்
என்று எண்ணிக்
கொண்டு,
வேலை
செய்யும் இடத்துக்கு
அழைத்துச்
சென்று விடும்போது,
இயற்கையாகவே,
அந்த
நிறுவனத்தில்
பிரச்சனைகள்
ஆரம்பித்து,
வளர்ந்து,
நிறுவனத்தை
அழித்தும்
விடுகிறது.
அலுவலகத்தில்
தெளிவு இல்லாமல்,
குழப்பம்
குடிகொண்டு
விடுகிறது.
வீட்டிலும்
உறவு பாதிக்கப்படுகிறது.
அலுவலக
விவகாரங்கள்
எல்லாம்,
வீட்டில்
சாப்பாட்டு
அறையில்
விவாதிக்கப்படுகிறது.
வீட்டு
விவகாரம் எல்லாம்,
அலுவலக
அறையில்
விவாதிக்கப்படுகிறது.
அலுவலகம்
அலுவலகமாக
இருப்பதில்லை.
வீடு
வீடாக இருப்பதில்லை.
சத்யம்
நிறுவனம் சீரழிந்து
போனதற்கு,
உடன்பிறப்புகளின்
உபத்திரவம்,
மிக
முக்கிய காரணம்.
தற்பொழுது,
இலங்கை
அதிபருக்கு,
அவரது
உடன்பிறப்புகளின்
உபத்திரங்கள்,
தொல்லைகள்
ஆரம்பமாகி
விட்டது.
ஏன்,
மருத்துவமணைகளில்
குண்டு போட்டீர்கள்
என்று கேட்டதற்கு,
அப்படித்தான்
குண்டு போடுவோம்,
என்று
சொல்கிறார்,
இலங்கையின்
இராணுவ செயலாலர்,
அதிபரின்
உடன்பிறப்பு.
இதே
கேள்வியை,
அதிபர்
மஹிந்தாவிடம்
கேட்டு இருந்தால்,
நிச்சயமாக
இவ்வாறு பதில்
சொல்லியிருக்க
மாட்டார்.
கேள்வியின்
பொருள்,
ஆழத்தை
அறிந்து,
உணர்ந்து,
நிதானமாக
வேறு பதிலை
சொல்லியிருப்பார்;
அது
உண்மைக்குமாறாககூட
இருக்கக்கூடும்.
அது,
இலங்கை
அதிபர் என்கின்ற
பொறுப்பினாலும்,
பாராளுமன்றத்தில்
கேள்வி எழக்கூடும்
என்ற முன்யோசனையினாலும்,
எதிர்
கட்சிகளை சமாளிக்க
வேண்டுமே என்ற
எண்ணத்தாலும்,
பத்திரிக்கையாளர்களை
எதிர்கொள்ள
வேண்டுமே என்ற
கவலையினாலும்,
உலகத்
தலைவர்களுக்கு
பதில் சொல்ல
வேண்டுமே என்ற
கடமை உணர்வினாலும்,
வார்த்தைகளை
கொட்டியிருந்திருக்க
மாட்டார்.
இன்றைக்கு,
உடன்பிறப்பு
செய்த தவறினால்,
இலங்கை
அதிபர் சிக்கலில்
மாட்டிக் கொண்டார்.
அதுதான்
பிரச்சனை.
இதே
பதவியில்,
வேறு
ஒருத்தர்
இருந்திருந்தால்,
அதாவது,
இலங்கையின்
இராணுவ செயலாலராக
வேறு ஒருவர்
இருந்திருந்தால்,
பொறுப்பில்லாமல்
பதில் சொல்லியிருந்திருக்க
மாட்டார்.
அப்படி
செல்லியிருந்திருந்தாலும்,
பதவியை
இன்னேரம்
இழந்திருப்பார்.
இலங்கை
அதிபர் சிக்கலில்
மாட்டியிருக்க
மாட்டார்.
இன்றைக்கு,
உடன்பிறப்பின்
தவற்றுக்கு,
இலங்கை
அதிபர் பொறுப்பேற்று
சமாளிக்க வேண்டும்.
உடன்பிறப்புகளை
வேலை செய்யும்
இடத்திற்கு
அழைத்துச்
செல்லும்போது,
வேலை
செய்யும் இடத்தில்,
மற்றவர்களைப்போல்,
நாமும்
ஒரு பணியாள்
என்று எண்ணி
வேலையை செய்வதில்லை.
