வண்டமரும் பூங்குழலி
  • Living Bush March 14, 2009

    கலைஞரின் பேத்தியின் திருமண விழாவில், வைரமுத்து பேசும்போது, பூங்குழலி என்ற இந்தப் பெயர், கண்ணதாசன் எழுதிய பாடலிலே வந்தது, தனது நினைவுக்கு வந்ததாகச் சொன்னார்.

    நான் அவரை மறுப்பதாக எண்ணிக் கொள்ளக் கூடாது, மறுத்தாலும் குற்றம் இல்லை என்று சொல்லும்போது, அந்த மணப்பெண், பேத்தி பூங்குழலி, சற்றே சினம் கொண்டு, “தாத்தா, என்னோட கல்யாணத்திலே, சண்டை எதுவும் கூடாது,” என்று உரிமையோடு, உரக்கச் சொன்னாள்.

    “கோபப்படாதே பூவே, இது அரசியல் சண்டை அல்ல; இது இலக்கியச் சண்டை.. அரசியல் சண்டையில்தான், முதுகெலும்பு உடையும்; இலக்கியச் சண்டையில், உடம்பெல்லாம், நிமிர்ந்து நிற்க்கும்,” என்று பேத்தியை சமாதானப்படுத்திவிட்டு, இலக்கிய உரையைத் தொடர்ந்தார் தாத்தா.

    இது புராணீக, ஷேத்திரம் என்று சொல்லப்படுகிற, பாடல் பெற்ற ஸ்தலமான எங்கள் கிராமம் - திருக்குவளையிலே உள்ள அம்மனின் பெயர் - வண்டமரும் பூங்குழலி, அந்தக் காலத்திலேயே எவ்வளவு அழகான தமிழிலே வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    ஆக, நாத்திகம் என்று சொல்லிக்கிட்டு, அம்மன் பெயரை வைத்திருக்கின்றீர்கள்.

    வணடமரும் பூங்குழலி - அழகான தமிழ்ப் பெயர் என்பதற்காக வைத்தோமே தவிர, அம்மன் பெயர் என்பதற்காக அல்ல.

    இந்த பெயரைப் பார்க்கும்போது, பெண்களின் கூந்தலில், பூவைச் சூட்டிக் கொள்வதால், அந்த பூவை நாடி, வண்டு வந்து அமர்ந்து விடும் என்பது போல் அல்லவா இருக்கின்றது. ஆக, பெண்களின் கூந்தலுக்கு, இயற்கையிலேயே, மணம் இல்லையென்றும், பூக்களை சூட்டிக் கொள்வதால், மணம் வந்தது என்பது தெளிவாகிறதே.

    திருவிளையாடல் திரைப்படத்தில், பாண்டிய மன்னனுக்கு பெருத்த சந்தேகம் என்று சொல்லி, தண்டோரா அடித்து, மன்னனின் சந்தேகத்தை தீர்த்து வைப்பவருக்கு, ஆயிரம் பொன்காசுக்கள் என்று அறிவித்து, அதில் தருமி பங்கேற்று, சிவனுக்கும், நக்கீரனுக்கும் சண்டை உண்டாகி, நெற்றிக்கண்ணை திறந்து, சுட்டெரித்தபோதிலும், குற்றம் குற்றமே என்று சொல்வாரே, நக்கீரன். ஆக, பெண்களின் முடிக்கு, இயற்கையிலேயே மணம் இல்லை என்பதுதான் உண்மை என்று எண்ணுகின்றேன்.

    அன்றைய காலக்கட்டத்தில், மதுரையில், மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று, யானை கட்டிப் போரடித்தார்களாம். ஆதலால், மக்கள் எந்தவித குறையுமின்றி வளமுடன் வாழ்ந்திருக்கின்றார்கள். அதையும்தவிர, வள்ளுவர், ஒளவையார் என்று, ஒழுக்க நெறிகளை எடுத்துச் சொன்னதால், குற்றங்கள் குறைந்த சமுதாயமாக இருந்தது. ஆதலால், மன்னனுக்கு, அரசவையில் வேலையே இல்லாமல், அந்தப்புரத்தில் ஆராய்ச்சி நடத்தி, அதனை தமிழ் சங்கத்தில், புலவர்கள் மத்தியில் விவாதத்துக்கும் நடந்த நிலை; அது அந்தக்காலம்.

