Centre to give Rs. 500 crore more for rehabilitation of Sri Lankan Tamils. The Indian government would give another Rs.500 crore to the Sri Lankan government towards rehabilitating Tamils displaced by the civil war, after the country submitted the project report, said Union Home Minister P.Chidambaram on Sunday.
Talking to reporters after meeting Chief Minister M. Karunanidhi at his Gopalapuram residence, Mr. Chidambaram pointed out that India had already given Rs.500 crore for rehabilitation work.
“We announced that another Rs.500 crore would be released. But we are yet to get the project report from the Sri Lankan government,” he said.
Stating that the Indian government had discussed in detail the report of the 10-member delegation that visited Sri Lanka, he said he explained everything to the Chief Minister.
source: The Hindu
Whose father's money?
No doubt about it. English is a great language. English is beautiful and wonderful language. English is the one helping us to earn our living. But the problem is, it doesn't help us to convey our inner feelings. So, let us express our feelings in Tamil.
யாரு அப்பன் வீட்டுச் சொத்து. ஆயிரம் கோடி. என்ன சும்மாவா, பணம் மரத்திலே காய்க்குதா. முதல்லே 500 கோடி கொடுத்தாங்களாம். அடுத்து, 500 கோடி அனுப்பி வைப்பாங்களாம். என்ன விளையாட்டா? அவ்வளவும், மக்கள் வரிப்பணம். எவன் அப்பன் வீட்டுப் பணம் இல்லை.
அவனவன் செத்து சுண்ணாம்பா வேலை செஞ்சு சம்பாதிக்கிறாங்க; சும்மா இல்லை; அனைத்து துறைகளிலும், உலக அளவில் போட்டி. இராப்பகலா உழைச்ச சம்பாத்தியத்திலே, பொறுப்புணர்வோடு, நாட்டின்மேல் உள்ள பற்றின் காரணமாக, வரியைக் கட்டுகிறார்கள். எவன் அப்பன் வீட்டுப் பணமும் இல்லை அது, சும்மா தூக்கி மஹிந்தா ராஜபக்சேக்கு கொடுப்பதற்கு.
புயல் வரவேண்டாம்; வருடா வருடம் வரும் பருவ மழை; அதிலே மூன்று மாநிலம் மிதக்குது. இந்தியாவிலே, ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கு; அதை தீர்த்து வைக்க முடியலை. ஒருத்தரு, தொண்டைத் தண்ணியை கொடுத்து, ஓயாமல் கத்திக் கொண்டு இருந்தாரு; 2020இல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று; நீங்கள் சொல்லுங்களேன், அப்படி; 2020இல் இந்தியா வல்லரசாகிவிடும்; அதற்கான காரியங்களில் நாங்கள் ஈடுபடுகிறோம் என்று சொல்லுங்களேன். அது மாட்டீங்க; அது உங்களாலே முடியாது.
அது என்ன, Indian government had discussed in detail the report of the 10-member delegation that visited Sri Lanka. யாரு இண்டியன் கவர்ன்மெண்ட்; யாருகிட்டே டிஸ்கஸ் பண்ணினேங்க; ஜனாதிபதிகிட்டே பேசினேங்களா; அல்லது பிரதம மந்திரி கிட்டே பேசினேங்களா; அல்லது வழிகாட்டி சோனியா அம்மையாரிடம் பேசினேங்களா; இல்லே, பாராளுமன்றத்தில், மக்களின் பிரதிநிதிகள் விவாதம் செய்தார்களா?
இலங்கை சென்றது, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றால், பாராளுமன்ற தலைவரிடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பாராளுமன்ற தலைவர் யாரு? மன்மோகன் சிங்கா அல்லது அந்த சபாநாயகர் அம்மாவா? யாரு 1000 கோடி, இந்திய மக்களின் வரிப்பணத்தை, இலங்கைக்கு கொடுக்க உங்களுக்கு அனுமதி அளித்தது. பாராளுமன்றமா; மந்திரிசபையா; அல்லது இந்திய மக்களா?
போன மாதம் வரை, ஏதோ சிக்கன நடவடிக்கை, அது, இது என்று ஆரவாரம் செய்தீர்கள். விமானத்தில் பயணம் இல்லை; இரயில் பயணம். இப்ப ஏது இந்த 1000 கோடி அதிகப்படியாக பணம் வந்தது.
