ஈன்ற
பொழுதின்
பெரிதுவக்கும்
தன்மகனைச்,
சான்றோன்
எனக்கேட்ட தாய்
வள்ளுவர், சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து சரியான இடத்தில் பயன்படுத்தியிருக்கின்றார். நல்லவன், வல்லவன், வீரன், அறிவாளி, கெட்டிக்காரன், சாமார்த்தியசாலி, பர்ஸ்ட் ரேங், வெற்றித் திருமகன் - என்றெல்லாம் வார்த்தைகளை உபயோகிக்கவில்லை.
சான்றோன். நல்ல குணம், பண்பாடு, நேர்மை, கல்வியறிவு என்று நல்லவைகளைக் கொண்டவன் சான்றோன் ஆவான். தன் மகனை, ஊரில் உள்ளவர்கள் - சான்றோன் எனச் சொல்ல, அந்த சொல்லைக் கேட்க வேண்டும் தாய். அப்படி கேட்கையில், அவளது உள்ள உணர்வுகளை, வள்ளுவரே அநுபவித்ததுபோல் சொல்கிறார். தாய் பெற்றெடுத்த பொழுதினும் பெரிது மகிழ்வாள்.
தாய்க்கு மகன், என்றும் மகனே. எத்தனை வயதானாலும், தாய்க்கு மகன், மகனே. அதனால்தான், சான்றோர் என்று மரியாதையான வார்த்தையை உபயோகப்படுத்தாமல், சான்றோன் - என்ற சொல்லை உபயோகப்படுத்தியிருக்கின்றார், வள்ளுவர்.
பள்ளியில் படிக்கின்ற காலத்தில், இப்படியெல்லாம் எழுதியிருந்திருந்தால், வாத்தியார்களிடம், தலையில் கொட்டு வாங்குவதை தவிர்த்திருந்திருக்கலாம்.
பொதுவாக, அனைத்து கலாசாரங்களும், வயது முதிர்ந்தவர்களுக்கு மரியாதை அளிக்கத்தான் செய்கிறது. வயது முதிர்ந்தவர்கள், பெரியவர்கள்; முன்னோர்கள். அவர்கள் எல்லாம் சான்றோர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சான்றோர்களாக இருந்தால், அந்த சமுதாயம் பயனடையும்.
சான்றோனாக வாழ்வதற்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, பள்ளியில் படிக்கின்றபோது...Gandhiji was truthful in his conduct right from the childhood. There is a very famous incident in this regard. A British school inspector once came to Gandhiji's school and set a spelling test. Gandhiji spelled all the words correctly except 'kettle.' The class teacher noticed the mistake and gestured Gandhiji to copy the correct spelling from the boy sitting next to him. Gandhiji refused to take the hint and was later scolded for his "stupidity". பள்ளிச்சிறுவனும் சான்றோனாகலாம் என்பதற்கு, மோகந்தாஸ் கரம்சந்த் காந்தியே சிறந்த எடுத்துக்காட்டு.
ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து நடக்கணும்; நம்மைச் சுற்றியிருப்பவர்கள், நமது செயலைப் பார்த்து வளர்கிறார்கள். நம்மையும் அறியாமல், மற்றவர்கள் நம்மை பின்பற்றுவார்கள். ஆகவே, நமது செயல், சிந்தனை, எண்ணம், பேச்சு - எல்லாம் சான்றோர்களை உருவாக்கும்படி அமைய வேண்டும்.
ஒரு விடயம் கவனித்தீர்களா; காந்தி பள்ளி செல்லும் காலத்திலே, பிரிட்டீஷ் மிகவும் சிறப்பாக நிர்வாகித்திருக்கின்றார்கள். பள்ளி இயக்குனர், பள்ளிகள் சிறப்பாகச் செயலாற்றுகிறதா என்று, நேரில் சென்று ஆய்வு நடத்தியிருக்கின்றார். வகுப்பாசிரியரும் நன்கே பாடம் சொல்லிக் கொடுத்திருக்கின்றார்.
இன்றைய காலகட்டத்தில், வாத்தியார் சொல்லாமலேயே, மாணவன், பக்கத்திலிருக்கும் மாணவியைப் பார்த்து, எல்லாம் சரியாக எழுதியிருப்பான். அதையும்விட, மாணவன், வாத்தியாரைப் பார்த்து, “கேள்விகளை நீ கேட்கிறாயா, அல்லது நான் சொல்லட்டுமா,” என்பான். “உனக்கு எப்படி கேள்வித்தாள் கிடைத்தது,” என்று பதறியபடி ஆசிரியர் கேட்பார். கவனிக்க வேண்டியவங்களை கவனிச்சால், கேள்வித்தாள் கைக்கு வந்துவிடும்.
