எதிர்கால
திசையைக் காட்டும்
தினமணி
-
பத்திரிக்கைகள்,
கடந்தகாலத்தின்
நிகழ்வுகளை
பதிவுசெய்யும்
ஏடாகமட்டும்
இல்லாமல்,
எதிர்காலத்தில்,
நாடு
செல்லும் திசையையும்,
வாசகர்களுக்கு
எடுத்துக்காட்ட
வேண்டும்.
தினமணி,
சமுதாய
பொறுப்போடு,
சிறப்பாக
செயல்படுகிறது.
அமெரிக்காவில்,
ஒபாமா
பதவியேற்பை
ஒட்டி, 'காந்தி
கண்ட கனவு'
என்ற
தலைப்பில்,
கட்டுரை
வெளியிட்டது.
அந்த
கட்டுரையில்,
அமெரிக்க
ஜனநாயகத்தைப்பற்றியும்,
இந்திய
ஜனநாயகத்தைப்பற்றியும்
தெளிவாக எடுத்துச்
சொல்லியிருந்தார்கள்.
அமெரிக்காவில்,
ஒரே கொடி
- அந்த
தேசத்துக்
கொடிதான்.
கட்சிகளுக்கு
கொடி கிடையாது.
தேர்தலுக்கு
சின்னமும்
கிடையாது.
மக்கள்,
வேட்பாளர்களின்
பெயர்களைப்
படித்துப்
பார்த்து ஓட்டுப்போட
வேண்டும்.
நாட்டின்
தலைவரை, மக்கள்
நேரடியாக
தேர்ந்தெடுக்கின்றார்கள்.
அப்படி
தேர்ந்தெடுக்கப்படுபவர்தான்
- அமெரிக்க
ஜனாதிபதி.
ஆரம்பகாலத்தில்,
போட்டியிடும்
வேட்பாளர்களில்,
முதலாவதாக
வருபவர் -
ஜனாதிபதி;
இரண்டாவதாக
வருபவர் -
உதவி
ஜனாதிபதி என்று
இருந்தது.
தேர்தலின்போது,
கடுமையாக
விமரிசித்துவிட்டு,
இருவரும்
சேர்ந்து,
வெள்ளை
மாளிகையில்
வாழுவதென்பது,
நடைமுறைக்கு
ஒத்துவரவில்லை.
ஆதலால்,
உதவி
ஜனாதிபதியை,
தேர்தலுக்கு
முன்னமே தேர்வு
செய்து,
அறிவிக்கும்படி
மாற்றியமைக்கப்பட்டது.
ஜனாதிபதி
- உதவி
ஜனாதிபதி,
மற்றும்
அவர்களது
செக்கரட்டர்ரி,
அதாவது
அமைச்சர்கள்,
எல்லாம்
வெள்ளை மாளிகையிலிருந்து
செயல்படுவார்கள்.
ஆக,
இந்த
எக்ஸ்ஸிகுடிவ்
கிளை, ஜனநாயகத்தின்
தனி கிளை.
அதேபோல்,
லெஜிஸ்லேட்டிவ்
கிளை - தனி
கிளை. அவர்கள்
தான், நம்மளோட
பாராளுமன்ற
உறுப்பினர்கள்.
அதாவது,
மக்கள்
பிரதிநிதிகள்.
மூண்றாவது
கிளை, ஜூடிஸியல்
கிளை. ஒபாமாவுக்கு
பதவிப் பிரமாணம்
செய்துவைக்கின்றாரே,
இவர்தான்
- ஜான்
இராபர்ட்ஸ்.
ஜான்
இராபர்ட்ஸ்,
அமெரிக்காவின்
தலைமை நீதிபதி.
நீதித்துறையில்,
ஒன்பது
நீதிபதிகள்.
இந்த
ஒன்பது நீதிபதிகள்
அடங்கிய நீதித்துறை
- மற்ற
இரு துறைகளுக்கும்
இணையானது.
எங்கேயாவது
பிரச்சனையென்று
வந்தால், இந்த
ஒன்பது நீதிபதிகளின்
தீர்ப்புதான்
இறுதியானது.
ஜனாதிபதியாக,
நான்கு-நான்கு
என்று எட்டு
வருடங்கள்தான்
பொறுப்பில்
இருக்க முடியும்.
மக்கள்
பிரதிநிதிகள்,
ஆறு
ஆண்டுகளுக்கு
ஒரு முறை தேர்தலை
சந்தித்து,
மக்களின்
ஆசிபெற்று,
செனட்
சபைக்கு தொடர்ந்து
வரமுடியும்.
ஆனால்,
இந்த
நீதிபதிகள்,
ஒரு முறை
பதவிப் பிரமாணம்
செய்து, நீதிபதியாக
ஆகிவிட்டால்,
சாகும்வரை,
அவர்கள்
அந்தப் பதவியில்
இருக்க முடியும்.
ஆக,
அந்த
நீதிபதிகள்,
எந்தவித
அச்சமும் இல்லாமல்,
வேறு
எந்தவித எதிர்பார்ப்பும்
இல்லாமல்,
நீதியை
வழங்க முடிகின்றது.
பொதுவாக,
இந்தக்கால
அமெரிக்கர்கள்,
ஏதாவது
ஐடியா தோன்றினால்,
அதை பேட்டண்ட்
செய்துவைத்து
விடுவார்கள்.
வேறு
யாரும் அதை
உபயோகிக்க
முடியாது.
நல்ல
வேளை, அவர்களது
அரசியலமைப்பை
அவ்வாறு செய்யவில்லை.
யாரு
வேண்டுமானாலும்
அறிந்து உபயோகப்படுத்திக்
கொள்ளலாம்.
ஆக,
தினமணி,
தங்களது
கட்டுரைகளின்மூலம்,
நாடு
செல்ல வேண்டிய
திசையையும்
காட்டுகிறது.
அது மிகவும்
பாராட்டப்படவேண்டிய
விசயம்.