ஆக, இந்த 500 கோடி மஹிந்தாவுக்கு கொடுத்தால் தான், மஹிந்தா அந்த 58,000 பேரை விடுதலை செய்வார்? முதலில் கொடுத்த 500 கோடிக்கு, முள்வேலி கட்டி இருக்கின்றார்; அடுத்த 500 கோடிக்கு, வானுயர்ந்த சிறைச்சாலைகளை கட்டுவார். நாம பணம் கொடுத்து, மஹிந்தா, சீனாவில் போய் முள்கம்பி வாங்கி வருவதற்குப் பதிலாக, அந்த முள்வேலியை நாமே கொடுத்தால், கிண்டியில் உள்ள நம்ம தொழிற்சாலையும் வளரும்.
இதெல்லாம் பேசி விவாதிப்பதற்குதான், சட்டசபை, பாராளுமன்றம் எல்லாம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. பல கோடி செலவு செய்து, தேர்தல் நடத்துகின்றோம்; மக்களும் ஓட்டுப் போடுகிறார்கள்; மக்களின் பிரதிநிதிகள், சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் செல்கிறார்கள். ஆனால், அந்த மக்களவைகள், முக்கால்வாசி நேரம் மூடியே கிடக்கின்றது. அதனாலே, ஒரு விவாதமும் இல்லாமல், அவன் அப்பன் வீட்டு பணத்தை எடுத்துக் கொடுப்பதுபோல், மஹிந்தாவுக்கு அள்ளி, அள்ளி கொடுக்கிறார்கள்.
விவாதம் நடக்க வேண்டும், மக்களவைகளில்; நமக்கும், மஹிந்தாவுக்கும் என்ன உறவு; தொப்புள் கொடி உறவு என்று சொல்லி சொல்லியே, கழுத்தை அறுத்தாச்சு; உண்மையிலேயே பார்த்தீர்களானால், தொப்புள் கொடி உறவு, தாயின் கருப்பையில் இருக்கும் வரைதான். பூவுலகில் வந்தவுடன், முதலில் வெட்டப்படுவது தொப்புள் கொடிதான். சிலசமயம், ஒரு சில சிக்கலில், இந்த தொப்புள் கொடி, அந்த குழந்தையின் கழுத்தை சுற்றி இறுக்கிவிடும். குழந்தையும் இறந்துவிடும். மஹிந்தாவுக்கும், நமக்கும் என்ன ஒப்பந்தம்; வியாபார ஒப்பந்தமா. எதுக்கு 1000 கோடி கொடுக்கின்றோம்.
ஆக, அந்த பத்துபேர் இலங்கைக்கு சென்று அதிபரிடம் பேசியதால், அதிபர் ஒத்துக் கொண்டாரா, 58000 பேர்களை விடுதலை செய்கிறேன் என்று; அல்லது, இந்த 500 கோடி சென்று அடைந்தால் தான், அவர்கள் விடுதலை அடைவார்களா? இப்படியே விலை கொடுத்து விடுதலை வாங்கினால், இன்னும் எத்தனை கோடி, இந்தியா, மஹிந்தாவுக்கு கொடுக்க வேண்டும். மக்களவையில், கட்டாயம் விவாதம் வேண்டும். விவாதம் இல்லாமல், ஒரு பைசா, இந்தியாவைவிட்டுப் போகக்கூடாது.
புதுக்குடியிருப்பு பகுதியில், கண்ணி வெடி இருக்கிறதென்றால், அந்த பகுதியை மட்டும் வேலி கட்டி, அபாயம்: இந்த பகுதிகளில் கண்ணி வெடி முற்றிலுமாக அகற்றப்படவில்லை. உள்ளே வராதீர்கள் என்று எச்சரிக்கை பலகை வைப்பதுதான் சரியான வழிமுறையாகும்.
அந்தமாதிரி, கண்ணி வெடிகள் இருக்கும் இடத்தில் வேலி கட்டி, மக்களை அங்கு செல்லாதீர்கள் என்று எச்சரிக்கை மட்டும் செய்து; இலங்கையில், மற்ற இடங்களுக்கு சுதந்திரமாக செல்லுங்கள் என்று அறிவிப்பதுதான், சரியான வழிமுறையாகும்.
யாழ்ப்பாணத்துக்குப் செல்லுங்கள்; கண்டிக்கு செல்லுங்கள், கொழும்புக்கு செல்லுங்கள்; திரிகோணமலைக்குச் செல்லுங்கள்; இலங்கையில், சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என்று மக்களை சுதந்திரமாக வாழ அனுமதிப்பதே, சரியான வழிமுறையாகும்.
