அமைதியின் அவசியம்
  • Essential Silence March 13, 2009

    இசைக்கு, ஒலியும், அந்த ஒலிகளுக்கிடையில் உள்ள அமைதியும் மிகவும் அவசியம்.

    ஒலிகள் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு, அந்த அமைதியும் முக்கியம்.

    அந்த அமைதியின் கால அளவைக்கொண்டுதான், வெவ்வேறு வகையான இசைகளை படைக்க முடிகின்றது.

    அந்த அமைதி இல்லாமல், வெறும் ஒலி மட்டுமே இருக்குமானல், இடைவெளி இல்லாமல், வெறும் ஒலி மட்டுமே இருக்குமானல், அது இசையாகாது. அது வெறும் சத்தமாகவே இருக்கும்.

    நல்லதோர் இசைக்கு, ஒலியும், அமைதியும் கலந்து இருக்க வேண்டும்.

    இன்றைய காலக்கட்டத்தில், அனைவருமே அமைதியாக அமர்ந்து, சிந்திக்கின்றார்கள்.

    இது, அவர்களுக்குமட்டும் அல்ல, பத்திரிக்கையாளர்களுக்கு, தமிழக மட்டும் இந்திய மக்களுக்கு, மிகவும் அவசியமான அமைதி.

    அமைதியான நதியினிலே, ஓடம் ஓடும்.
  • Essential Silence முன்பெல்லாம், கூட்டணி என்றால், அது காதல் கல்யாணமாக அமைந்திருக்கும். இவர்களுக்கு, அவர்கள் மேல் காதல் மலர்ந்து, அன்பு பொங்கி வழிந்து, கல்யாணமாக மலரும். காதலில் ஊடல், கூடல் கலந்திருக்கும். உற்றார், உறவினர் அனைவரும் ஒன்றுகூடி, திருமணத்தை இனிதே, ஆசிர்வாதத்தோடு நடத்திவைப்பார்கள்.

    மணம்புரிந்த மணமக்களும், இல்லறத்தை இனிதே நடத்துவார்கள். சின்னச்சின்ன சண்டை இருக்கத்தான் செய்யும். பள்ளியறையில், உரசல் இருக்கும். அது மோதல் அல்ல; போட்டி அல்ல; அதில் இவர் வெற்றி, அவர் தோல்வி என்பது கிடையாது. அந்த மோதலில், காதல் இன்பம் கனிந்து பிறக்கும். மோதலுக்குப்பின், அமைதியான நித்திரை இருக்கும். ஆக, மோதலும் அவசியம், அதற்க்குப்பின் வரும் அமைதியும் அவசியம்.

    இவ்வாறு, எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல், வெறும் அன்பினால், காதலினால், அந்த மணமக்கள் ஈடுபட்டு செய்யும் செயலுக்கு, நல்லதோர் பலனாக, மழலைச் செல்வம் கையில் கிடைக்கிறது. அந்த மழலையினால், அந்தக் குடும்பத்தார் அனைவரும் மகிழ்ந்து வாழ்கின்றனர்.

    இது குடும்பத்துக்குமட்டும் அல்ல; நாட்டுக்கும், எல்லாவற்றுக்கும் இந்த முறை பொருந்தும்.

    இன்றைய காலக்கட்டத்தில், இது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, பெண் பார்க்க நாள் குறிக்கப்பட்டு, பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டு, நடத்தும் அரேஜ்ட் மேரேஜ் ஆக மாறி விட்டது.

    என்ன பேசியிருப்பார்கள்; எங்க பையன், அமெரிக்காவில் எம்.பி.ஏ; பெரிய கம்பெனியில் சி.இ.ஓவுக்கு அடுத்த வேலை; நாகர்கோவிலில், நகைக்கடைகாரர் பொண்ணைப் பார்த்தோம். ஐந்து கோடி ரொக்கம், இரண்டு மூட்டை நகை, அது, இதுவென்று, திக்குமுக்காட வைத்து விட்டார்கள்.

    எங்களுக்கும் தெரியும், நீங்க நாகர்கோவிலில் யாரைப் பார்த்திட்டு வந்திருக்கீங்க என்று; அந்தளவுக்கு எங்களாலே ரொக்கம், சீர்வரிசை எல்லாம் செய்ய முடியாது; அதுக்கும் தேவையுமில்லை. எங்கப் பொண்ணு, நல்ல நிறம்; நல்ல படிப்பு.

    அதனாலேதானே நாங்க உங்களைத் தேடி வந்திருக்கோம். இறுதியாக சொல்லுங்க, எவ்வளவு கொடுப்பீங்க என்று. அதுக்கப்புறம், நாங்க முடிவு பண்ணுகிறோம், சம்பந்தம் எங்கே வைச்சுக்கிறதென்று.

