source: http://en.wikipedia.org/wiki/Devadasi
Traditionally the young devadasi underwent a ceremony of dedication to the deity of the local temple which resembled in its ritual structure the upper caste Tamil marriage ceremony. Following this ceremony, she was set apart from her non-dedicated sisters in that she was not permitted to marry and her celibate or unmarried status was legal in customary terms.
Significantly, however she was not prevented from leading a normal life involving sex with individuals of her choice and childbearing. The very rituals which marked and confirmed her incorporation into temple service also committed her to the rigorous emotional and physical training in the classical dance, her hereditary profession. In addition, they served to advertise in a perfectly open and public manner her availability for sexual liaisons with a proper patron and protector.
Very often in fact, the costs of temple dedication were met by a man who wished thus to anticipate a particular devadasi's favours after she had attained puberty. It was crucially a women's 'dedicated' status which made it a symbol of social prestige and privilege to maintain her. The devadasi's sexual partner was always chosen by 'arrangement' with her mother and grandmother acting as prime movers in the veto system.
The non-domestic nature of the contract was an understood part of the agreement with the devadasi owing the man neither any householding services nor her offspring. The children in turn could not hope to make any legal claim on the ancestral property of their father whom they met largely in their mother's home when he came to visit.
பஞ்ச தந்திரம். கே.எஸ்.ரவிக்குமார் படம்.
கமலஹாசன், மற்றும் குழுவினர். கமலஹாசன் மனைவி சிம்ரன். 'மேகி' யாக ரம்யா கிருஷ்ணன். மற்றும் நாகேஷ், அந்த தெலுங்கு நடிகர். கிராணைட்டு பெரிய கல்லு; சின்ன லாபம். டையமண்ட் சின்ன கல்லு; பெரிய லாபம். கிரேஸி மோகன் வசனம்.
பல நூறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சமுதாய தேவையை அறிந்து, தேவதாசி முறையை உருவாக்கி இருந்திருக்கின்றார்கள், நம் முன்னோர்கள். தேவதாசிகளுக்கு , சமுதாயத்தில் நல்லதோர் அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்திருக்கின்றது. நம் முன்னோர்கள், நன்கு சிந்தித்து, பொறுப்புணர்வுடன், நல்ல பழக்க வழக்கங்களை உருவாக்கி, வாழ்க்கையை நன்கே வாழ்ந்திருக்கின்றார்கள். தேவதாசி வாழ்வுமுறையும், நமது கலாசாரமே.
கண்ணதாசன் சொல்கிறார். செயலின் மூலம் செயலற்ற நிலையை அடைவது - காமம். நமது இதிகாசங்கள், புராணங்கள், கோவில் சிற்பங்கள், இலக்கியங்கள், ஏன் வள்ளுவரே - காமத்துப்பால் இயற்றி இருக்கின்றார். மனிதனுக்கு, தாகம் எடுப்பது இயற்கை. தாகத்தை தணிக்க, தண்ணீர் அருந்தியேயாக வேண்டும். தண்ணீர் அருந்தாமல், தாகத்தை கட்டுப்படுத்தி வைப்பதனால், தாகம் தீரப்போவதேயில்லை. தீராத தாகம், மனிதனை வாட்டி எடுக்கும். நமது முன்னோர்கள், கட்டுப்படுத்த சொல்லவில்லை. கட்டுப்பாட்டுடன் வாழ்க்கைமுறையை வகுத்து, கலாசாரமாக உருவாக்கி, நமக்கு தந்து இருக்கின்றார்கள். கலாசாரத்தின் மதிப்பை உணராததால், அது அழிந்து கொண்டு இருக்கின்றது.
பஞ்ச தந்திர நண்பர்கள் அனைவரும் குடும்ப வாழ்க்கையை சிறப்பாகவே வாழ்கிறார்கள். ஆனாலும், வழக்கமான வீட்டுச் சாப்பாட்டைத்தவிர, ஒரு மாற்றத்துக்கு, ஹோட்டல் சாப்பாடு தேவைப்படுகிறது. அவர்களின் தேவையை, 'மேகி' தீர்த்து வைக்கின்றாள். அதுவும், கதாநாயகன், மனைவியைப் பிரிந்து வாடி இருக்கின்றான். ஆக, தங்களது நண்பனை ஆனந்தப்படுத்துவதற்கு, அவர்கள், 'மேகி' யை அழைத்து வருகின்றார்கள்.
