It is not by-election. It is Buy Election.
  • Buy Election Three hundred years ago, Benjamin Franklin opposed payment of salaries to government executives and made the following statement.

    Sir, there are two passions which have a powerful influence in the affairs of men. These are ambition and avarice—the love of power and the love of money. Separately, each of these has great force in prompting men to action; but, when united in view of the same object, they have, in many minds, the most violent effects.

    Place before the eyes of such men a post of honor, that shall, at the same time, be a place of profit, and they will move heaven and earth to obtain it.

    The vast number of such places it is that renders the British government so tempestuous. The struggles for them are the true source of all those factions which are perpetually dividing the nation, distracting its councils, hurrying it sometimes into fruitless and mischievous wars, and often compelling a submission to dishonorable terms of peace.

    கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பெஞ்சமின் பிராங்களின் சொன்னது. அரசாங்க பதவிக்கு வருபவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிச்சு சொன்னார்.

    மனிதனுக்கு பதவி ஆசையினால் காரியம் செய்வான். பண ஆசையினாலும் காரியம் செய்வான். இரண்டும், அதாவது, பதவியும், பணமும், ஒரே இடத்தில் கிடைக்கிறதென்றால், அதனை அடைவதற்கு, மனிதன் ஆகாயத்தையும், பூமியையும் அழிக்கக்கூட தயங்க மாட்டான், என்று எச்சரிக்கின்றார்.

    ஆக, இன்றைய காலகட்டத்தில், தேர்தலுக்கு பணத்தை செலவழிப்பதென்பது, பெரிய இலாபத்துக்குபோடும் முதலீடாக கருதப்படுகிறது. ஆதலால், பணத்தை செலவழிக்க யாருக்கும் வெட்கமில்லை.

    இது, உண்மையிலேயே, நல்லதோர் முன்னேற்றம்.

    பில்டர் காப்பி குடிப்பவர்கள், பில்டர் காப்பியைவிட்டு வேறு எந்தவித பானத்தையும் அருந்தமாட்டார்கள். அதுபோல், நாயர் கடை சாயா குடிப்பவர்கள், வேறு எந்தவித பானத்தையும் அருந்த மாட்டார்கள். அந்த பானத்துக்கு அடிமையாகி விடுவார்கள்.

    இப்ப அப்படி இல்லை. இந்தாங்க கோகோ கோலா; அல்லது இந்தாங்க பெப்ஸி என்று பழக்கப்படுத்திவிடுவதால், மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது.

    அடுத்த தடவை கோக், பெப்ஸி வேலைக்கு ஆகாது. குளிர்ந்த பீர் வேண்டும் என்று கேட்பாங்க.

    அந்தக்காலத்தில், கட்சியின் கொள்கை, சித்தாந்தம், வேதாந்தங்களுக்குள் மக்கள் சிக்கிக்கொண்டு அடிமையாகி வாழ்க்கையை இழந்து விடுவார்கள். வீட்டில் எங்கும் கட்சித்தலைவர்களது படம். கட்சி கலர் வீடெங்கும். கட்சி சொன்னபடிதான் கல்யாணம்.

    இளையராஜா சொல்கின்றபோது, அண்ணன் பாவலர் வரதராஜன், கம்யூனிஸ்ட் கொள்கையில் சிக்கிக்கொண்டார். எங்களையும், அந்த கம்யூனிஸ்ட் உண்டியலுக்குள் திணித்து இருப்பார். நாங்க எப்படியோ தப்பிச்சிட்டு, வெளியே வந்துட்டோம்.

    கண்ணதாசன் சொல்வாராம், “நான் நாத்திகனாக இருக்க வேண்டும் என்பது ஆண்டவனின் கட்டளை,” என்று. எப்படியோ தப்பித்து வந்துவிட்டார், கண்ணதாசன்.

    ஆக, இந்த கால மக்கள், கட்சிகளின் வேதாந்தங்களில் சிக்கிக் கொள்வதில்லை. அப்படி சிக்கிக்கொண்டவர்கள், எந்த தேர்தலாக இருந்தாலும் சரி, தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே சின்னத்துக்குத்தான் ஓட்டு போடுவார்கள்.

