தமிழகத்தில் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு
  • Jayalalitha Government சோனியா காங்கிரஸ், இப்பொழுது ராகுல் காங்கிரஸாக மாறிவிட்டது.

    நம்ம ஊரிலேதான், வீல் சேரிலே இருந்தாலும், ஓய்வு கொடுக்காமல், எல்லாம் அப்பாவின் முடிவின்படி என்று சொல்லிவிட்டு, பிள்ளைகள் பொறுப்பு எடுத்துக்கொள்வதில்லை.

    அங்கேபாருங்க, ராகுலை. அம்மா, நீ ஓய்வெடுத்துக்கோ. இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று முழுப்பொறுப்பையும் கையில் எடுத்துக் கொண்டு, சிறப்பாகவே செயல்படுகிறார், ராகுல்.

    சோனியாவுக்கு அதிகாரம் இருக்கும்வரைதான், காங்கிரஸ் - திமுக உறவு. இப்ப அதிகாரம் எல்லாம் ராகுல் கையில். ஆக, உறவு தொடரும் என்று எண்ணுவது ஏமாற்றத்தையே அளிக்கும்.

    தேர்தலுக்கு முன்னமே, ராகுல் ஜெயலலிதாவுடன் கூட்டணி என்று பேச ஆரம்பித்து விட்டார்.

    தேர்தலின்போது, ஜெயலலிதா, ஈழம் என்று முழக்கமிட்டார். இப்பொழுது, சம உரிமை என்று அறிக்கை வெளியிட்டு விட்டார். சம உரிமை என்பது காங்கிரஸின் கொள்கையும்கூட.

    அதிமுக செயற்குழு கூட்டம் வருகின்ற 27ஆம் தேதி கூடுகிறது.

    காங்கிரஸின் புதிய பார்முலாவை ஏற்றுக்கொள்ளாமல், திமுக அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றது.

    தமிழகத்தைப் பொருத்தவரை, காங்கிரஸ் தனித்து நிற்க முடியாது. ஆக, ஜெயலலிதாவுடன் கூட்டணி.

    ஜெயலலிதாவும், காங்கிரஸின் பார்முலாவை ஏற்றுக்கொண்டு, மத்திய அமைச்சரவையில் பங்கேற்ப்பு.

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம்.

    ஜெயலலிதாவின் தலைமையில் கூட்டணி ஆட்சி. திமுகவைத்தவிர, அனைத்துக்கட்சிகளும் அமைச்சரவையில் இடம் உண்டு.

    ஜெயலலிதா....61. காங்கிரஸ்...34. பாட்டாளி...18. வைகோ...6. கம்யூனிஸ்...15.

    ஆக, மாநிலம் சுயாட்சி அடையவில்லை; மத்தியில் கூட்டாச்சி இல்லாமல் போய்விட்டது.