அறிவியல் அறிஞர்களின் முட்டாள்களின்
மரபணு மாற்றம்
  • Issac Newton

    ஆரம்ப காலத்தில், அறிவியல் அறிஞர்கள், உண்மையைத் தேடினார்கள், அறிவியல் மூலமாக. ஐசக் நியூட்டன், ஆப்பிள் பழம், மரத்தில் இருந்து ஏன் கீழே விழுகிறது என்ற கேள்வியைக் கேட்டு, அதற்கான உண்மையைத் தேடி, புவியீர்ப்பு சக்தி என்ற அறிவியல் உண்மையை உலகுக்கு எடுத்துரைத்தார்.

    அதுபோல், சி.வி.இராமன், கடல் ஏன் நீல நிறத்தில் இருக்கின்றது; வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கின்றது என்ற அறிவியல் உண்மையை உலக மக்களுக்கு எடுத்துரைத்தார். அன்று வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள், உண்மையை, அறிவியல் மூலமாக தேடுதலில் ஈடுபட்டனர். உண்மைக்கு எதிராகவோ, இயற்கைக்கு எதிராகவோ, அவர்களது ஆராய்ச்சி செல்லவில்லை; ஆராய்ச்சி கூட பிறகுதான் வருகிறது; முதலில் சிந்தனையே, உண்மைக்கு எதிராக, இயற்கைக்கு எதிராக செல்லவில்லை. இயற்கையின் உண்மையை அறிவதிலே, அறிஞர்கள் ஈடுபட்டார்கள்.

    இயந்திரங்களை உருவாக்குவதும், மனிதனின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவே அமைந்தது. தன்னோட தாய் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருக்கும்போது, மூடியிருந்த தட்டு, பறந்து சென்று கீழே விழுந்ததில், நீராவியின் சக்தியை, உணர்ந்து, இரயில் என்ஜினை உருவாக்கினான். உலக மக்களுக்கு மிகவும் உபயோகமாக அமைந்தது. பறக்கும் பறவையினைக் கண்டு, விமானம் படைத்தான். எதிரொலி கேட்டான், வானொலி படைத்தான். ஆக, ஆரம்பகால அறிஞர்களின் சிந்தனை, படைப்பு எல்லாமே, ஆக்கப்பூர்வமாக அமைந்திருந்தது.

    சமீபகாலமாக, நன்கு கற்ற அறிஞர்களின் சிந்தனை, செயல்பாடுகள் அனைத்தும் இயற்கைக்கு எதிராக, உண்மைக்கு எதிராக, மனித சமூகத்துக்கு எதிராகவே அமைந்து விட்டது. ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு, தப்பி ஓடிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அமெரிக்க ஜனாதிபதியிடன், அணுவின் சக்தியினை எடுத்துச் சொல்ல, உடனேயே ஆரம்பித்து விட்டார்கள், அணுகுண்டு தயாரிக்க. தயாரித்த அணுகுண்டை, ஜப்பானில் போட்டு பலனையும் கண்டு கொண்டார்கள்.

    தற்பொழுதுதான், நிலை மாறி இருக்கின்றது, அமெரிக்காவில். முன்பெல்லாம், பல்கலைக்கழங்களில், நன்கு படித்த அறிவியல் அறிஞர்கள் அனைவரும் விரும்பி சேருவது இராணுவமே. இராணுவத்தில், மனித சமூகத்தின் அழிவை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி நடத்தி, நவீன அழிவு ஆயுதங்களை, அதிக அளவில் உற்பத்தி செய்து இருக்கின்றார்கள்.

    இன்றைக்கு, இந்தியாவில், காந்தி வாழ்ந்து உயிரை விட்ட நாட்டில், நவீன இராணுவ தளவாடங்கள் கண்காட்சி நடத்துகின்றோம். அந்த கண்காட்சியின் முக்கிய விருந்தாளி, இலங்கையின் கோத்தபயா. இலங்கையில், மீதியிருக்கும் மனித உயிர்களையும் பறித்தால்தான், அவரது வெறி தணியும்போல இருக்கு.

    ஆக, எந்தவொரு அறிவும், ஆராய்ச்சியும், உண்மைக்கு புறம்பாக இல்லாமல், இயற்கையோடு இணைந்து இருந்தால்தான் மனித சமூகத்துக்கு பயனுள்ளதாக அமையும்.

  • Pregnant Man

    Thomas Beatie, also known as The Pregnant Man, has given birth to a girl, he confirms to PEOPLE Magazine exclusively.

    Beatie, 34, who began life as a woman and legally switched to a male identity, while preserving his female reproductive organs, and his wife Nancy, 46, welcomed a daughter at an Oregon hospital on June 29. Both Beatie and his daughter are healthy and doing well, he tells PEOPLE Magazine.