    முன்பெல்லாம், டில்லி பாராளுமன்றத்தில் கேட்பார்கள்; தமிழ்நாட்டிலிருந்து, யாரு யாரெல்லாம் வந்திருக்காங்க என்று. காமராஜர் வந்திருக்கார்; ராஜாஜி வந்திருக்கார்; அப்புறம் பி.இராமமூர்த்தி, கேடிகே தங்கமணி, கோசல்ராம், வீரபாகு, காவேரி மணியம் என்று பெயரைச் சொல்லுவாங்க.

    இன்னைக்கு, தமிழ்நாட்டிலே இருந்து, “எத்தனை வந்திருக்கு.”

    ஒரு கேள்வி கேட்கிறேன்; யோசிக்காமல், ஒரு நொடியில் பதில் சொல்லனும்.

    சமீபத்தில், கோடிக் கணக்கில் செலவு செய்து, சட்டமன்றத்துக்கு, திருமங்கலத்திலிருந்து ஒருத்தரை தேர்வு செய்தோமே, அவர் பெயர் தெரியுமா?

    ரொம்ப யோசித்த பிறகு, அவர் ஒரு பெண், அவ்வளவுதான் நினைவில் நிற்கும்படி இருக்கின்றது.

    சட்டசபை என்றவுடன், இரண்டு கண்ணப்பன்மார்கள், அவர்களது தாயகத்திற்கு திரும்பி வந்து விட்டார்கள். அந்த இரண்டு தொகுதிக்கு, இடைத்தேர்தலா அல்லது பொதுத்தேர்தலா, தெரியவில்லை.

    எல்லா இடங்களிலும், எண்ணிக்கைதான் வாழ்க்கை என்றாகி விட்டது.

    ஒரிசாவில், பதினோரு ஆண்டுகள் தொடர்ந்த உறவு. இந்த தேர்தலில் ஒத்துவராததால், சட்டசபையில், நம்பிக்கையில்லா தீர்மானம்.

    பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் எதுக்கு இந்த முடிச்சு. டில்லிக்கு தேர்தல் என்றால், தமிழக அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து போய்விட வேண்டுமா. இலவசம் என்பது வேறு விசயம். ஆனால், தமிழக அரசு நிர்வாகம், ஏன் பாதிப்புக்கு உள்ளாக வேண்டும்.

    தேசிய கட்சி என்றால் பரந்த மனப்பான்மை வேண்டும். தேர்தலில் காலை வாரி விட்டாயா, ஆனாலும், நாங்கள் பெருந்தன்மையாக, ஒரிசாவில் ஆட்சியை தொடர, எங்கள் ஆதரவு தொடரும் என்று இருந்திருக்க வேண்டும். அப்பொழுது, தேசியக்கட்சியின் மதிப்பு, தேசமெல்லாம் மிகுந்திருக்கும். இன்னாசெய்தாரை...வள்ளுவர் வழி, சிறந்த வழி.

    தலைவர்களை, தராசு தட்டில் வைத்து எடைப் பார்ப்பதில்லை இன்று.வெறும் எண்ணிக்கைதான். நாற்பது என்ற எண்ணிக்கைதான் முக்கியமாகி விட்டது.

    தேசத்துக்கு தொண்டு செய்யப்போகும் இவர், நேர்மையானவரா, உண்மையானவரா, சத்தியமானவரா. இவரது கடந்தகால வாழ்க்கையில், தொழிலில், எப்படி நடந்து கொண்டு இருந்திருக்கிறார். உழைப்பால் முன்னேறினாரா; அல்லது அடுத்தவர்களை ஏமாற்றி முன்னேறினாரா. இவருக்கு, நாட்டின்மீதும், நாட்டு மக்களின் மீதும் உண்மையான அன்பு, மதிப்பு இருக்கின்றதா. இவரது நோக்கம் என்ன; பதவிதான் இவரது ஆசையா; அல்லது பதவி மூலம், மக்களுக்கு முன்னேற்றம் கொண்டுவர வேண்டும் என்பது, இவரது விருப்பமா.

    ஆக, இப்படி, தலைவர்களை, எடை பார்க்க வேண்டும்.

    நமது அரசியல் அமைப்பு, அப்படி எடை பார்க்கும்படி இல்லை; அது எண்ணிக்கையில் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது. அதை மாற்றி அமைபது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. மாற்றி அமைப்பதற்கு தடையாக இருப்பவர்கள், லண்டனில் இருக்கும் ஆங்கிலேயர்கள் இல்லை. மாற்றத்துக்கு தடையாக இருப்பவர்கள், தலைமைப்பண்பு இல்லாதவர்கள். அவர்களுக்கு, அவர்கள்மேலேயே நம்பிக்கை கிடையாது. அவர்கள், கூட இருக்கும் கூட்டத்தையே நம்பி இருக்கின்றார்கள்.