ஆக, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, தேவதாசி; இன்று, 'மேகி'. இது ஒரு சமுதாயத் தேவை. இது, உலகில் உள்ள அனைத்து நகரங்களிலும் இருக்கும் வாழ்க்கை முறை. வெவ்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படலாம். ஆனால், நோக்கம், வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதே. ஆங்கிலேயன் சொல்கிறான்: world's first profession.
'மேகி' இல்லையென்று வைத்துப் பாருங்கள். தாகம் எடுத்தவன், தண்ணீர் தேடி அலைவான். பஸ்ஸில் சேட்டைகள்; வேலை பார்க்கும் இடங்களில் தப்புத்தாளங்கள்; ரோட்டிலே பெண்கள் நிம்மதியாக போக முடியாத நிலை உருவாகி விடும். மேலை நாட்டினர்கள் எல்லாம் ஜெண்டில்மேன்கள். அவர்களை நம்பி, பஸ்ஸில் பக்கத்தில் உட்காரலாம். வேலை பார்க்கும் இடங்களில் கண்ணியமாக நடந்து கொள்வார்கள். ஆ, ஊ என்று சொல்வார்கள், அந்த ஜெண்டில்மேன்களைப் பற்றி. பொதுவாக, அவர்கள், ஆணும் சரி, பொண்ணும் சரி, முப்பது வயதுக்குள், திகட்ட திகட்ட அநுபவித்து விடுகிறார்கள். அதன் பிறகு, அவர்களுக்கு வாழ்க்கையே திகட்டி விடுகிறது.
நம்ம ஆட்களுக்கு அப்படியில்லை. என்றும் தணியாத தாகம். இப்ப இருக்கின்ற சூழ்நிலைக்கு, பஞ்ச தந்திர நண்பர்களின் வாழ்க்கை முறைதான் ஏற்றது. சமுதாய அந்தஸ்துக்கு, சிறப்பான குடும்பம். வழக்கமான வேலை, வாழ்க்கை முறையில் இருந்து, கொஞ்சம் தற்காலிக விடுமுறையை அநுபவிக்க, 'மேகி'. நல்ல உழைச்சு, காசு சம்பாதித்தால்தான், அதுவும் அநுபவிக்க முடியும். ஆக, 'மேகி' சமுதாய தேவை.
'மேகி' இரண்டு பார்ட்டி சம்பந்தப்பட்ட விசயம். அதில் ஈடுபடும் அனைவரும், இறுதியில், திருப்தியுடன் சொல்கிறார்கள். அவர்களின் இந்த செயலினால், சமுதாயத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
ஆனால், திருமங்கலம் 'பார்முலா' அப்படியில்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், காசு கொடுக்க வெட்கப்படுவதில்லை. ஓட்டுப்போட, கை நீட்டி, காசு வாங்குவதற்கு, மக்களும் வெட்கப்படுவதில்லை. இந்த ஜனநாயக விபசார செயலினால், பாதிப்பு, நாட்டு மக்கள் அனைவருக்குமே. அந்த ஜனநாயக விபசாரத்தை தடுத்து நிறுத்த இயலாத, அதிகாரிகள் வெட்கப்படுவதில்லை. அந்த ஜனநாயக விபசாரத்தை, வெளிச்சம்போட்டு வெளி உலகுக்கு காட்டி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இயலாத பத்திரிக்கைகள் வெட்கம் அடைவதில்லை. இந்த ஜனநாயக விபசாரத்தின்மூலம், வெற்றி பெற்று, மக்களவைக்கு செல்லும் மக்களின் பிரதிநிதிகள், வெட்கம் அடைவதில்லை. ஆக, யாருக்கும் வெட்கமில்லை.
அடுத்து, காவல் துறை. காவல் துறை விசாரணை மட்டுமே நடத்த வேண்டும். தீர்ப்பு எழுதி, தண்டனையே வழங்கிட கூடாது. இதுவே, காவல்துறையின் வழக்கமாக இருக்கின்றது. நமது சட்டப்படி, தீர்ப்பு வழங்கப்படும்வரை, குற்றம் சாட்டப்பட்டவர், குற்றவாளி அல்ல. ஆனால், காவல் துறையே, குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று தீர்மானித்து, தீர்ப்பு வழங்கி, தண்டனையையும் நிறைவேற்றி விடுகிறது. அதைத்தவிர, விசாரணை, தடம் புரண்டு, வேறு எங்கெங்கோ சென்று விடுகிறது. யார் ஆட்சியில் இருந்தாலும் சரி, காவல் துறையின் செயல்பாடு, தவறாகவே இருக்கின்றது.
