பிரச்சனைகள், தலைவர்களை உருவாக்குகின்றது.
  • Crisis demands Leadership

    அது ஒரு மருத்துவமணை. அந்த மருத்துவமணையின் தலைமை நிர்வாகி - மருத்துவர் அல்ல. அந்த மருத்துவமணையின் நுழைவாயிலில் - மிஷன் வாக்கியம் எழுதப்பட்டு இருக்கின்றது. அந்த மிஷன் வாக்கியம் - மருத்துவமணை நிர்வாகத்தின் நோக்கத்தை தெளிவாக மக்கள் உணரும்படி அமைந்திருந்தது. தலைமை நிர்வாகிகளின் முக்கிய பணி - மிஷன் வாக்கியத்தை உருவாக்குவது. அது மிக எளிதான காரியமாக தோன்றும்; தலைமை நிர்வாகிகளும், அவரது உதவியாளர்களும் அமர்ந்து, சிந்தித்து, விவாதித்து உருவாக்கும்போதுதான் - அது எவ்வளவு கடினமான காரியம் என்று உணருவார்கள்.

    அந்த மருத்துவமணையின் தலைமை நிர்வாகி, ஒவ்வொரு மாதமும், தங்களது மருத்துவமணைக்கு எத்தனை பேர்கள் - தங்களது ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பதற்கு வருகின்றார்கள்; எத்தனை பேர்கள் - நோய்வாய்ப்பட்டு வருகிறார்கள்; அப்படி வருபவர்களில் எத்தனை பேர்கள் - சரியான சிகிச்சைப் பெற்று, ஆரோக்கியத்துடன் வீடு திரும்புகிறார்கள்; எத்தனை பேர்கள் - சிகிச்சைப் பலன் இல்லாமல் இறந்து விடுகிறார்கள் என்ற ரிப்போர்ட் எடுத்துப் பார்த்தார். அந்த ரிப்போர்ட், தலைமை நிர்வாகியை தர்மசங்கடம் அடைய வைத்து விட்டது. மருத்துவமணைக்கு நல்ல வருமானம் வரத்தான் செய்தது. அந்த வருமானத்தின்மூலம், மற்ற ஊர்களில், அதிக மருத்துவமணைகள் தொடங்கலாம். ஷேர் மார்க்கெட்டில், அவர்களது கம்பெனியின் பங்கு நல்ல நிலையில் இருந்தது. ஆனாலும், தலைமை நிர்வாகி, நிர்வாகத்தில் கோளாறு இருப்பதை உணர்ந்தார். மற்றவர்களை கேட்டால், நகரிலே சிறந்த மருத்துவமணை, நம்ம மருத்துவமணை என்று பெயர் எடுத்து இருக்கு என்று பெருமை மட்டுமே பேசிக்கொண்டு இருந்தார்கள்.

    மறுநாள் காலையில், மருத்துவமணைக்கு வயிற்றுவலியால் துடிதுடித்துக் கொண்டு, ஒருவர் வந்தார். தலைமை நிர்வாகி ஜோசப், மருத்துவர் கார்த்திக்யை அனுப்பி, அந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கச் சொன்னார். கார்த்திக், அந்த நோயாளியிடம், “என்ன, வெளியிலே ஹோட்டலில் சாப்பிட்டீங்களா; இறச்சி சாப்பிட்டீங்களா,” என்று டாக்டர் கார்த்திக் கேட்டார். அதற்கு அந்த நோயாளி, ஆம் என்று சொன்னவுடன், ஜீரணத்துக்கு வேண்டிய மருந்தை எழுதிக்கொடுத்தார். தலைமை நிர்வாகி ஜோசப் திருப்தியடையவில்லை.

    ஆக, அடுத்து மருத்துவர் ரமேஷ் சென்று நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முற்பட்டார். அவர் நோயாளியின் கையைப் பிடிச்சுப் பார்த்துவிட்டு, ஊரெல்லாம் பன்றிக்காய்ச்சல்; ஆக, உங்களுக்கும் பன்றிக் காய்ச்சல் என்று சொல்லி, அதற்கு தேவையான மருந்தை எழுதிக் கொடுத்தார். தலைமை நிர்வாகி ஜோசப் திருப்தியடையவில்லை.

    அடுத்து, டாக்டர் ஷாலினியை அனுப்பி வைத்தார். மருத்துவர் ஷாலினி, நோயாளியிடம் சில கேள்விகளை கேட்டுவிட்டு, அனைத்துவித சோதனைகளையும் செய்து பார்த்துவிட்டு, இறுதியாக வயிற்றுப்பகுதியை ஸ்கேன் பண்ணச் சொன்னார். ஸ்கேனில் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. உடனே, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சரியான நேரத்தில், சரியான சிகிச்சை அளிக்கப்பட்டதால், அந்த நோயாளி உயிர் பிழைத்தார்.