மக்களை ஏன் சுதந்திரமாக நடமாட விடத் தயங்குகிறேங்க. அதுதான் போர் முடிந்தாகி விட்டதே; பிரபாகரனும் செத்து போயாச்சு; இன்னும் எதைக் கண்டு பயப்படுகிறேர்கள். நீங்க இப்படி, சாதரண மக்களைப் பார்த்து பயப்படுவதைப் பார்த்தால், போர் இன்னும் முற்றிலுமாக முடியவில்லை போலவே தெரிகிறது. உங்கள் பயம், வீண் பயம். அரண்டவன் கண்ணுக்கு, இருண்டதெல்லாம் பேய் போல். இறந்த பிரபாகரன் மீண்டு வரப்போவதில்லை.
பிரபாகரன், நல்லவனோ, கெட்டவனோ; ஆனால், வரலாற்றில் இடம் பெறுவது, ஒரு பிரபாகரனே. பிரபாகரனுக்கு இணையாக, இன்னொருவனோ, இன்னொருத்தியோ உருவாகவே முடியாது. சரித்திரத்தில், ஆபிரகாம் லிங்கனுக்கு இணை ஆபிரகாம் லிங்கன் தான்; ஹிட்லருக்கு இணை ஹிட்லர்தான்; சர்ச்சிலுக்கு இணை சர்ச்சில்தான்; காந்திக்கு இணை காந்திதான்.
இன்னொரு ஆபிரகாம் லிங்கனோ; இன்னொரு ஹிட்லரோ; இன்னொரு சர்ச்சிலோ; இன்னொரு காந்தியோ உருவாகியதாக சரித்திரத்தில் இல்லை. தலைவன், நல்லனோ, கெட்டவனோ, அவனுக்கு இணை அவனே. அதுபோல், பிரபாகரனுக்கு இணை பிரபாகரனே. ஆக, இன்னொரு பிரபாகரன் வந்துவிடுவானோ என்ற பயம் தேவையேயில்லை. பயம் இல்லாமல், மக்களை சுதந்திரமாக வாழ விடுங்கள். உங்களது மக்களைக்கண்டு, நீங்களே பயப்படுவது சரியன்று.
ஹிட்லர் இறந்தபிறகும், அவரை சார்ந்திருந்தவர்கள், Fourth Reich என்ற முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால், அந்த முயற்சி ஒரு பலமான சக்தியாக உருவெடுக்கவில்லை. அதேதான் மோகாந்தாஸ் கரம்சந்த் காந்தி. காந்தியின் கொள்கைகள், காந்தியோடு போயாச்சு. அந்த தலைவர்களின் உள்ளத்தில், எதற்கும் கட்டுப்படாத சக்தி, ஒரு எரிமலை போல் இருக்கும். அது என்னதான் அருகில் இருந்தாலும், அடுத்தவருக்கு அந்த சக்தி உதயமாவதில்லை.
எரிமலையெல்லாம், அடுத்தவர்கள் பத்தவைப்பதினால், எரியும் தீபம் அல்ல. எரிமலைக்கு, எந்தவொரு வெளி உந்துதல் தேவையில்லை; உள்ளிருந்து கட்டுக்கடங்காமல் உதிக்கும் சக்தி. ஆக, இன்னொரு பிரபாகரன் வந்து விடுவானோ என்ற பயம் வேண்டாம்; அதேபோல், வேறொரு தலைமையில், இயக்கம் புதுப்பொலிவுடன் உதயமாகும் என்ற பயமும் வேண்டாம். ஆக, வீணாக பயம் கொள்ளாமல், அனைத்து மக்களையும் விடுதலை செய்துவிட்டு, கண்ணிவெடி அகற்றும் இடங்களில் மட்டும், பாதுகாப்புக்கு வேலி அமையுங்கள்.
மக்கள் செல்லட்டும், யாழ்ப்பாணத்துக்கு, கண்டிக்கு, கொழும்புக்கு, ஏன் சென்றுதான் வரட்டுமே தமிழகத்துக்கு, இந்தியாவுக்கு சில மாதங்கள்; அகதிகலாக அல்ல; இலங்கை குடிமக்களாக.
மக்களை சிறையில் அடைத்து வைத்துக் கொண்டு, இலங்கையை வளப்படுத்தவும் ஆசைப்படுவது - கூலுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை என்பதுபோல் ஆகும். ஒன்று, இந்தியாவைப்போல், அனைத்து மக்களும் சமம் என்று நினைத்து காரியத்தில் ஈடுபட்டால், இலங்கை, இந்தியாவைப்போல் வளரும்; வல்லரசாகும்.