அடுத்து, பத்திரிக்கையாளர்கள். Benjamin Franklin warned that, "There can be no freedom without responsibility." உலகிலேயே, அமெரிக்காவுக்கு அடுத்து, கருத்து சுதந்திரம் அளிப்பது, இந்தியாதான். அமெரிக்காவிலேயே பிறந்து, வளர்ந்தவர்களுக்கு , அவர்களுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தின் மதிப்பை உணருவதில்லை. அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள், உலகம் முழுவதும், மக்களுக்கு இந்த சுதந்திரம் கிடைக்கிறது என்று. சுதந்திரத்தின் மதிப்பை உணராததால், அதனை சரியாகப் பயன்படுத்துவதில்லை.
பில் கிளிண்டன், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பொழுது, மோனிகா என்ற பெண்ணிடம் தகாத உறவு கொண்டார். இதனை, அந்த நாட்டு அரசியல்வாதிகள், கிளிண்டனுக்கு எதிராக உபயோகப்படுத்தினார்கள். அப்ப விசாரணையின்போது, மோனிகா, விலாவாரியாக, சின்ன சின்ன விவரங்களைக்கூட விட்டுவிடாமல், பல கோடி மக்கள் முன்னிலையில் எடுத்துரைக்கிறார். அந்த வீடியோ, வயது வந்தவர்களுக்கு மட்டுமே என்ற சான்றிதழ் வாங்கி இருக்கின்றது. சொல்கின்றவருக்கும், கேட்கின்றவர்களுக்கும், செயலில் ஈடுபட்டவருக்கும், யாருக்கும் வெட்கமில்லை. அது, சமுதாய பொறுப்பில்லாத சுதந்திரம்.
சமீபத்தில், ஒரு சிறிய ஊரில், தலைமை ஆசிரியர், பள்ளி மாணவனிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். அந்தப் பையனின் தாய், கிராமத்து பெண்மணி. தைரியமாக, வீரத்துடன், அந்த அநீதியை எதிர்த்து போராடி, அந்த தலைமை ஆசிரியரை கைது செய்து, சிறையில் அடைக்கும்படி செயலாற்றி இருக்கின்றார். அந்த கிராமத்து தாய், அதிகம் படித்தவங்க இல்லை. பத்திரிக்கைகாரங்க, அந்த தாயிடம் கேட்கிறார்கள், “என்னம்மா நடந்தது. கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்க,” என்று. அதுக்கு, அந்த படிக்காத கிராமத்து அம்மா சொல்றாங்க:
“என்னத்தைங்க சொல்றது; சொல்ற மாதிரியா காரியம் செஞ்சி இருக்கான், அந்த வாத்தியார்.”
அவ்வளவுதான். அதுக்கு மேலே வீணாக ஒரு வார்த்தை சொல்லலே. அதுதானய்யா, நாகரிகம். அதுதானய்யா, பொறுப்புணர்வுடன்கூடிய சுதந்திரம். மோனிகா மாதிரி செக்ஸ் கதை சொல்லலை. 'சொல்ற மாதிரியா காரியம் செஞ்சி இருக்கான்,' அதிலேயே எல்லாம் முடிந்து விட்டது. மீதியெல்லாம், செய்தி கேட்பவர்களின் அறிவுக்கும், கற்பனைக்கும் விட்டாச்சு. பழைய சினிமா படங்களில், வண்டு வந்து மலரில் அமர்ந்து, தேன் அருந்தும் காட்சியை காண்பித்தவுடன், மற்றதெல்லாம் விளங்கிவிடும்.
அந்த கிராமத்து தாய், சமுதாயப் பொறுப்புணர்வுடன், தன்னையுமறியாமல் செயலாற்றி இருக்காங்க. தொலைக்காட்சியில் எல்லாத்தையும் விவரமாக சொல்ல ஆரம்பித்தால், அது மற்ற குழந்தைகளையும், மற்ற ஆசிரியர்களையும் பாதிக்கும். அதெல்லாம் அவங்க சிந்திச்சு செயலாற்றவில்லை. ஆனா, ரொம்ப சரியாக செயலாற்றி இருந்தாங்க, அந்த கிராமத்து தாய்.
இதுக்கும்மேலே, பத்திரிக்கையாளர்கள் எப்படி நடந்துக்கணும் என்று சொல்லணுமா. அமெரிக்காவின் மோனிக்கா மாதிரி பொறுப்பில்லாத சுதந்திரத்தோடு செயலாற்றுவதா, அல்லது நம்ம ஊர் கிராமத்து தாய், சமுதாயப் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவதை கடைப்பிடிப்பதா - உங்களுக்கு தெரியாதா என்ன.