    சரி வாங்கள் பிரச்சனைக்கு வருவோம். மன்னனுக்கு, ஏற்கனவே சந்தேகம் வந்திருக்கின்றது. ஆதலால், நாம் வார்த்தைகளை தெளிவாக உபயோகப்படுத்த வேண்டும். மன்னனின் சந்தேகம், பெண்களின் கூந்தலுக்கு, இயற்கையிலேயே மணம் உண்டா என்பதுதான்; கூந்தல் என்ற வார்த்தைக்குப்பதில் முடி என்ற வார்த்தையை உபயோகிக்கக்கூடாது. அப்புறம், மன்னனின் சந்தேகம் மேலும் வளர்ந்து, எந்த முடி, என்று விவாதம் திசைத்திரும்பிப் போய்விடும்.

    அவையில் இருந்தவர்கள் அனைவரும் வயிறு குலுங்கச் சிரிக்க, பக்கத்தில் அமர்ந்திருந்த, கம்ப்யூட்டர் எந்திரன், எதற்கு, இவர்கள் எல்லாம் இப்படிச் சிரிக்கிறார்கள் என்று கேட்டது.

    அதென்ன காதிலே மாட்டியிருக்கிறே. புளு டூத். அதைக் கழட்டி பைக்குள்ளே வை. அப்புறம், இதென்ன டொக்கு, டொக்குன்னு நோண்டிக்கிட்டு இருக்கே. அது, இந்த பாக்கெட் கம்ப்யூட்டரில், அலர்ட் செட் பண்ணிக்கிட்டு இருக்கேன். அலர்ட் எதுக்கு. ஐந்து மணிக்கு யோகா; ஏழு மணிக்கு மெடிடேஷன். ஏன், பொண்டாட்டிக்கிட்டே பேசுவதற்க்கும் ஒரு அலர்ட் வைக்க வேண்டியதுதானே.

    அதையெல்லாம் தூக்கிப்போடு. இவுங்க பேச்சை முழுமையாக கேளு. எல்லாரும், பல விதமான பழங்கள் தின்னு பல கொட்டைகளைப் போட்ட ஆளுக. இண்டர்நெட் இல்லாத காலத்தில், இண்டர்நெட்டையே முழுங்கிவிடும் அளவுக்கு, கறை கண்டவர்கள்.

    அதுவும், அந்த கண்ணதாசன், தின்னாத பலங்களே இல்லை. நல்லவேளை, கண்ணதாசன், அர்த்தமுள்ள இந்துமதம் எழுதுவதோடு நிறுத்திக் கொண்டார். காந்தி மாதிரி, என் வாழ்க்கையில், நான் நடத்திய சத்திய சோதனைகள் என்று, தன் வாழ்க்கை வரலாற்றை; அதுவும், இளமைக்கால வரலாற்றை, அப்படியே உண்மையாக எழுதியிருந்தால், அதுவும் இலக்கிய நயத்தோடு எழுதியிருந்தால், அனைத்து காவியங்களையும் மிஞ்சி, சிறந்ததாக இருந்திருக்கும்.

    காந்தியையும் கண்ணதாசனையும் இணைத்துப் பார்க்கும்போது, பாவங்க அவர். எங்கப்பன், எங்களுக்கு என்னத்தெ சேர்த்து வைத்துட்டுப் போனான்? என்பார். ஏதோ, அர்த்தமுள்ள இந்துமதத்தினால், பொளப்பு ஓடுகிறது. அதையும், அரசாங்கம் எடுத்துக்கிட்டால், அவரது பொழப்புக்கு என்ன பண்ணுவார். அவருக்கு தெரிஞ்சதெல்லாம், அர்த்தமுள்ள இந்துமதம் - எட்டாவது பாகம், என்ன விலை; இது எத்தனாவது பதிப்பு; இதுவரைக்கும் எத்தனைப் புத்தகங்கள் விற்பனை. அதில் என்ன சொல்லி இருக்கின்றது என்று கேட்டால், அவர் ஏதாவது உளறி இருப்பார் என்றுதான் பதில் வரும்.