அல்லது, பர்மா போல், நாட்டின் வளர்ச்சி முக்கியமில்லை; மக்களின் சுதந்திரம் முக்கியமில்லை என்று நினைத்தால், மக்களை அடிமைப்படுத்துவதில் தப்பேயில்லை. ஆனால், ஏதாவது ஒன்றுதான் சாத்தியம். ஆக, மக்கள் சிறையிலிருந்து விடுதலை ஆகும்வரை, இலங்கையின் பொருளாதாரம், மிக விரைவாக சரிவடைந்து விடும். பொருளாதாரம் சரிவடைய, மேலும் மக்களின் சுதந்திரம் பறிபோகும். அனைத்து மக்களுமே, அடிமைகளாகவே ஆகிவிடுவர். இறுதியில், ஜனநாயகம் அழிந்து, சர்வாதிகாரம் குடிகொண்டுவிடும்.
தை பிறந்தால்,
வழி பிறக்கும்.
எது
எப்படியோ,
இலங்கை
பயணம், நல்லதோர்
ஆரம்பம். வெகு
விரைவில்,
இந்திய
மக்கள், வெகு
எளிதாக, யாழ்ப்பாணம்
சென்று வரும்
நிலை ஏற்பட
வேண்டும்.
Do we learn any lessons?
Boat accident in Thekkady, Kerala.
Lessons Learned
Cheer Mahinda; Vote Ranil
'Cheer Winston:Vote Labour'. Personally Churchill was very popular, but the Labour victory was a landslide in 1945 election.
நிற்க
நிழல் வேண்டும்.
1989இல்,
எழுத்தாளர்
வாஸந்தி,
சிலோன்
பிரச்சனையை
மையக்கருவாக
வைத்து எழுதிய
நாவல். நிற்க
நிழல் கிடைக்கவில்லை,
இன்னும்;
கிடைத்ததெல்லாம்,
முள்வேலிதான்.
தேவை,
குப்பைத்
தொட்டிகள்.
சும்மா,
செக்கு
மாடு மாதிரி,
எந்த
கேள்வியும்
கேட்காமல்,
சிந்திக்காமல்
செய்த வேலையையே,
எந்தவித
மாற்றமும்
இல்லாமல்,
செய்து
கொண்டு இருப்பது
சரியன்று.
நட்புறவு
ஆக,
நட்புறவு,
மனிதர்களுக்கு
மிகவும் அவசியமான
உறவு.
தேவதாசி
பல
நூறு, ஆயிரம்
ஆண்டுகளுக்கு
முன்பே,
சமுதாய
தேவையை அறிந்து,
தேவதாசி
முறையை உருவாக்கி
இருந்திருக்கின்றார்கள்,
நம்
முன்னோர்கள்.
தேவதாசிகளுக்கு
, சமுதாயத்தில்
நல்லதோர் அந்தஸ்து
வழங்கப்பட்டு
இருந்திருக்கின்றது.
நம்
முன்னோர்கள்,
நன்கு
சிந்தித்து,
பொறுப்புணர்வுடன்,
நல்ல
பழக்க வழக்கங்களை
உருவாக்கி,
வாழ்க்கையை
நன்கே வாழ்ந்திருக்கின்றார்கள்.
தேவதாசி
வாழ்வுமுறையும்,
நமது
கலாசாரமே.
மன்மதலீலை
ஆக,
குடும்பத்தை
தெருவுக்கு
கொண்டு வந்து
விடாதீர்கள்.
குடும்ப
பிரச்சனைக்கு,
சட்டத்தின்
உதவியால் தீர்வு
காணுங்கள்;
அல்லது
தர்மத்தின்
வழியில் தீர்வு
காணுங்கள்.
வீதிக்கு
வந்து விட்டால்,
அது சமூகப்
பிரச்சனை ஆகிவிடும்.
நியாயம்
சொல்ல வேண்டிய
பொறுப்பு,
சமுதாயத்தில்
உள்ள அனைவருக்கும்
உண்டு.
Adyar City Government
மாடர்ன்
தியேட்டர்ஸ்
வேலையை விட்டுவிட்டு,
செல்கிறார்
கண்ணதாசன்.
அப்பொழுது
முதலாளி அழைத்து,
“அவ்வப்
பொழுது வந்து
எழுதி கொடுத்துவிட்டு,
வேண்டியதை
வாங்கிக் கொண்டு
போ,” என்றார்.
September Articles
இல்லம்
+ அறம் = இல்லறம்
தாயும்
பிள்ளையும்
அகிலனின்
சித்திரப்பாவை
1968 லேயே,
சமுதாயம்
சீரழிந்துதான்
இருந்திருக்கு.
இப்போது
எவ்வளவோ தேவலை.