ஒழுக்கம்; நல்லொழுக்கம் கடைப்பிடிக்கின்றோமா. கடைப்பிடிக்காவிடிலும் பரவாயில்லை; ஒழுக்கமின்மையை ஒரு பெருமையாக கருதுகிறோம்; அதை தம்பட்டம் வேறு அடிக்கின்றோம்.
லிப்ரான் அறிக்கை; பதினேழு ஆண்டுகள் கழித்து சமர்பிக்கப்படுகிறது. தாமதிக்கப்பட்ட நீதி - மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வார்கள். ஆனால், தர்மம், மிகச்சரியான தீர்ப்பை வழங்கி செயல்படுத்தியும் விட்டது. தற்பொழுது, இந்த அறிக்கை - ஒன்றுக்கும் உதவாத அறிக்கை.
அயோத்தியில் இராமருக்கு கோவில் கட்டவேண்டும் என்பதல்ல, அத்வானியின் நோக்கம். அத்வானியின் நோக்கம் எல்லாம், அயோத்தியில் பிரச்சனையை கிளப்பினால், நாட்டு மக்களிடம் பிளவு ஏற்படும். அந்த பிளவின் மூலம், ஆட்சியை பிடிக்கலாம். அது மிகச் சிறப்பான சாணக்கியத்தனம். அது மிகவும் சரியாக செயலாற்றவும் செய்தது. அயோத்தி பிரச்சனை இல்லாமல், அட்டல் பிகாரி வாஜ்பாய் - ஜென்மத்துக்கும் இந்தியாவின் பிரதம மந்திரியாக ஆகியிருந்திருக்க முடியாது. வாஜ்பாய் பிரதமரானார்; அத்வானியின் கனவு பலிக்காமலே போய்விட்டது. அத்வானி போட்ட கணக்கில், பயனடைந்தது வாஜ்பாய். அது தர்மத்தின் தீர்ப்பு.
ஆக, லிப்ரான் அறிக்கையில் உள்ள விடயங்கள், இன்றைய காலகட்டத்தில் அர்த்தமற்றது. இன்றைய காலகட்டத்தில் நடந்தேறிய ஒழுக்கமின்மை - பத்திரிக்கைகளில் திருட்டுத்தனமாக அறிக்கையை வெளியிட்டது. பத்திரிக்கைகள் கையில் கிடைத்தாலும், இது திருட்டுத்தனமாக வந்தது; இதனை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று சொல்வதுதான், பத்திரிக்கை தர்மம்.
இந்தமாதிரி திருட்டுத்தனம் செய்வது - தப்பு என்று பத்திரிக்கைகள் உணருவதில்லை; மக்களும் உணருவதில்லை. இதை ஒரு SCOOP என்று பெருமைப்படுகின்றன பத்திரிக்கைகள். பதினேழு ஆண்டுகள் நீதியை ஆராய்ந்து, அந்த நீதிபதி தீர்ப்பை, யார் எப்படி திருடினார்கள். இதெல்லாம் தவறு, நல்லொழுக்கம் இல்லாத செயல் என்று யாருமே உணருவதில்லை.
அதனால்தான், பல ஆண்டுகள் சிந்தித்து, கற்பனை வளத்தோடு, திரைப்படம் தயாரிக்கின்றார்கள். அந்த திரைப்படம் தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்னமே, விசிடிகளில் வெளிவந்து விடுகிறது. திருடுபவர்கள், தாங்கள் செய்யும் செயல், ஒழுக்கமற்ற செயல், சட்டத்துக்கு புறம்பான நேர்மையற்ற செயல் என்று உணருவதேயில்லை; உணர்ந்தால்தானே திருந்துவதற்கு. அவர்கள், வளர்த்துக் கொள்ளும் திறமையெல்லாம், பிடிபடாமல் தொழிலை எப்படி தொடர்ந்து செய்வது என்றுதான்.