    இந்த ஆண், ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்து இருக்கின்றார். பார்க்கவும், எழுதவும், சிந்திக்கவும் அருவருப்பாகவே இருக்கின்றது. முன்பு பெண்ணாக இருந்தவர்; அறிவியல் அறிஞர்கள் (முட்டாள்கள்) செயலினால், இவரது சம்மதத்துடன், இவருக்கு மரபணு மாற்றம் செய்திருக்கின்றார்கள். மரபணு மாற்றத்தால், பெண்ணை ஆணாக மாற்ற முடியும்; நல்லவேளை, இன்னும் மனிதனை ஏதாவது மிருகமாக்கவோ, மிருகத்தை மனிதனாக மாற்றவோ, அந்த அறிவியல் முட்டாள்கள் முயற்சி எடுக்கவில்லை.

    இயற்கைக்கு எதிரான செயல் அனைத்துமே, அழிவுச் செயலாகவே அமையும். மனித வாழ்வின் அடிப்படை இயற்கை. இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையே சரியான வாழும்முறையாகும். ஆக, உண்மைக்கு எதிராக, இய்ற்கைக்கு எதிராக அமைவது அறிவியல் வளர்ச்சி அல்ல; அது மனித சமூகத்தின் அழிவாகவே அமையும். ஆக, மனிதர்களின் மரபணு மாற்றம் செய்யும் செயல் அருவருப்பான செயலே. மனித சமூகத்துக்கு எதிரானது.

  • Organic Vegetables

    மேலை நாடுகளில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள், பொருட்களிலிருந்து ஆர்கானிக் என்று இயற்கை காய்கறிகளுக்குச் திரும்பிச் சென்று கொண்டு இருக்கின்றனர். நாம், தற்பொழுது, நமது இயற்கை வளங்களை அழித்துவிட்டு, அந்த அறிவியல் முட்டாள்கள் உருவாக்கிய செயற்கையான காய்கறிகளுக்குச் சென்று கொண்டு இருக்கின்றோம்.

    ஆரம்பகாலத்தில், மனிதன் மற்ற விலங்குகளைப் பார்த்து இருந்திருப்பான். குரங்கு, வாழைமரத்திலிருந்து பழங்களை பறித்து சாப்பிடுவதைக் கண்டு, அந்த வாழைப்பழம் சாப்பிடுவதற்கு உகந்தது என்று உணர்ந்து, தானும் சாப்பிட ஆரம்பித்து இருந்திருப்பான். அதேபோல்தான், வண்டு அமர்ந்து, பூவில் உள்ள தேனை அருந்துவதைப் பார்த்து, தேனை அருந்துவதில் ஆபத்து இல்லை என்று உணர்ந்திருப்பான். முயல், பன்றி போன்ற மிருகங்கள், பூமிக்கு அடியில் தோண்டி எடுத்து, கிழங்கு வகைகள், காரெட் சாப்பிடுவதைக்கண்டு, மனிதனும் உருளைக்கிழங்கு, காரெட் என்று சாப்பிட ஆரம்பித்தான். ஆடுகள், மாடுகள் விரும்பி சாப்பிட்ட இலையை, மனிதன் கீரையாக உணாவாக உண்ண ஆரம்பித்தான். பழங்களில் வண்டுகள், புழுக்கள் இருப்பதைக் கண்டு, அவைகள் சாப்பிடுவதற்கு உகந்தது என்று உணர்ந்தான்.

    ஆக, மனிதனின் உணவு அமைப்பே, இயற்கையைக் கண்டு அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஆடு, மாடுகள் சாப்பிடாமல் ஒதுக்கிய இலைகள், பெரும்பாலும் நச்சுத்தன்மை கொண்டதாகவே அமைந்து இருக்கும். பன்றிகள் சாப்பிடாமல் ஒதுக்கிய கிழங்குகள், உணவுக்கு உகந்த பொருள் அல்ல. வண்டுகள், காகித பூக்களைத் தேடி அமர்வதில்லை. மெழுகினால், அல்லது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட அலங்கார காய்கறிகளை, புழுக்கள் நாடுவதில்லை.

    ஆக, புழுக்கள், வண்டுகள், பூச்சிகள் தொந்தரவினால், இந்த மரபணு மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அந்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நல்லதோர் பொருட்களை, தின்பண்டங்களை எறும்புகள், எலிகள், வண்டுகள், பூச்சிகள், புழுக்கள் நாடும். அதுதான் இயற்கை. அப்படி பொருட்களை, பூச்சிகள் நாடாவிடில், அந்த பொருட்களை, அவைகள் ஒதுக்குகிறது என்று அர்த்தம். பூச்சிகள், புழுக்கள், வண்டுகளால் ஒதுக்கப்படும் பண்டங்கள், எப்படி மனிதனின் தின்பண்டமாக ஏற்றுக் கொள்ள முடியும். அதுதான் உண்மைக்கும், போலிக்கும் உள்ள வித்தியாசம்.