    எல்லோரும், கிரேக்க நாட்டு கிழவனை தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடுவார்கள்; சொந்த அப்பன் சொன்ன கருத்துக்களை எவன் படித்து, கேட்டு நடக்கின்றான்.

    அரசாங்கம் கண்ணதாசனின் படைப்புகளை எடுத்துக் கொண்டு, மக்களுக்கு இலவசமாக கொடுப்பீர்கள். அந்த புத்தகமெல்லாம், அடுத்த வாரம், மிக்சர் மடிச்சு பொட்டலம் போடும் காகிதங்களாக மாறிவிடும்.

    இளையராஜா சொல்கிறார். குடும்பத்தோடு ஐரோப்பாவில் சுற்றுலா சென்றிருந்திருக்கின்றார். அங்கு, வென்னிஸ் நகரத்தில், ஓடத்தில் அமர்ந்து, நகர்வலம் சென்று கொண்டு இருக்கின்றார். அப்பொழுது பிள்ளைகள் வீடியோ எடுக்க ஆரம்பித்தவுடன், அந்த சூழ்நிலைக்குஏற்ப ஒரு பாடல் பாடலாம் என்று நினைத்து, பாட ஆரம்பித்திருக்கின்றார்.

    சிந்து நதியின்மிசை நிலவினிலே சேரநன் னாட்டிளம் பெண்களுடனே

    ஐயோ, பொண்டாட்டியைப் பக்கத்தில்வைத்துக் கொண்டு, நம்மபாட்டுக்கு, இப்படி சேர நாட்டு இளம் பெண்களுடனே என்று பாடுகின்றோமே என்று உணர்ந்து, அப்படியே பாட்டை நிறுத்திவிட்டாராம்.

    பாரதி, இப்படி தேச ஒருங்கினைப்புக்கு, பெண்களை வைத்துப் பாடியிருக்கின்றார். பாரதியின் பாட்டை பாடப்போக, நாம பிரச்சனையில் மாட்டிக் கொண்டு விடுவோம் என்றார்.

    ஆக, இந்தப் பூணையும் பாலை குடிக்குமா என்றால்; எல்லா பூணைகளும் பாலை குடிக்கத்தான் செய்யும். பாலைக் குடிச்சாத்தான், அது பூணை.

    அன்றைக்கு, பாட்டுப்போட்டியில் ஒரு பெண் பாடுகிறார்.

    செய். சொன்னதைச் செய்; சொல்லாததை செய்; சூடாவதைச் செய்; ....அப்படியே போய்க்கிட்டே இருக்கு.

    இது பாட்டுப் போட்டி அல்ல; அந்த பாட்டுக்கேற்ப நடனமும் இருக்க வேண்டும் என்பதால், பாட்டின் பாவங்களையும், அவர் மேடையில் காட்ட வேண்டியதாகி விட்டது.

    அன்றைய காலத்தில், பாட்டு சாதரணமாகத்தான் இருக்கும். ஆனால், அந்தப் பாட்டிற்கு, நடனம் ஆடுபவர், ஹெலன், ஆலம், சில்க், ஜோதிலட்சுமி என்று இருந்துவிட்டால்...மிகவும் ரசிக்கும்படி இருக்கும். அவர்கள் எல்லாம், பாட்டின் பொருளை உள்வாங்கிக் கொண்டு, அவர்கள் உள்ளத்திலிருந்து வெளிவரும் பாவங்களை, அவர்களது நடனத்தில் காட்டி இருப்பார்கள்.

    இன்றைய காலத்தில், யாரும் உள்வாங்குவதுமாதிரியே தெரியவில்லை. நடன டைரக்டர், ஸ்டெப்ஸ் ஆடிக்காண்பிக்க, அதை அப்படியே செய்து முடித்துவிடுவார்கள் போலிருக்கு.

