Effective Leaders for Local Government
  • Effective Leaders for Local Government

    நாம, அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து தலைவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, இறக்குமதி செய்யத் தேவையில்லை. நம்ம கிட்டேயே, சிறப்பான தலைமை குணம் கொண்டவர் இருக்கின்றார்கள். அவர்களிடம், பொறுப்பைக் கொடுத்தால், உள்ளாட்சி நிர்வாகம் சிறந்து விளங்கும்.

    பாதிப்பு ஏற்பட்ட பிறகு, சென்று ஆராய்ச்சி நடத்தி என்ன பயன்? பொறுப்பைக் கொடுத்துப் பாருங்கள், இவர்களிடம். வெகு சிறப்பாக, நிச்சயமாக, வெள்ளம் வரும்முன், குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன், கோளாறுகளைக் கண்டறிந்து, அதனை நிவர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள்.

    அனைவரும் தமிழக மாநில முதல்வராக முடியாது. ஆனால், அனைவரும், அவுங்க ஊருக்கு, மேயராகலாம். ஏன், மேயராக விருப்பப்படுவதில்லை? ஏன்னென்றால், இப்போதைக்கு, உள்ளாட்சிகளுக்கு, நாம் வழங்கியிருக்கும் பொறுப்பு, மற்றும் அதிகாரம் - குப்பை பொறுக்குவது. அது, ஆங்கிலேயன் ஆட்சியிலேயே, உள்ளாட்சிகளுக்கு வழங்கிய அதிகாரம்.

    மாநிலத்துக்கு சுயாட்சி கேட்டோம்லே; இப்ப, நாம கொடுப்போம், சுயாட்சி, உள்ளாட்சிகளுக்கு. அறிஞர் அண்ணா இருந்திருந்தால், நிச்சயம் கொடுத்திருப்பார். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்திருப்பார்.

    உள்ளூர் காவல், தீயணைப்பு, கல்வி, மருத்துவம், சுகாதாரம் - உள்ளாட்சிகளுக்கு கொடுங்கள். தம்பிகள், அனைவரும் தமிழக முதல்வர் அளவுக்குப் பொறுப்பை ஏற்று, சிறப்பான நிர்வாகம் வழங்குவார்கள், மக்களுக்கு.

    உள்ளாட்சிக்கு பொறுப்பையும், அதிகாரத்தையும் வழங்குவதால், மேயர்கள் - சர்வாதிகாரர்களாக மாறி விடுவார்களோ என்ற பயம் வேண்டாம். நகராட்சிக்கு, ஏகப்பட்ட லோக்கல் பிரச்சனை இருக்கு; புதுசு புதுசா, தினந்தோறும் மக்களின் தேவை உருவாகிக் கொண்டே இருக்கும். உண்மையிலேயே, மக்களின் சேவகனாகவே மாறி விடுவார்கள்.

    ஆக, மத்திய அரசாங்கம் - மாநில அரசுகளுக்கு தாயைப்போல் இருந்து செயலாற்றுகிறது; அதைப்போல், மாநில அரசாங்கம் - உள்ளாட்சி அரசுகளுக்கு, தாயைப்போல் இருந்து செயலாற்ற வேண்டும்.

    ஊரைச்சுற்றிவரும் தன் மகனுக்கு, கல்யாணம் என்ற கால்கட்டைப் போட்டவுடன், மகன் - பொறுப்புள்ள குடும்பத்தலைவனாக உருவெடுப்பதைப்போல், உள்ளாட்சி தலைவர்களுக்கு - உள்ளாட்சி நிர்வாகம் என்ற பொறுப்பினை வழங்கி விடுங்கள்; சிறப்பாகச் செயலாற்றுவார்கள்.

    வரப்புயர...நாடு முன்னேறும். வரப்பை உயர்த்துங்கள்; வரலாற்றில் இடம் பெறுவீர்கள்; இன்றைக்கு நீங்கள் செய்யத் தவறினால், நாளைக்கு வரும் தலைவன் - நிச்சயம் இதை செய்வான்.