இதுதாங்க, அசல் பெங்களூரு
பெங்களூரு என்றால் மெஜஸ்டிக், கலாஸிபாளையம், மார்கெட், சிவாஜி நகர், எம்.ஜி.ரோட், பிரிகேட் ரோட், லால் பாக், கப்பன் பாக், எம்.டி.ஆர்., விஸ்வேஸ்வரய்யா மியூஸியம்.
இதுதாங்க, அசல் பெங்களூரு.
ஜயநகர் கூட பெங்களூருக்கு வெளியேயுள்ள இடமாகத்தான் 1980களில் கருதப்பட்டது. ஆனால், இன்றைக்கு பெங்களூர் என்றால், தற்பொழுது வளர்ந்துள்ள கோரமங்கலம், மடிவலா, சர்ஜாப்பூர் என்று மக்கள் நினைக்கின்றார்கள்.
தற்பொழுது உருவாகியுள்ள புதிய நகரங்களைப் பார்த்து, பெங்களூரு சிறப்பாக வளர்ந்து விட்டது என்கிறார்கள். உண்மையிலேயே, இந்த புதிய நகரங்களுக்கு வேறு பெயர்வைத்து அழைப்பதுதான் முறையாகும்.
அசல் பெங்களூரு - மெஜஸ்டிக், மற்றும் கலாஸி பாளையம் போன்ற இடங்கள்தான்.
இது கலாஸி பாளையம் மார்க்கெட். பெங்களூரின் மையப்பகுதி. பத்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்ததோ, அப்படித்தான் இன்றைக்கும் இருக்கின்றது.
சும்மா, கோரமங்களத்தையும், அங்கு இருக்கின்ற "The Forum” வணிக வளாகத்தைப் பார்த்துவிட்டு, பெங்களூரு ரொம்ப முன்னேறிவிட்டது என்பது தவறு.
மெஜஸ்டிக், கலாஸிபாளையம் மார்கெட் எல்லாம் இன்றும் குப்பையும் கூலமுகாகத்தான் இருக்கின்றது. ஆனால், ரெப்ரீரேஜட்டரில் வைக்கப்படாத, புத்தம் புதிய காய்கறிகளைப் பார்க்க முடிகிறது. அதைத்தவிர, உயிரோட்டமுள்ள, மனதிருப்தியுடன், சிரித்த முகத்துடன், அக சுத்தத்துடன், போலித்தனமில்லாத மனிதர்களை காணமுடிகிறது.
விஸ்வேரய்யா அறிவியல் மியூஸியம் - மாணவர்கள், கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று. நம்ம கோயம்புத்தூரில்கூட, ஜி.டி. நாயுடு மியூஸியம் இருந்தது மாதிரி ஞாபகம்.
ஆக, மாநில அரசாங்கமோ, நகர அரசாங்கமோ - அந்த மார்க்கெட்டை கொஞ்சம் நவீனப்படுத்துக் கொடுங்களேன்.
வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களுக்கு, இந்த காய்கறி மார்கெட், கண்ணுக்கு விருந்தாக அமையும்.