    இன்று, மக்கள் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுகிறார்கள். நல்லதோர் சமுதாய முன்னேற்றம்.

    அதுவும், போன தேர்தலைவிட, இந்த தேர்தலுக்கு ஓட்டின் விலை அதிகரித்து இருக்கின்றது. அது நம் மக்களுடைய பொருளாதார முன்னேற்றத்தை காட்டுகிறது.

    ஆக, இந்த தேர்தல் வெற்றியின் உண்மை - பணபலம் அல்ல. உண்மையென்னவென்றால், கட்சிகளின் கொள்கை, சித்தாந்தம், வேதாந்தம் - பலவீனமடைந்து வருகின்றது.

    கட்சிகள் பலவீனம் அடைந்து, கூட்டணிகள் உருவாகின. இப்பொழுது, பணபலத்தால், கூட்டணிகளின் கொள்கைகள் பலவீனமடைந்து வருகின்றது.

    பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதால், எந்தவொரு கட்சியிலும், யாரும் நிரந்தரமாக தங்கிவிடுவதில்லை. இது மக்களுக்கு கட்சி என்ற கூண்டிலிருந்து கிடைத்த விடுதலை.

    ஆக, பணத்தை மக்களுக்கு கொடுத்து, தங்களது கொள்கைகளை, சித்தாந்தங்களை, கட்சிகள் மறக்கடிக்கின்றன. மக்கள் மனதில் கொள்கைகள் இல்லாத நிலையில், கட்சிகளும் இல்லாத நிலையாகிவிடும்.

    மக்கள், காசு வாங்குவதை பழித்துச் சொல்லாதீர்கள். எதுவுமே, சரியில்லாத நேரத்தில், காசு வாங்காமல் ஓட்டுப் போடுகிறவன் - முட்டாள்.

    அடுத்து, பொதுத் தேர்தல்.

    பொதுவாக ஒரு எண்ணம், இந்த மாதிரி, பணத்தை செலவு செய்து, இடைத்தேர்தலில் மட்டும்தான் ஜெயிக்க முடியும். பொதுத் தேர்தலில் ஜெயிக்க முடியாது என்று.

    அது தவறான எண்ணம். இந்த முறையில், பொதுத் தேர்தலிலும் ஜெயிக்க முடியும்.

    இது முழுக்க முழுக்க வியாபார மேலாண்மை. அதாவது, Business Management.

    சம்பளம் கொடுத்து ஆட்களை வேலைக்கு வைத்து; உனக்கு இந்த தொகுதி என்று பொறுப்பு ஒப்படைத்து; செலவுக்கு பணம் கொடுத்து; அடைய வேண்டிய இலக்கை கொடுத்து; இலக்கை அடைவதற்கு தேவையான ஆட்களை கொடுத்து; வெற்றி அடைந்தால் ஊக்கத்தொகை அளித்து.

    ஆக, இது முழுக்க முழுக்க வியாபாரம்.

    பொது வாழ்க்கை; சேவை; வாலிண்டர் - அதெல்லாம் எதுவும் கிடையாது.

    இன்னைக்கு நிலமையில், பொது வாழ்வு என்பது பெஸ்ட்.

    காந்தியின் தொல்லை - சத்யாகிரகம், அஹிம்சை - எதுவும் இல்லை. ஆங்கிலேயரின் அடக்குமுறை, சிறைவாசம் - எதுவும் இல்லை. பொது வாழ்வில், செம துட்டு - எல்லாம் கோடிகள். பொது வாழ்வில், பதவி, அந்தஸ்து, பேரு, புகழ்.

    இதெல்லாம் சிறப்பாக எடுத்துச் சொன்னா - இளைய சமுதாயம் ஓடிவரும், அரசியலுக்கு.

    கேலி, கிண்டல் ஒதுக்கிவிட்டு பார்த்தால், மாபெரும் மாற்றம் தேவை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

    The only way you can manage change is to create it. And create change Now.