    அந்த நோயாளிக்கு, அப்பண்டிக்ஸ் வெடித்து, இரத்தத்தில் கலந்து வயிற்றுவலி ஏற்பட்டு இருந்திருக்கின்றது. ஆக, மருத்துவர்கள் அனைவரும் சிகிச்சை அளிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், நோயின் மூலக்காரணத்தை அறியாமலே, சிகிச்சை நடக்கின்றது. மறுநாள், தலைமை நிர்வாகி ஜோசப், அனைத்து மருத்துவர்களையும் அழைத்து, இந்த நிகழ்வை அலசி ஆராய்ச்சி செய்தார்கள். டாக்டர் கார்த்திக் மனதில், ஹோட்டல் சாப்பாடு, அதுவும் இறைச்சி சாப்பாடு, உடம்புக்கு நல்லதில்லை என்று ஓர் எண்ணம், ஆழமாக பதிந்திருந்தது. அந்தமாதிரி, ஏதாவது ஆழமாக பதிந்தபிறகு, அளிக்கும் சிகிச்சை தவறுதலாகவே அமைந்து விடுகிறது என்ற உண்மை உணர்ந்தார். அதுபோல், டாக்டர் ரமேஷ், இன்னைக்கு எது பிரபலமோ, அதுவே எல்லாரையும் பாதிக்கும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.

    இப்பொழுது, அந்த மருத்துவமணையில், மருத்துவர்கள் அனைவருமே, நோயின் மூலக்காரணத்தைக் கண்டுபிடிப்பதிலேயே முழுக்கவனத்தையும் செலுத்துகிறார்கள். சிகிச்சை ஆரம்பித்தபிறகும், ஏற்படும் முன்னேற்றத்தை கவனித்து வருகிறார்கள். ஆக, தலைவலி, வயிற்று வலி, வாந்தி எல்லாம் - நோய் அல்ல; அவைகள் எல்லாம் நோயின் அறிகுறிகள்.

    ஆக, பிரபாகரன், தீவிரவாதம், சகோதர யுத்தம் எல்லாம் - நோய்யின் மூலக்காரணங்கள் அல்ல; நோய்யின் அறிகுறிகள். இதுவரை நடந்த சிகிச்சை எல்லாம் - தவறான சிகிச்சையே. பிரபாகரனை ஒழிந்துவிட்டால், இலங்கை பிரச்சனை தீர்ந்துவிட்டதா?

    அரசியல் தீர்வு, தமிழர்களுக்கு அதிகார பகிர்வு, வடக்கு கிழக்கு இணைப்பு, திம்பு, நார்வே, ஜப்பான் தீர்மானம் - அதெல்லாம் சிகிச்சை பலனளிக்காது.

    இந்தியாவில், பாகிஸ்தானில், சிங்கப்பூரில், ஆப்கானிஸ்தானில், இராக்கில் - அனைத்து மக்களும் சமம். அதுதான், நோய்யின் மூலக்காரணம். சிகிச்சை, அனைத்து மக்களும் சமம் என்ற தீர்வை அடையும்படி இருக்க வேண்டும்.

    இந்த சிறுவனுக்கு, இந்த வாலிபனுக்கு, சம உரிமை, சம வாய்ப்பு, அவனது அரசாங்கத்தால், மறுக்கப்படாமல், பறிக்கப்படாமல் இருந்திருந்தால் - இந்த வாலிபன், இலங்கையின் சிறந்த குடிமகனாக உருவாகி இருந்திருப்பான்.

    அவனது உரிமைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், அவன் ஒரு தலைவனாக உருவெடுத்தான். பிரச்சனைகள் ஒன்றும் இல்லையென்றால், யாரும் தலைவனாக தேவையே இருந்திருக்காது. தலைவனாகவும் முடியாது. பிரச்சனைகள்தான், தலைவர்களை உருவாக்குகின்றது.

    இந்தியாவில், ஆங்கிலேயரின் அடக்குமுறை - காந்தியை தலைவனாக உருவாக்கியது. அதுபோல், இலங்கை அரசின் அடக்குமுறை - பிரபாகரனை தலைவனாக உருவாக்கியது. தற்பொழுது, ராஜபக்சேவின் குடும்ப ஆட்சிமுறை, சரத் பொன்சேகாவை தலைவனாக உருவாக்கி இருக்கின்றது.