நம்ம ஊர் பெரியவங்க, தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் உதவியாளர் கொலை வழக்கின் அறிக்கையை திருடி அன்று வெளியிட்டோம் என்று. இன்றைய காலகட்டத்தில், இடைத்தேர்தல் அறிவிப்பு செய்தாகிவிட்டது. உயர் பதவியில் இருப்பவர்கள், திருச்செந்தூர் கோவிலின் பழங்கதையை தற்பொழுது சொல்வது சரியான செயலா?
அந்த அமெரிக்க பெரியவங்க; அவுங்க சான்றோர்கள். எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு, சிந்தித்து, செயலாற்றி இருந்திருக்கின்றார்கள். அவுங்க ஏற்படுத்திக் கொடுத்ததுதான், சிறந்த மக்களாட்சி. அவர்கள் அனைவரும், இங்கிலாந்தில் நடக்கும் மக்களாட்சியை பல ஆண்டுகள் நேரில் அநுபவித்தவர்கள். அதில் உள்ள குறைகளை நன்கு அறிந்தவர்கள். இங்கிலாந்திலேயே, மக்களாட்சியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய எவ்வளவோ முயற்சி செய்தார்கள். ஆனால், இங்கிலாந்து அரசியல்வாதிகள் தடையாக இருந்தார்கள். அதன்பிறகுதான், புதிய கண்டத்துக்குச் சென்று, புதிய அமைப்பை உருவாக்கினார்கள். அப்படி பல்வேறு ஆராச்சிகளுக்குப் பிறகு உருவானதுதான் - அமெரிக்காவின் அரசியலமைப்பு.
இப்ப இலங்கையில் நடக்குதே, தேவையற்ற தேர்தல், அதுமாதிரியெல்லாம், அமெரிக்காவில் நடத்த முடியாது. சும்மா நெனச்ச நேரத்துக்கு, விளையாட்டுத்தனமாக ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் என்றெல்லாம் விளையாட முடியாது. ஜனாதிபதி தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான். அது லீப் ஆண்டுகளாக அமைந்து விட்டது. இடையில் தேர்தல் தமாஷ் எல்லாம் கிடையாது. அந்த ஜனாதிபதி, நல்லவனோ, கெட்டவனோ - நான்கு ஆண்டுகள் அவரே ஜனாதிபதி. அவரே இறந்தாலும், தேர்தல் கிடையாது. உதவி ஜனாதிபதி, பொறுப்பேற்பார்.
அரசாங்க அமைப்பு சரியில்லாமல் போய்விட்டால், மேடையில் அனைவரும் கோமாளிபோல்தான் செயல்படுவார்கள். அந்தக்காலத்தில், இந்தியாவிலும் அடிக்கடி தேர்தல் நடக்கும். இது சரியான தருணம் என்று ஆட்சியாளர்கள் நினைத்து விட்டால், கவர்னரிடம் ஆட்சியைக் கலைக்க மனு கொடுத்துவிட்டு, தேர்தலை சந்தித்து, அடுத்து ஐந்தாண்டுகள் தொடர்வார்கள். அந்த கோமாளித்தனமெல்லாம், இந்தியாவில் நின்று விட்டது.
இன்றைய காலகட்டத்தில், இலங்கையில் இது தேவையில்லாத தேர்தல். ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை, இப்படி மஹிந்தாவுக்கு எதிர்ப்பு வரும் என்று யாருமே சொல்லியிருக்க முடியாது. எதிர்ப்பவர் வேறு யாராக இருந்திருந்தாலும், மஹிந்தாவின் வெற்றி உறுதியாக இருந்திருக்கும். ஆனால், தற்பொழுது, இருவரில், ஒருவர் தோல்வியை தழுவுவது உறுதி. அதுவும், மஹிந்தா தோல்வியடைந்தால், அது வரலாற்றில் மிகவும் முக்கியம் அடையும். ஏன், எப்படி தோல்வியடைந்தார் என்று ஆராயமாட்டார்கள். ஆராய்ச்சியாளர்களின் தேடுதல் எல்லாம் - ஏன், எதற்கு தேர்தலை நடத்தினார் என்றுதான் இருக்கும்.
ஆக, நல்லொழுக்கத்தையும், நேர்மையையும் கடைப்பிடித்து, நாளைய சமுதாயத்துக்கு ஒரு முன்னுதாரணமாக திகழும்போது, நீங்களும் சான்றோர்களாவீர்கள். உங்கள் தாய், பெரிது உவக்கும்படி செயலாற்றுங்கள்.