அதிபர்,
நம்மளோட
அண்ணன் தான்
என்று எண்ணி
காரியத்தில்
ஈடுபடும்போது,
இந்த
மாதிரி தவறுகள்
இயற்கையாக
ஏற்பட்டுவிடுகிறது.
அண்ணனை,
அண்ணன்
என்று எண்ணாமல்,
இலங்கையின்
அதிபர் என்று
எண்ணிக் கொண்டு
பணியை ஆற்றுவது
முடியாத காரியம்;
அப்படி
செய்வது,
இயற்கைக்கு
எதிரானது;
செயற்கையானது.
இந்தமாதிரி
சொந்தங்களின்
தொந்தரவுகள்,
அதே
தலைமுறை (generation)
என்கின்றபோதுதான்
அதிகம் ஏற்படுகின்றது.
தந்தை,
மகன்
என்ற உறவில்,
வெவ்வேறு
தலைமுறைகள்
இருப்பதால்,
குறைந்தது,
வயதுக்கு,
அநுபவ
முதிர்ச்சிக்கு
மதிப்பளித்து,
அப்பாவை
ஒரு வார்த்தை
கேட்டுவிட்டு
செய்யலாம் என்று
பணியாற்றுவார்கள்.
அதே
தலைமுறை என்றாகும்போது,
அண்ணனைவிட
எனக்கு எல்லாம்
தெரியும் என்ற
கர்வம் ஆட்கொண்டு
விடுகிறது.
ஆக,
பணிக்கு
செல்லும்மிடங்களில்,
சொந்தங்களை
விட்டுச் செல்லுங்கள்.
சற்று
சிந்தித்துப்
பார்த்தால்,
நம்
முன்னோர்கள்
வாழ்ந்த காலக்கட்டத்தில்,
குடும்பமும்
தொழிலும் இணைந்து
இருந்தது.
தந்தை
செய்யும்
தொழிலைத்தான்,
பிள்ளைகள்
செய்வார்கள்.
பிள்ளைகளுக்கு
தொழில் பயிற்றுவிக்கும்
பொறுப்பு தந்தையின்
கடமையாக இருந்தது.
தன்
வாரிசு என்பதால்,
தொழில்
நுணுக்கங்கள்
அனைத்தையும்,
தந்தை
சொல்லிக் கொடுப்பார்.
பிள்ளைகளுக்கும்,
தந்தையின்மேல்,
அன்பு,
பாசம்,
மரியாதை
எல்லாம் இருக்கும்.
உடன்பிறப்புகளும்,
போட்டி,
பொறாமை
இல்லாமல்,
பாசமலராக
வாழ்ந்த சமுதாயம்
அது.
நம்
முன்னோர்களின்
அந்த சமுதாய
வழிமுறையை,
வெளி
நாட்டவர்கள்
வியந்து பாராட்டுகின்றனர்.
அந்த
காலக்கட்டத்துக்கு
அது சிறந்த
வழிமுறை என்று
ஆச்சரியத்துடன்
சொல்கிறார்கள்.
They called as – Fixed Economic Model based Society. நாம்
அழைப்பது,
சாதிகளின்
அடிப்படையில்
உண்டான சமுதாயம்.
எந்த
அமைப்புமே,
ஆரம்ப
காலத்தில்,
அழகானதாகவும்,
அற்புதமானதாகவும்தான்
இருக்கும்.
காலம்
போகப்போக,
அந்த
அமைப்பு,
அவலநிலைக்கு
கொண்டு சென்றுவிடும்.
ஆதலால்தான்,
குறைந்தது,
முப்பது
ஆண்டுகளுக்கு
ஒருமுறை,
அந்த
அமைப்பை ஒரு
புதிய
கண்ணோட்டத்தோடு,
சீர்தூக்கிப்
பார்க்க வேண்டும்.
ஆக,
அரசியல்
சட்டம்,
அறுபது
ஆண்டுகளை கடந்து
விட்டது.
இந்த
தருணத்தில்,
கட்டாயமாக,
அரசியல்
சட்டத்தை சீர்தூக்கிப்
பார்க்க வேண்டும்.
அது,
நமது
இன்றைய கடமை.
அந்த
கடமையை நாம்
செய்யத் தவறினால்,
சாதிகள்
மாதிரி,
அரசியலமைப்பும்,
சமுதாயத்தை,
நாட்டை
அவலநிலைக்கு
கொண்டு சென்றுவிடும்