பிரபாகரன், இன்று சுதந்திர பறவை
  • Prabhakaran Free Bird மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் இருந்து, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரு சுரங்க பாதை இருந்தது என்று சொல்வார்கள். ஆங்கில படங்களில், ஹிட்லரின் பதுங்கு அறைகளைப் பார்த்து வியந்தது உண்டு. இப்பொழுது, இங்கு, பிரபாகரனின் பதுங்கு அறைகளை பார்த்து வியக்கும்படி இருக்கின்றது.

    கண்டெயினர்களைக் கொண்டு விமான பாதுகாப்பு தளங்கள்; கிட்டத்தட்ட ஆறு விமான ஓடுதளங்கள்; நிறைய பாதுகாப்பு பதுங்கு அறைகள்; பெட்ரோலை பத்திரமாக பூமிக்கடியில் பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள்.

    ஒரு வசதிகளும் இல்லாத நிலையிலும், உலகமே வியக்கும்படி, நிறைய சாதனைகளை செய்து இருக்கிறார்கள், பிரபாகரனும் அவரது குழுவினரும்.

    உண்மையிலேயே, நாம எல்லோரும், ராஜபக்சேவுக்கு நன்றி சொல்ல வேண்டும். ராஜபக்சேதான், இப்பொழுது, உலகுக்கு, பிரபாகரனின் சாதனைகளை படங்களின்மூலம் எடுத்துச் சொல்கிறார்.

    கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் காலம், பிரபாகரன், காட்டில் சிறைவைக்கப்பட்டு இருந்தார். இன்று ராஜபக்சேமூலம், பிரபாகரனுக்கு விடுதலை. இப்பொழுது, பிரபாகரன் சுதந்திரமாக பூவுலகை வலம்வந்து கொண்டு இருக்கின்றார்.

    செய்த குற்றத்துக்கு, நிச்சயம் தண்டனை உண்டு. சில சமயம், நீதிமன்றம் தண்டிக்கும். சில சமயம், தெய்வம் தண்டிக்கும். தெய்வ நம்பிக்கை இல்லாவிடில், தர்மம், நியாயம், சத்தியம் தண்டிக்கும்.

    ஆக, காட்டில், பதுங்கு குழிகளில் அடைபட்டு இருப்பதும் - சிறை தண்டனையே.

    ஆக, பிரபாகரன் செய்த தவறுகளுக்கு, காட்டில் சிறை தண்டனை அநுபவித்து விட்டார். தண்டனை காலம் முடிந்து விட்டதால், இப்பொழுது பிரபாகரனுக்கு விடுதலை.

    சமீபகாலமாக பிரபாகரன் தவறு செய்வதை நிறுத்தி விட்டார். ராஜபக்சே தவறு செய்து கொண்டு இருக்கின்றார். வின்ஸ்டன் சர்ச்சில், இரண்டாம் உலக்ப்போரில் வெற்றி வாகை சூடினார். ஆனால், உடனேவந்த தேர்தலில் தோற்றுவிட்டார்.

    வின்ஸ்டன் சர்ச்சில், 1945 தேர்தலில் தோற்காமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கும் சுதந்திரம் கிடைத்திருந்திருக்காது. சிலோனுக்கும் சுதந்திரம் கிடைத்திருந்திருக்காது.

    ராஜபக்சே மிலிட்டரி விளையாட்டை விளையாட பிரபாகரனை அழைத்தார். பிரபாகரன், மிலிட்டரி விளையாட்டுக்குவராமல், அரசியல் விளையாட்டை ஆரம்பித்து விட்டார்.

    இப்பொழுது, ராஜபக்சே, தன்னந்தனியாக மிலிட்டரி விளையாட்டு விளையாடிக்கொண்டு இருக்கின்றார். தன்னந்தனியாக விளையாடும்போது, வெற்றியும் நானே; தோல்வியும் நானே, என்றாகி விட்டது.

    விளையாடும்போது, ஒரு இலக்கை வைத்துக் கொள்கிறோம். வெற்றியும், தோல்வியும் அந்த இலக்கை அடைவதில்தான் இருக்கின்றது.

    அப்படி, ராஜபக்சே வைத்துக்கொண்ட இலக்கு - கிளிநொச்சியை கைப்பற்றுவது அல்ல; முல்லைத் தீவை கைப்பற்றுவது அல்ல; பிரபாகரனின் சாவுதான் இலக்கு என்றாகி விட்டது.

    ஆதலால், ராஜபக்சேவுக்கு, கிளிநொச்சியைக் கைப்பற்றினாலும் வெற்றி நிலைத்து நிற்கவில்லை; முல்லைத் தீவை கைப்பற்றினாலும் வெற்றி நிலைத்து நிற்கப்போவதில்லை.

    முல்லைத் தீவை கைப்பற்றியபிறகு, மிலிட்டரி வேலையை தொடர முடியாது. மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும். மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதுதான், பெரிய சேலஞ்.

    ராஜபக்சே, பிரபாகரனை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்க வேண்டும். அதன் பிறகு, பிரபாகரன் பேச்சு வார்த்தைக்கு வரமறுக்கின்றார்; அல்லது அவரது கோரிக்கைகள் நியாயமானதாக இல்லை; ஆதலால் போர் என்று போயிருந்திருக்க வேண்டும்.

    ராஜபக்சே, இனி இலங்கையின் எல்லா பகுதிகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். முன்னேற்றத்தையும் உலகுக்கு காட்ட வேண்டும். வடக்கு பகுதிகளிலிருந்து வரி வசூலிக்க வருவாய் இல்லை; ஆனால், முன்னேற்ற வேண்டும். அதுவும், சம உரிமையோடு, மக்களை முன்னேற்ற வேண்டும். அரசியல் யுத்தம், இனி ஆரம்பம்.
  • Prabhakaran Free Bird இந்த பாப்பா சிரித்த முகத்துடன், கையில் பச்சிளங் குழந்தையோடு இருக்கும் படம், ஜனவரி 13, 2009 இல், இலங்கை தருமபுரத்தில் எடுக்கப்பட்டது. இன்னும் உயிரோடு விளையாடிக் கொண்டு இருக்கின்றது என்று நம்புவோமாக.

    மனிதநேய சமுதாயத்துக்கும், மனிதநேயமற்ற சமுதாயத்துக்கும் உள்ள வித்தியாசம் - மூளைச்சாவுதான்.

    மனிதநேயமுள்ள சமுதாயத்தில், மூளைச்சாவு ஏற்பட்டு இருக்கும் தருவாயில், இயங்கும் உடல் உறுப்புகளை, மற்றவர்களுக்கு தானமாக அளித்து, மனித சமுதாயத்தை வாழவைப்பார்கள்.

    மனிதநேயமற்ற சமுதாயத்தில், அதாவது இன்றைய காலகட்டத்தில், ராஜபக்சே போன்றவர்களின் மூளையில் நோய் ஏற்பட்டுள்ளதால், ஆரோக்கியமான உடல்களையும் அழித்து, மனித சமுதாயத்தை சாகடிப்பார்கள்.

    இலங்கையிலிருந்து வெட்டப்படும் மனித உடல்களின் இரத்தம், நம் முகத்தில்வந்து தெரிக்கின்றது. அதைத்தவிர, உள்ளூர் அரசியல்வாதிகளின் வெட்டிப்பேச்சினால், அவர்களது வாய் எச்சிலும், நம் முகத்தில் விழுந்து நாத்தமடிக்கின்றது.