Sri Lanka bans LTTE.
-
Congratulations to everybody. It is a new beginning. It is the end of the military struggle; beginning of the political process.
இலங்கை
இராணுவம் அதிரடி;
விடுதலைப்
புலிகள் பதிலடி.
பத்திரிக்கைகள்
இப்படி தலைப்பு
கொடுத்து செய்திகளை
வெளியிடும்போது,
அங்கு
உள்ள உண்மை
நிலையை உணரமுடியாமல்
போய்விடுகிறது.
ஏதோ ஆர்னால்டு
ஸ்வார்ஸ்நேகரின்
ஆங்கில படம்
பார்க்கும்
பரவசத்தைத்தான்
ஏற்படுத்துகிறது.
அதிரடிக்கு
பலநூறு உயிர்கள்
பலியாகி விடுகின்றன.
பதிலடிக்கு
மேலும் பலநூறு
உயிர்கள் பலியாகி
விடுகின்றன.
உயிரோட்டம்
அந்த உடல்களில்
இருக்கும்வரையில்தான்,
சிங்களம்,
தமிழ்
என்ற பாகுபாடு.
செத்த
பிணத்தின்
நாத்தம் ஏறக்குறைய
ஒரே மாதிரிதான்
இருக்கும்.
இலங்கை
இராணுவம் வெளியிட்ட
அறிக்கையின்படி,
விடுதலைப்
புலிகளை 15000
பேரைக்
கொன்று விட்டார்களாம்.
இராணுவம்
இழந்தது 2000
வீரர்களையாம்.
இந்த
எண்ணிக்கைகளைப்
பார்க்கும்போது,
இன்றைய
காலகட்டத்தில்,
அதிகம்
கொலை செய்வது
யார் என்று
தெள்ளத் தெளிவாக
தெரிகிறது.
உயிரிழப்பை
தவிர்ப்பவனே
- உண்மையான
தலைவன்.
உயிரிழப்பை
ஏற்படுத்துபவன்
- அழிவின்
தலைவன்.
இன்றைய
காலகட்டத்தில்
நடக்கும் நிகழ்வுகளை
பார்க்கும்போது,
இலங்கை
அதிபர், அழிவின்
தலைவராக விளங்குகிறார்.
பிரபாகரன்
- பல
ஆயிரம் உயிர்களை,
இழப்பிலிருந்து
காப்பாற்றி
இருக்கின்றார்.
இறுதிப்போர்,
கடைசிப்போர்
என்று முழக்கமிட்டு,
இருக்கும்
அனைவரையும்,
முழு
வீச்சில் போரில்
ஈடுபடுத்தி,
கிளிநொச்சியை
தக்கவைக்கின்றோம்
என்று
பல ஆயிரம்
உயிர்களை இழக்கும்படி
செய்திருக்கலாம்.
நல்ல
புத்தி அடைந்துவரும்
பிரபாகரன்,
அவ்வாறு
செய்யவில்லை.
இறுதிப்போர்
என்று முழுவீச்சில்,
கண்மூடித்தனமாக
ஈடுபடாததால்,
இளம்
இலங்கை இராணுவ
வீரர்கள்,
உயிரோடு
கிளிநொச்சியின்
வீதிகளில்
நடந்து வருகின்றார்கள்.
அந்த
இளம் இலங்கை
இராணுவ வீரர்களை,
சாவுக்கு
அனுப்பியது
ராஜபக்சே.
அந்த
வீரர்களின்
உயிரை எடுக்காமல்,
வாழ்வு
கொடுப்பது
பிரபாகரன்.
அந்த
இலங்கை இராணுவ
வீரர்களின்
பெற்றோர்கள்,
நன்றி
சொல்வது,
ராஜபக்சேக்கு
அல்ல; பிரபாகரனுக்கு..
ஆக,
இன்றைய
காலகட்டத்தில்,
பிரபாகரன்,
ஆக்கப்பூர்வமான
தலைவனாக உருவாகி
வருகிறார்.
இலங்கை
அதிபர் ராஜபக்சே,
வெகுவேகமாக,
அழிவின்
தலைவராக மாறிவருகிறார்.
இலங்கை
அரசு செய்த
மாபெரும் தவறு:
ஆட்கள்
நடமாட்டமில்லாத
தெருக்கள்,
கோவில்கள்,
மருத்துவமணைகள்
என்று படம்
பிடித்து வெளியிட்டது.
இந்தியர்களோடு
ஒப்பிட்டு
பார்க்கும்போது,
இலங்கையில்
வாழும் மக்கள்,
சிங்களவர்களும்
சரி, தமிழர்களும்
சரி, சூது
- வாது
தெரியாதவர்கள்.