    பாட்டு பாடுகின்றவர்களும், நெறையபேர் மொழி தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள். ஆனால், மிக அருமையாக பாடிவிடுகிறார்கள். அதெப்படித்தான், பொருள் புரியாமல், பொருளின் அர்த்தம் புரியாமல், பொருளின் குணத்தை தங்களது குரலில் கொண்டு வருகிறார்களோ, ஆச்சரியமான விசயமாக இருக்கு.

    இனிமையான தமிழ் பாட்டு பாடுகிறீர்களே என்று அருகில் சென்று பேசினால், முஜே, தமிழ் மாலும் நஹி என்று சொல்வார்கள் போலிருக்கு.

    ஆக, பாட்டுப்பாடுவது நல்ல விசயம். ஆனால், உண்மையென்னவென்றால், நல்ல விசயங்களிலும், போலித்தனம் புகுந்துவிட்டது.

    சொல்லவந்த விசயம் என்னவென்றால், ஜார்ஜ் புஷ், தன்னோட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். முதலில், ஒரு மாநிலத்தின் கவர்னராக இருந்தார். அதன்பிறகு, நாட்டின் ஜனாதிபதியாக, இரண்டு முறை மக்கள் தொண்டாற்றினார். இப்பொழுது, அந்த பொறுப்புக்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு, தன்னோட வாழ்க்கையை, இனிதே வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றார்.

    கமலஹாசன், “இந்தியன்" தாத்தா பாத்திரத்தில் முழுஈடுபாடோடு வேலை செய்தார். வேலை முடிந்தவுடன், அந்த பாத்திரத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அப்படி வெளியேவந்ததால், அதன்பிறகு, “அவ்வை சண்முகி,” என்ற பாத்திரத்தில் முழுஈடுபாட்டோடு வேலை செய்ய முடிந்தது. எந்தவொரு பாத்திரத்திலும் மாட்டிக் கொள்ளக் கூடாது.

    ஆக, கலைஞர் என்றால் அரசியல் என்று பொருள் அல்ல; இலக்கியம் என்று பொருள். ஆக, கலைஞர் இலக்கியத்துக்கு தொண்டாற்ற வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில், அரசியலுக்கு தொண்டாற்ற ஆயிரம்பேர் இருக்கின்றார்கள். இலக்கியத்துக்குத்தான் ஆள் தேவை.

    தப்புத்தப்பாக தமிழ் எழுதுகின்றவனையே, “வண்டமரும் பூங்குழலி,” இவ்வளவு படைக்கச் செய்துவிட்டது. கலைஞரின் தொண்டு தமிழுக்கு கிடைத்தால், தமிழ் மிகச் சிறப்பாக வளரும்; வாழும்.

    ஒரு விசயம் சொல்ல மறந்து விட்டேன். அன்று, சீருடை அணிந்த சிலோன் இளம்பெண்கள், தோளில் துப்பாக்கியோடு, வீரத்தமிழ் பேசும் பேச்சை கேட்க வாய்ப்பு கிடைத்தது.

    ஆஹா. அற்புதமான தமிழ். அது எப்படி இருந்தது என்றால், வைரமுத்துவின் கவிதை; கலைஞர் வசனம்; சிவாஜி கணேசனின் முகபாவங்களோடுகூடிய வசனப் பேச்சு; பேச்சோடுகூடிய நடிப்பு; இவையத்தனையும் கலந்த கலவையாக அதிசயிக்க வைத்தது.

    அந்த சிலோன் இளம்பெண்கள், சீவிமுடிச்சு சிங்காரிச்சு; கருத்த நெற்றியில் பொட்டும் வைத்து; கண்டாங்கி சேலையைக் கட்டிக்கொண்டு, தலை நெறைய பூவை வைத்துக் கொண்டு, தன் மனம் நெறைஞ்ச கணவனோடு, காதல் கவிதைப் பாடி, பறந்து திரியவேண்டும், சுதந்திரமாக