என்ன வளம் இல்லை, இந்த திருநாட்டில்.
பொருளாதாரப் பற்றாக்குறையா; அல்லது வானிலை ஆராய்ச்சியாளர்களுக்குப் பஞ்சமா; அல்லது பொறியியல் வல்லுனர்கள் இல்லையா; அல்லது அறிவியல் அறிஞர்கள் கிடையாதா; அல்லது நிதி மற்றும் மேலாண்மை நிபுணர்கள் இல்லையா; அல்லது பொதுநலத்தில் அக்கறை கொண்ட மக்கள் தலைவர்கள் இல்லையா; அல்லது சிறப்பாக செயலாற்றக்கூடிய அரசாங்க நிர்வாகிகள் இல்லையா; அல்லது சமுதாய பொறுப்புணர்வுள்ள குடிமக்கள் இல்லையா.
என்ன குறை; ஏன் இந்த நிலை. பருவ மழை என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றா. மக்கள் வரிப்பணம் செலுத்துவதில்லையா; அரசாங்கத்தில் நிர்வாகிகள், ஊழியர்கள் பற்றாக்குறையா. பதவி, பொறுப்பு வகிப்பவர்கள் - சிந்தித்து, செயலாற்றும் திறன்கொண்ட அறிஞர்கள் இல்லையா?
நம்மளாலே முடியாது என்று தீர்மானித்து விட்டால், மாற்று வழியை தேடுவதே சரியான செயல். இலண்டனில், இராபர்ட் கிளைவ்வின் கொள்ளுப் பேரன், பேத்திகள் இருக்காங்கலாம். பேசாமல், அவர்களிடம் கெஞ்சி, கூத்தாடி, திரும்ப அழைத்து வரலாம். சர்ச்சில் தெள்ளத் தெளிவாகச் சொன்னார். இந்திய மக்கள் சிறப்பாக வேலையை செய்வார்கள். ஆனால், அவர்களுக்கு நிர்வாகத் திறமை கிடையாது. ஆக, அவர்களுக்கு சுதந்திரம் அளித்தால், பல நூற்றாண்டுகளாகப் பாடுபட்டு உருவாக்கிய அமைப்பை கெடுத்து குட்டிச்சுவராக்கி விடுவார்கள் என்றார்.
நாம் நடத்துவது, பிரச்சனையை, சவாலை எதிர்கொள்ளும் அரசாங்கம் அல்ல. நாம் நடத்துவது - நிவாரண அரசாங்கம். பிரச்சனை வந்து கோர தாண்டவம் ஆடி அடங்கிய பிறகு, மெல்ல நாம் தூக்கத்திலிருந்து எழுந்து, நிவாரணம் வழங்க ஆரம்பித்து விடுகிறோம். பிரச்சனையை எதிர்கொண்டு காரியத்தில் ஈடுபட்டு இருந்திருந்தால், பத்து ரூபாயோடு முடிந்திருக்கும். அதே காரியத்தை பிரச்சனை வந்து பாதிப்பு ஏற்படுத்தியபிறகு, மேற்கொள்வதால், அவசர அவசரமாக செய்து முடிக்க வேண்டி இருக்கின்றது. பத்து ரூபாய் செலவழித்திருக்க வேண்டிய இடத்தில், ஆயிரம் ரூபாய் செலவு செய்யும் நிலை ஏற்பட்டு விடுகின்றது. அதையும்தவிர, உயிரிழப்பு, பொருள் சேதம் என்று அதிக அளவு பாதிப்பு. வருமுன் காப்பது என்பது கிடையாது; வந்தபின் தவிப்பதே வழக்கமாகி விட்டது.
தற்பொழுது உள்ள அமைப்பின்படி, மாநிலத்தின் நிர்வாகம் முழுவதும், மாநில முதலமைச்சர் ஒருவரிடம் குவிந்து கிடக்கின்றது. யாராக இருந்தாலும், இந்த அமைப்பை வைத்துக் கொண்டு சிறப்பாக செயலாற்றவே முடியாது. தமிழகம் என்பது பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பு; அதுவும் மலை, சமதளம், கடல் என்று மாறுபட்ட பூமியமைப்பு; அங்கு வாழும் மக்களின் தேவைகள் மாறுபட்டது.
சென்னையில் கோட்டையில் இருக்கும் தமிழக முதல்வருக்கு, இன்றைய, நேற்றைய, நாளைய முதல்வர்கள் யாராக இருந்தாலும் - இந்த மாறுபட்ட தேவைகளை உணர முடியாது. உணரவே முடியாத சூழ்நிலையில், எப்படி தீர்வு காண முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு, சென்னையில் வாகனம் வழங்கினார்கள். அனைத்து உள்ளாட்சிகளுக்கும் ஒரே மாதிரியான வாகனம். அந்த செயலிருந்தே, சென்னையில் இருக்கும் தமிழக முதல்வருக்கு, உள்ளாட்சிகளின் மாறுபட்ட தேவைகளை உணரமுடிவதில்லை என்ற உண்மை தெளிவாகிறது.
