தேவை, குப்பைத் தொட்டிகள்.
  • Effective City Management

    இங்கே குப்பையை விளக்குமாரினால், கூட்டிப் பெருக்குவதற்கு, ஐந்து ஆட்கள் தேவைப்படுகின்றது. அதைத் தவிர, இந்த ஐந்து ஆட்களை மேற்பார்வையிட மூன்று மேற்பார்வையாளர்கள் தேவைப்படுகின்றது.

    இந்த இடத்தில் இவ்வளவு குப்பையை ஏற்பட்டுத்தியவர்கள், இந்த தெருவில் வசிக்கும் மக்கள்தான். அந்த மக்கள் வேண்டும் என்றே இந்த குப்பையை ஏற்படுத்தவில்லை. அந்த தெருவில் வசிக்கும் மக்கள், தங்கள் வீட்டை, காலையில் தண்ணீர்விட்டு, பெருக்கி, சாணத்தை தெளித்து, கோலம் போட்டு, சுத்தமாகத்தான் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். தங்கள் வீட்டுக்கு முன்னால் குப்பை இருப்பதை அவர்கள் விரும்பவில்லை.

  • Effective City Management

    ஆனால், வேறு வழியில்லை. குப்பையைப் பெருக்கி, எங்கே போடுவதென்று வழி தெரியவில்லை. அதுதான் பிரச்சனை.

    காலை வேளையில், பெசண்ட் நகர் கடற்கரையில், கிட்டத்தட்ட பத்துப் பெண்கள், வரிசையாக விளக்குமாரினால், கூட்டிப் பெருக்கி வந்தார்கள். அங்கங்கு கிடக்கும், குப்பைகளை சேகரித்து வந்தார்கள். இவர்களை மேற்பார்வை செய்ய, இரண்டு மேற்பார்வையாளர்கள்.

    இத்தனை பேர்கள் வேலை செய்தாலும், கடற்கரை சுத்தமாகிறதா; இல்லை, கடற்கரை முழுவதும் சுத்தம் அடைவதில்லை. அதையும்விட, இவர்கள் வேலை செய்துவிட்டு சென்ற கொஞ்ச நேரத்திலேயே, புது குப்பை, எல்லா இடங்களிலும் கொட்டிக் கிடக்கின்றது.

  • Effective City Management

    நாமலே, கடற்கரையில், நிலக்கடலை வாங்கி கொரித்துவிட்டு, இறுதியில் பொட்டலம் மடித்த காகிதத்தை, குப்பைத் தொட்டியில் போடுவதற்கு, குப்பைத் தொட்டியை தேடுகிறோம். அருகில் குப்பைத் தொட்டி ஒன்றும் இல்லை; சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, யாருக்கும் தெரியாமல், காகித குப்பையை, கடற்கரை மணலில் போட்டுவிட்டு வந்து விடுகிறோம்.

    அதேபோல், பேருந்துவில் பயணம் செய்யும்போது, கட்டணம் செலுத்தி, கட்டணச்சீட்டு வாங்குகிறோம். இறங்குமிடம் வந்தவுடன், பேருந்துவிலிருந்து இறங்கி, கட்டணச்சீட்டை குப்பைத் தொட்டியில் போடுவதற்கு தேடுகிறோம். குப்பைத் தொட்டி ஒன்றும், கண்ணில் படவில்லை. வழக்கம்போல், தெருவில் குப்பையைப் போட்டுவிட்டு சென்று விடுகிறோம்.

  • Effective City Management

    கடையில், வாழைப்பழம் வாங்கி சாப்பிட்டுவிட்டு, குப்பைத் தொட்டியை தேடுகிறோம். சில கடைகளில், குப்பைத் தொட்டி வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் கடைகளில், குப்பைத் தொட்டி கிடையாது.

    இப்படியாக, ஊரில் எந்தப் பகுதியிலேயும், குப்பையை நீ போட்டுவிட்டு செல்; நாங்கவந்து கூட்டிப் பெருக்கி, சுத்தம் செய்கிறோம் என்று நகர அரசாங்கம் செயலாற்றுகிறது. குப்பை எல்லாம், ரோட்டிலேயும், கடற்கரை மணலிலும் விழாமல் பார்த்துக் கொள்வதே, சரியான வழிமுறையாகும்.

    உதாரணத்துக்கு, பெசண்ட்நகர் கடற்கரை பகுதியில், ஐம்பது குப்பைத் தொட்டிகள் இருந்தால், குப்பைகள் கடற்கரை மணலில் சிதறிக் கிடக்காது. இரண்டு பேர், அனைத்து குப்பைத் தொட்டிகளில் இருந்து, குப்பைகளை எளிதாக சேகரித்து விடலாம்.

  • Effective City Management

    குப்பைத் தொட்டிகள் வைத்தால், மக்களும் பொறுப்புணர்வுடன் செயல்படுவார்கள். பெரியவங்க, அடுத்த தலைமுறைக்கு, நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுக்க ஏதுவாகும்.

    நாம நினைத்துக் கொள்கிறோம்; எல்லாம் தனியாரிடம் கொடுத்து விட்டால் சிறப்பாகிவிடும் என்று; சென்னையில், தனியார் நிறுவனம் தான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருக்கின்றது. ஆனால், அதன் செயல்பாடும், அரசாங்க ஊழியர்களைவிட மேல் என்று சொல்ல முடியுமே தவிர, சிறந்த செயல்பாடு என்று சொல்ல இயலாது.

    தனியாரோ, அரசாங்கமோ - சரியான, சிறப்பான மேலாண்மை வழக்கங்களை கடைப்பிடித்தால், செயல்பாடு சிறப்பானதாக அமையும். கேள்வி கேட்க வேண்டும். நேற்றைக்கு இதே வேளையைத்தானே செய்தோம்; இன்றைக்கும் இதே வேளையைத்தானே செய்கிறோம்; இதிலே ஏதாவது மாற்றம், புதுமை, முன்னேற்றம் செய்ய முடியுமா என்ற கேள்வி கேட்க வேண்டும். நிர்வாகிகளும் கேட்க வேண்டும்; தொழிலாளிகளும் கேள்வி கேட்க வேண்டும்.

    சும்மா, செக்கு மாடு மாதிரி, எந்த கேள்வியும் கேட்காமல், சிந்திக்காமல் செய்த வேலையையே, எந்தவித மாற்றமும் இல்லாமல், செய்து கொண்டு இருப்பது சரியன்று.