Robert Walpole - World's First Prime Minister
  • Robert Walpole - World's First Prime Minister When King George I arrived in England, he knew little about British politics nor could he speak very much English. George therefore became very dependent on the Whigs, who had arranged for him to become king. This included Walpole who was made Chancellor of the Exchequer in 1715.

    King used to ask Robert Walpole to speak on his behalf. So Walpole had become the important, prime person. Thus he got the title, Prime Minister. That habit of requesting the prime person to assume the Prime Minister office and run the Government on King's or Queen's behalf is still being followed.

    Queen invites or appoints the leader of the largest party to the post of the Prime Minister. In India, instead of King or Queen the President invites the leader of the largest coalition to form the Government.

    Walpole was such a powerful figure in the government he became known as Prime Minister, the first in Britain's history. He was also given 10 Downing Street by George, which became the permanent home of all future Prime Ministers.

    முதலாம் ஜார்ஜ், 1714 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மன்னரானார். அவருக்கு, இங்கிலாந்தின் அரசியலும் தெரியாது. ஆங்கிலமும் சரியாக பேசத் தெரியாது. எல்லாவற்றுக்கும் நிதித்துறை செயலராக இருந்த ராபர்ட் வால்போலையே நம்பி இருந்தார், மன்னர் முதலாம் ஜார்ஜ்.

    முக்கிய கூட்டங்களில், மன்னர் பேசாமல், ராபர்ட் வால்போலையே பேச அழைத்தார். நிர்வாக முக்கிய முடிவுகளை, ராபர்ட் வால்போலிடம் எடுக்க அனுப்பி வைத்தார். ராபர்ட் வால்போலுக்கு வசதியாக தங்க, 10, டவுனிங் தெரு, மாளிகையை வழங்கினார். இந்த மாளிகை, பாராளுமன்றத்துக்கு அருகே அமைந்து இருந்ததால், ராபர்ட் வால்போல் எப்பொழுதும் பாராளுமன்றத்தில் எல்லா கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.

    இப்படியாக, ராபர்ட் வால்போல், நிர்வாகத்தில் மிக முக்கியமானவர் ஆனார். அவரை, மக்கள், பிரதம மந்திரி என்று அழைக்க ஆரம்பித்தனர். அன்று, முதலாம் ஜார்ஜ் மன்னர் திறமையற்றவராக இருந்ததாலும், ராபர்ட் வால்போல் திறமையானவராக இருந்ததாலும், நிர்வாக அதிகாரம், மன்னரிடம் இருந்து, பிரதம மந்திரியின் கைக்கு மாறியது.

    ஆக, அன்று, முதலாம் ஜார்ஜ் மன்னன், தன்னால் நிர்வாகத்தை சரிவர செய்ய முடியாத காரணத்தால், ராபர்ட் வால்போலை நிர்வாகத் தலைமை ஏற்க அழைத்தார்.

    அதே வழிமுறையைப் பின்பற்றி, இன்று, இங்கிலாந்தில் ராணியும், இந்தியாவில் ஜனாதிபதியும், நம் ஊரில் கவர்னரும், மெஜாரிட்டி கட்சி தலைவரை, நிர்வாகத் தலைமை ஏற்க அழைக்கின்றார்கள்.

    ஆக, பிரதம மந்திரி பதவி, மக்களாட்சியின் தத்துவப்படி, மக்களால் உருவாக்கப்பட்டது அல்ல. பிரதமர் பதவி, முதலாம் ஜார்ஜ் மன்னரால், எதிர்பாராதவிதமாக உருவாக்கப்பட்டது.

    1739 இல், முதலாம் ஜார்ஜ் மன்னர் போய், இரண்டாம் ஜார்ஜ் மன்னர் மகுடம் சூட்டினார். இந்த காலகட்டத்தில், அரசு நிர்வாகத்துக்கு, இரண்டு தலைமைகள் என்பதுபோல் ஆகிவிட்டது. ஒருவர் மன்னர். மற்றொருவர் பிரதம மந்திரி. அரசு நிர்வாகத்தில் குழப்பம் ஆரம்பமாகி விட்டது.

    இரண்டாம் ஜார்ஜ் மன்னர் தலைமையில், இங்கிலாந்து, ஸ்பெயின் நாட்டோடு போரில் ஈடுபட்டது. பிரதமர் ராபர்ட் வால்போல், இந்த போர் தேவையற்றது என்று சொல்லி, சரியான ஆதரவை தரவில்லை.

    நிர்வாகத்தில் இரண்டு தலைவர்கள் இருந்ததால், படைத்தளபதிகள், மற்ற மந்திரிகள், யாருடைய ஆணையை செயலாற்றுவது என்று குழப்பம். ஆதலால், அரசு நிர்வாகம் செயலற்ற நிலைக்கு ஆளானது. ஸ்பெயின் நாட்டின்மீது நடத்திய போரே, இங்கிலாந்து மன்னன் தலைமையில் நடை பெற்ற கடைசி போராக ஆனது. அதற்கு பின்னால் நடந்த போர்கள் எல்லாம், பிரதம மந்திரியின் தலைமையில் நடந்தது. ஆக, இப்படியாக, மன்னராட்சி அழிந்து, மக்களாட்சி மலர்ந்தது.

    இங்கிலாந்தின் அரசியல் அமைப்பு, முதல் கோணல், முற்றிலும் கோணல் என்று குழப்பமானது. உண்மையென்னவென்றால், இங்கிலாந்துக்கு, இதுநாள்வரையிலும், அரசியல் அமைப்பு, அதாவது, கான்ஸ்டிடூசன் என்று எதுவும் கிடையாது. நமக்குகூட இந்திய அரசியல் அமைப்பு என்று எழுத்து வடிவம் இருக்கின்றது. ஆனால், இங்கிலாந்துக்கு கிடையாது.

    அந்தக்காலத்தில், இங்கிலாந்தில் வாழ்ந்த நல்ல மனிதர்கள், இங்கிலாந்தின் அரசியலமைப்பை மாற்றி, குழப்பங்களை நீக்கி, தெளிவுபடுத்த முயன்றனர். ஆனால், பழமையில் ஊறிப்போன அரசியல்வாதிகள், மாற்றங்களுக்கு இடம் தரவில்லை. அந்த நல்ல மனிதர்கள்தான், பிற்காலத்தில், புதிய உலகம், அதாவது, அமெரிக்காவுக்கு சென்று, அங்கு நல்லதோர் மக்களாட்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

    இன்றைக்கு, நாம் சந்திக்கும் அரசியல் குழப்பங்களைத்தான், முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், இங்கிலாந்தில் வாழ்ந்த மக்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. குறைகளையெல்லாம் நன்கு அறிந்து, அந்த குறைகளை தீர்க்கும் புதிய வழிமுறைகளையும் ஆராய்ந்து, தெளிவு பெற்று உருவாக்கப்பட்டதே, அமெரிக்க அரசியல் அமைப்பு சாசனம்.

    கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவில், ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் பிராங்களின், தாமஸ் ஜெப்பர்சன் என்று அமெரிக்காவின் அடித்தளம்போட்ட தேசதந்தைகள் செய்த காரியத்தைத்தான், இன்றைய காலகட்டத்தில், இந்தியாவில் உள்ள பொறுப்பான தலைவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.

    ராபர்ட் வால்போல், உலகின் முதல் பிரதம மந்தியாவார். மன்மோகன் சிங், இந்தியாவின் கடைசி பிரதம மந்திரியாவார்.

    இனி, இந்தியாவில், மக்கள், ஜனாதிபதியை நேரடியாக தேர்வு செய்வார்கள்.