நீலகிரி, கொடைக்கானல் உள்ளாட்சிகளுக்கு, மலை மீது செல்லக்கூடிய ஜீப் தேவை. மதுரை போன்ற உள்ளாட்சிகளுக்கு, சாதரண கார் போதும். தூத்துக்குடி போன்ற கடலோர உள்ளாட்சிகளுக்கு, சிறிய விசைப்படகு தேவை. அந்த மாறுபட்ட தேவையை உணராமல், எல்லோருக்கும் ஒரே தீர்வு என்று சென்னையிலிருந்து ஆட்சி நிர்வாகம் செய்வது - யாராலேயும் முடியாத காரியம்.
அனைத்தும் அறிந்தும் உள்ளாட்சிகளுக்கு பொறுப்பு, அதிகாரம் அளிக்காமல் இருப்பது - மாநில அரசாங்கமே; மாநில அரசாங்கத்தின் பொறுப்பில் இருப்பவர்களே. இதில், மத்திய அரசாங்கத்தை குறை செல்ல முடியாது. பொறுப்பில் இருப்பவர்கள், செயலாற்ற வேண்டியவர்கள், மெளனத்தின் வலியோடு செயலாற்ற முடியாமல் தவிக்கின்றார்கள்.
மெளனமும் தேவையில்லை; வலியும் தேவையில்லை. மனதில் தோன்றியதை, சுதந்திரமாக கத்திச் சொல்ல வேண்டும். ஏன் மெளனம்; எதற்கு இந்த மெளனம். சுதந்திர மனிதனுக்கு மெளனம் தேவையேயில்லை.
பொதுவாக, உச்சம் என்ற நிலையை மனிதன் உணருவதேயில்லை. உச்சம், மேலும் உச்சம் என்று மேலும், மேலும் சென்று கொண்டே இருக்கின்றான், மனிதன். கீழே விழுந்தவுடந்தான், உச்சத்தை அடைந்து விட்டோம் என்று உணர்கின்றான். காதல் இன்பத்திலும், இதுவே உண்மை.
படங்கள்: மாலை மலர்.
பார்த்தீர்களானால், பிரச்சனைகள் எல்லாம், பெரும்பாலும், லோக்கல் பிரச்சனைகள்தான்; லோக்கள் பிரச்சனைகளைப்பற்றிய முழுவிவரமும் அறிந்தவர்கள் - லோக்கல் தலைவர்கள்தான். அவர்களிடம் பொறுப்பை வழங்க வேண்டும். பொறுப்பினை நிறைவேற்ற தேவையான அதிகாரம் அளிக்க வேண்டும்.
இனி,
கலைஞர்
தான் பாக்கி.
ஆக,
தலைமை
நிர்வாகியை,
மக்கள்
நேரடியாக தேர்வு
செய்ய வேண்டும்.
அது முடியாத
நிலையில்,
மாற்று
வழி - சர்வாதிகாரம்
மட்டுமே.
End of Sarath Fonseka
No one knows whether Sarath Fonseka is still alive; dead; house arrest; court-martialed;
திருச்செந்தூர்.
வந்தவாசி.
மயிலாப்பூர் ?
சட்டமன்ற
உறுப்பினர்கள்,
தங்களது
முழுச்சுதந்திரத்தை
அடையும்போது,
அவர்கள்,
மக்களின்
பிரதிநிதிகளாக
உருவெடுக்கின்றார்கள்.
புலம்
பெயர்ந்த சிங்களவர்.
ஆக,
சரத்
பொன்சேகா;
புலம்
பெயர்ந்த முதலாவது
சிங்களவர்
ஆவார்;
அல்லது,
இன்னொரு
பிரபாகரனாக
மாறுவார்;
ஆக
மொத்தம்,
சிலோன்,
நாசமாகவே
போய்க்கிட்டு
இருக்கின்றது.
வேலிக்குள்
இலங்கை.
ஆக,
அவர்கள்
மட்டும் வேலிக்குள்
சிறைபட்டு
கிடக்கவில்லை;
நீங்களும்தான்,
உலகில்
எங்கும் சென்று
வர முடியாத
சூழ்நிலையில்,
சிறைபட்டு
இருக்கின்றீர்கள்.
October Articles
தேவை,
குப்பைத்
தொட்டிகள்.
Adyar City Government
மாடர்ன்
தியேட்டர்ஸ்
வேலையை விட்டுவிட்டு,
செல்கிறார்
கண்ணதாசன்.
அப்பொழுது
முதலாளி அழைத்து,
“அவ்வப்
பொழுது வந்து
எழுதி கொடுத்துவிட்டு,
வேண்டியதை
வாங்கிக் கொண்டு
போ,” என்றார்.
September Articles
இல்லம்
+ அறம் = இல்லறம்
தாயும்
பிள்ளையும்
அகிலனின்
சித்திரப்பாவை
1968 லேயே,
சமுதாயம்
சீரழிந்துதான்
இருந்திருக்கு.
இப்போது
எவ்வளவோ தேவலை.