டி. ஆர். சுந்தரம்
  • T.R.Sundaram

    Tiruchengodu. Ramalinga. Sundaram (1907-1963) source: www.indolink.com

    T.R.Sundaram was born in Tiruchengodu. He worked at Angel Films, then took it over and started the Modern Theaters Studio (1937) in Salem. He produced 98 films, including work by Duncan, C.V.Raman and T.R.Raghunath. He approached film making in a business like attitude, importing foreign technicians for his debut Sati Ahalya, made in two versions, one for Modern Theaters and one for Chandra Bharathi Cineton. He produced the first Malayalam sound film, Balan (1938) as well as the first color film in Tamil (Alibabavum Narpathu Thirudargalum) and in Malayalam, Kandam Bacha coat.

    He worked in several genres, most notably the swashbuckling adventure movies of P.U.Chinnappa (Uthama Puthran adapting Duma's The Man in the Iron Mask), that later developed into the MGR filmic and political signature. He also made the war movie, Burma Rani. The world beauty Cleopatra took bath in donkey's milk in one of her films. In order to create a similar scene in a tamil movie, Sundaram brought 1000 donkeys, milked them and took bath. In memory of him, the South Indian Chambers Complex is called 'Sundaram Avenue'.

  • T.R.Sundaram

    டி.ஆர்.சுந்தரம் ஒரு தீர்க்கதரிசி; தொலைநோக்குப் பார்வை கொண்டவராக இருந்திருக்க வேண்டும். அதையும்தவிர, தன்னம்பிக்கை, துணிச்சல். சினிமாவை, கலையையும் தாண்டி, ஒரு தொழிலாக, வர்த்தகமாக செய்யமுடியும் என்று உணர்ந்து, அதை செயலாற்றி இருக்கின்றார். பண முதலீடு, கதைக்கு ஒரு டிபார்ட்மெண்ட், விநியோகத்துக்கு ஒரு டிபார்ட்மெண்ட், விளம்பரத்துக்கு ஒன்று என்று, ஒரு மாபெரும் நிறுவனத்தை நிறுவி, அதனை திறம்பட மேனேஜ் செய்து இருந்திருக்கின்றார். மெட்றாஸ் பிரஸிடென்ஸியைப் பொருத்தவரை, டி. ஆர். சுந்தரம்தான் முன்னோடி மாதிரி தெரிகிறது. அவருக்கு ரோல் மாடல் எல்லாம் மேலை நாட்டினவர்களாக இருந்திருக்கலாம். தமிழ் திரையுலகம், இன்று மாபெரும் இண்டஸ்டிரியாக வளர்ந்து இருப்பதற்கு, டி.ஆர்.சுந்தரம் போன்ற சான்றோர்கள் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளம் என்பது உண்மையாகும்.

    கண்ணதாசன், தான் பட்ட அனுபவங்களை, தனது மனதில் தோன்றிய எண்ணங்களை, புத்தக வடிவில் எழுதி வைத்தது, இன்று நமக்கு மிகவும் உதவுகிறது. கண்ணதாசன் வார்த்தைகள், எழுத்துக்கள், எண்ணங்கள், அனைத்தும் உண்மை; சத்தியம். அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தலைப்புக்குப் பதிலாக, அர்த்தமுள்ள வாழ்க்கை என்று வைத்திருக்கலாம். கண்ணதாசன், அரசியலில் தோல்வியடைந்தார் என்பதைவிட, அரசியல் - கண்ணதாசனிடம் தோற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணதாசன் காட்டிய அரசியல் வழியில் தமிழகம் சென்றிருக்குமேயானால் - ஒழுக்கச் செல்வம் செழித்து வளர்ந்திருக்கும். இன்று, உலகத்தில், அறிவுச் செல்வம், பொருட் செல்வம் பெருகி இருக்கின்றது. ஒழுக்கச் செல்வம் மட்டும் தேவையில்லை என்று ஒதுக்கிவைக்கப்பட்டு வருகிறது.

    இந்த கட்டுரையின் நோக்கம், சிறப்பாக வளர்ந்துவரும் இண்டஸ்டிரியின், நிர்வாக அமைப்பை ஆராய்ந்து, அலசிப் பார்ப்பது. அந்த ஆராய்ச்சியின் மூலம், நிறை குறைகளை அறிந்து கொள்வது. அறிந்தபின், அந்த மாடலை, வழிமுறையை, பின்பற்றி, மற்ற நிர்வாக அமைப்புகளை எவ்வாறு மாற்றி அமைப்பதென்று பார்ப்பது.

    நமது கண்ணெதிரிலேயே, சிறப்பாக வளர்ந்து வரும் இண்டஸ்டிரி - தமிழ் சினிமா. சிறப்பாக வளர்ந்திருக்கு என்பதற்கு ஆதாரம் - ரகுமான்பாய், ஆஸ்கர் அளவுக்கு உயர்ந்திருப்பது.

    நமது மக்களாட்சி சிறப்பாக, நேர்மையாக செயலாற்றி இருந்திருந்தால், அரசியலிலும், தமிழகம் வளர்ந்திருக்கும். எம்.ஜி.ஆரோ., கருணாநிதியோ, ஜெயலலிதாவோ - உலக அளவில், நோபல் பரிசு அல்லது வேறு ஏதாவது அங்கீகாரம் கிடைத்திருக்கும். உலக அளவில், இந்தியாவுக்கு அங்கீகாரம் வாங்கிக் கொடுத்த ஒரே தலைவர் - மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி.

    அதையும் தவிர, தமிழ் சினிமா - ஒளிவுமறைவில்லாமல் செயல்படுகிறது. அங்கு நடந்தவைகள், நடப்பவைகள், நடக்கப் போகின்றவைகள், அனைத்தையும், அனைவரும் அறியமுடிகிறது. சினிமாவைப்பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை, சுவராஸ்யமாகவும் இருக்கும். சிட்டி பேங் அல்லது டோயோட்டோ கார் கம்பெனியின் பிஸினஸ் மாடல் - போரடிச்சுடும். சொல்லப்படுகின்ற விசயம், சுவையாகவும் இருக்க வேண்டும்; அதே சமயத்தில், சரக்கு முக்கியமானதாவும் இருக்க வேண்டும்.

    ஆக, அடித்தளம் அமைந்தாகி விட்டது. இந்த அடித்தளத்தில், சின்னச் சின்ன அடியெடுத்து வைத்து, நம்முன் உள்ள உண்மைகளை, அலசி ஆராய்ந்து, சரியான வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து, மிகவும் அற்புதமான, அனைவரும் மகிழ்வோடு, பொறுப்புணர்வோடு, சுதந்திர உணர்வோடு ஈடுபடுகின்றமாதிரி, நிர்வாக அமைப்பை மாற்றி அமைப்போம்.