    2004இல், தேர்தலுக்குமுன், அனைவருமே சொன்னார்கள். நாற்பதும் கலைஞருக்கே; தேர்தலுக்குபின்னும், அனைவருமே சொன்னார்கள், நூற்றுக்கு நூறு வாங்கிய கலைஞர், நாற்பதும் கலைஞருக்கே என்று. சில மாதங்கள் கழித்து, திராவிட முன்னேற்றக் கழகம் 16 என்றாகி விட்டது. டக்குன்னு, 40 விலிருந்து 16க்கு இறக்கமாகி விட்டது. உண்மையிலேயே, 2004 இல், மக்களின் எண்ணப்படி, கலைஞருக்குத்தான், அந்த 40 வும், மக்கள் அளித்தார்கள்.

    அது ஒரு அருமையான வாய்ப்பு. தவற விட்ட வாய்ப்பு. மிக எளிதாக, 2004 இல், பாரத பிரதமர், கலைஞர் என்றாகி இருந்திருக்கலாம். நாற்பதுக்கு நாற்பது வாங்கி, பிரதமர் பதவியை தவறவிட்டது, மிகப்பெரிய வரலாற்று தவறு. பிரதமர் கருணாநிதி; உதவிப் பிரதமர் மன்மோகன் சிங்.

    பெரும்பாலும், வாய்ப்பு வருகின்ற நேரத்தில், நாம் தயாராக இருப்பதில்லை. நாம் தயாராக இருக்கும் நேரத்தில், வாய்ப்பு வராமலே போய்விடுகின்றது.

    கடந்த ஐந்தாண்டுகளில், தமிழ்நாட்டில் இருந்ததால்தான், அவரது ஆரோக்கியம் சீர் கெட்டது. பிரதமர் கருணாநிதியாக இருந்திருந்தால், நாம் உடைத்திருந்திருக்கலாம், மஹிந்தா ராஜபக்சேயின் முதுகெலும்பை.

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

    மெய்ப்பொருள் என்ன, என்று சிந்தித்து செயலாற்றி இருந்திருக்க வேண்டாமா, 2004இல்.

    டெல்லியில், நமக்கு யாரும், சிவப்பு கம்பளம் விரித்து, வா என்று அழைத்துக் காத்திருப்பதில்லை. இதற்கு முன்பு டெல்லி சென்றவர்கள் எல்லாம், மினிஸ்டருக்கு பிஏவாகவும், எம்பிக்கு செயலாலராகவும்தான், உத்யோகம் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

    சரக்கு இல்லாமல், அங்கேயெல்லாம் போயிக்கவே முடியாது. இன்றைய காலக்கட்டத்தில், சரக்கு இருப்பதால்தான், டெல்லி மக்கள், நம்மைத்தேடி வருகின்றார்கள்.

    இன்றைய பிரச்சனைக்கு வருவோம். எந்த ஒரு விசயத்தையும், முழுமையான கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்.

    டெல்லியில் இருப்பவர்களுக்கு, தமிழ்நாட்டிலிருந்து வேண்டியது என்ன?

    நாற்பது.

    அது எந்த நாற்பதாக இருந்தால் என்ன. அதை ஏன், பிரிச்சு பார்க்கின்றீர்கள்.

    அது கலைஞரோ, ஜெயலலிதாவோ.

    அவுங்க பொறுப்பு என்று முழு பொறுப்பையும் ஒப்படைத்துவிட வேண்டும்.

    நாற்பதுக்கு ஒன்றுகூட குறையக்கூடாதென்று சொல்லி, பொறுப்பை ஒப்படைத்தால், அவர்கள் பொறுப்போடு செயல்படுவார்கள்.

    கலைஞர் என்ன, சிதம்பரத்துக்கு சீட்டுத்தர மாட்டாரா. சிதம்பரத்துக்கு சீட்டு தருவதும், சிதம்பரத்தில், திருமாவளவனுக்கு சீட்டுத்தருவதும், கலைஞரின் முடிவு என்று, பொறுப்பை அளித்து விட்டால், கலைஞர், நாற்பதையும் அள்ளிக் கொண்டு வந்து தருவார்.

    அதேபோல, ஜெயலலிதாவுக்கும், முழு பொறுப்பை கொடுத்திட வேண்டும்.

    பொதுவாக, மஹிந்தா ராஜபக்சேவை எண்ணும்போது, நமக்கு கோபமும், ஆத்திரமும் வருகின்றது. அதே சமயத்தில், கருணாவைப் பார்க்கும்போது, நமக்கு எரிச்சலும், அருவருப்பும்தான் வருகின்றது. ஆனால், என்ன செய்வது, பங்காளிகள்தான் துரோகம் செய்கிறார்கள்