நாம்
கற்றுக் கொடுப்போம்,
அவர்களுக்கு
சூது - வாதினை.
அடுத்த
முறை, ஒரு
ஊரைக் கைப்பற்றினால்,
உடனே
படம் பிடித்து
வெளியிட்டு
விடாதீர்கள்.
மற்ற
ஊர்களிலிருந்து
ஆட்களை காசு
கொடுத்து,
லோரிகளிலும்,
பேருந்துகளிலும்
கூட்டிக் கொண்டுவந்து,
வீதிகளில்
நடமாட விடுங்கள்.
கோவில்களில்
பூசை நடப்பதுபோல்
செட்டப் செய்துவிட்டு
படம் எடுங்கள்.
அந்த
மக்களுக்கு
வசனம் எழுதிக்
கொடுத்து,
பேட்டி
எடுத்து வெளியிடுங்கள்.
வாழும்
மக்களுக்கே
சுதந்திரம்
இல்லாத நிலையில்,
பத்திரிக்கை
சுதந்திரம்
எதற்கு. ஆக,
மிக எளிதாக
கிளிநொச்சியில்
இயல்பு வாழ்க்கை
என்று செட்டப்
செய்து, உலகத்தினை
நம்ப வைத்து
விடலாம்.
மக்கள்
நடமாட்டமில்லாத
கிளிநொச்சியை
கைப்பற்றியதால்,
பெருமை
நிலைத்து நிற்கவில்லை.
ஆக,
இலங்கை
அரசு, தற்பொழுது
உண்மையை உணர்ந்து
கொண்டது:
பிரபாகரன்,
பழைய
பிரபாகரன்
இல்லை.
இன்றைய
பிரபாகரன்,
போர்
நிறுத்தத்துக்கு
தயாராக இருக்கின்றார்.
இந்தியாவோடு
நட்புறவை ஏற்படுத்த
முயற்சி எடுக்கின்றார்.
முரட்டுத்தனமாக,
கண்ணுக்கு
கண் என்ற முறையில்,
போரில்
ஈடுபடாமல்,
போரை
தவிர்க்கின்றார்.
உலக
மக்களின் பார்வையில்,
பிரபாகரன்,
தலைசிறந்த
தலைவராக உருவாகி
வருகிறார்.
இந்த
எதிர்பாராத
மாற்றத்தினால்,
ராஜபக்சே
தடுமாறி இருக்கின்றார்.
இலங்கை
அரசின் புலிகளின்
மீதான தடை என்பது
அரசியல் தீர்வின்
தொடக்கம்.
இதன்
மூலம், இலங்கை
மண்ணில், இனி
உயிரிழப்புகள்
நின்றுவிடும்.
புதியதோர்
அரசியல் இயக்கம்
ஒன்றை உருவாக்கலாம்.
அல்லது
எந்தவொரு இயக்கமும்
இல்லாமல்,
மக்கள்
தங்கள் பிரதிநிதிகளை
தேர்ந்தெடுத்து,
மக்களவைக்கு
அனுப்பலாம்.
மக்களவையின்
பிரதிநிதிகளின்
எண்ணிக்கைதான்
- ஜனநாயகத்தின்
சக்தி.
அந்த
எண்ணிக்கையை
எப்படி அதிகரிப்பது
என்று கேட்டால்,
நம்
முன்னோர்களின்
வழிமுறையை
பின்பற்றினால்
போதுமானது.
நம்
முன்னோர்கள்
என்றால்,
திருவள்ளுவர்,
பாரதியார்
என்று எண்ணிவிடாதீர்கள்.
சமீப
கால முன்னோர்கள்
கண்ட வழிமுறை.
ஒரு
ஓட்டுக்கு ஐந்து
டாலர், மக்களை
விலைக்கு வாங்கி
விடலாம்.
அல்லது
சில சூட்கேஸ்
பெட்டிகள்,
மக்களின்
பிரதிநிதிகளை
விலைக்கு வாங்கி
விடலாம்.
மக்கள்
பிரதிநிதிகளின்
எண்ணிக்கையை
எட்டிவிட்டால்,
நீங்க
வைச்சதுதான்
சட்டம்.
நினைத்தால்,
அரசியலமைப்பையே
மாற்றி அமைக்கலாம்.
நாளைய
தலைவர்களை
கேட்டுக்
கொள்வதெல்லாம்,
மனிதனை
மனிதனாக பாருங்கள்.
அனைத்து
மக்களுக்கும்
- சம
உரிமை வழங்குங்கள்.
ஆக,
இலங்கைக்கு
தேவை - ஒரு
சிங்களத் தலைவன்
இல்லை.
ஒரு தமிழ்
தலைவனும் இல்லை.
இலங்கையின்
தேவை - மக்களின்
தலைவன் ஒருவன்.