    முன்பெல்லாம், விவசாயிகள் காய்கறிகளை சந்தைக்குக் கொண்டுவந்து வியாபாரிகளிம் விற்பார்கள். வியாபாரிகள், காய்கறிகளை வாங்கி, பிறகு தரம் பிரித்து வைப்பார்கள். புழு, பூச்சி இல்லாத காய்கறிகளை பிரித்து கூடிய விலைக்கு விற்பார்கள். சிறந்த தரமான காய்கறிகளை, பணக்காரர்கள் வாங்கி செல்வார்கள். நடுத்தர தர காய்கறிகளை, நடுத்தர வர்க்கத்தினர் வாங்கிச் செல்வார்கள். வீட்டில், காய்கறிகளை அறுகாமணையில் அறுத்து, பூச்சி, புழுவுள்ள பகுதிகளை வெட்டி எறிந்து விடுவார்கள். சந்தையில், அதிகம் புழு, பூச்சியுள்ள காய்கறிகளை, ஆடு, மாடுகளுக்கு சாப்பிட போட்டு விடுவார்கள். ஆக, அவரவர் வருமானத்துக்கு ஏற்ற காய்கறிகளை வாங்கி, மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள்.

    பிறகு, உரம், பூச்சி மருந்து என்று வேளாண்மை அறிஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்கள். அதில் ஏராளமான இரசாயனப் பொருட்கள் இருப்பதால், நமது வேளாண்மை அறிஞர்கள், இயற்கை உரங்களையும், மாட்டுச் சாணம், ஆடுகளின் கழிவுகள், அதைத்தவிர இயற்கையான வழிமுறைகளில்தான் ஈடுபட்டார்கள். ஆனால், வெளிநாட்டு அறிவியல் முட்டாள்கள், காய்கறிகளின் மரபணுவை மாற்றம் செய்து விட்டால், புழு பூச்சிகள் அண்டாது என்று அறிவில்லாத செயலில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். இது எப்படி இருக்கிறதென்றால், காலில் முள் குத்துகிறது என்றால், செருப்பணிந்து செல்ல வேண்டும். ஆனால், இந்த மரபணு மாற்றம் என்பது, மனித காலை கடினமானதாக்கி விட்டால், முள் குத்தாது என்ற செயலில் ஈடுபடுவதுபோல் இருக்கின்றது.

  • Bangalore Market
  • Navagraha Temple
  • கட்டுரை பூரணத்துவம் அடையவில்லை.

Headlines

  • Download PDF அறிவியல் அறிஞர்களின் முட்டாள்களின் மரபணு மாற்றம் Stupid Scientists
  • வாழ்க! பென்னாகரம் இடைத்தேர்தல். Subramaniya Siva சுதந்திரப் போராட்ட தியாகிகளை, நினைவில் நிறுத்த உதவும் இடைத்தேர்தல்களை, நாம் வரவேற்போம். நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத்திறனுமின்றி வஞ்சனை செய்வாரடி, சகியே, வாய்ச் சொல்லில் வீரரடி.
  • கருத்து இணையதளம் Asal Ajith நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.
  • Strong Regional Leaders Military
    Sri Lanka
    Sri Lanka is now emerging as Military Burma. Very soon, there will be slogan like "Free Sri Lanka" or "Free Ceylon".
  • யார் தலைவன்? Human Ladder மனிதர்களை அடிமைகளாக்கி, அந்த அடிமைகளைக் கொண்டு, ஏணி அமைத்து, அந்த ஏணியின் உச்சியில் ஏறி அமர்ந்திருப்பவன், தலைவனா?

    அல்லது, தன் உள்ளத்தில் இருந்து, எரிமலையாக வெடிக்கும் சக்தியில், மக்கள் அனைவரும் பூரண சுதந்திரம் அடைந்து, மன நிறைவோடு வாழ வழி செய்பவன், தலைவனா?

    யார் தலைவன்?
  • Twisting Arms கண்ணா, அந்தம்மா, பழம் திண்ணு கொட்டைப் போட்ட ஆளு. உன்னைவிட பெரிய பெரிய ஆட்களையெல்லாம் பார்த்துட்டு வந்திருக்காங்க. சதாம் ஹுசைன் இராக்கில் இருந்து இலங்கைக்கு வந்திருக்காங்க. ஒபாமாவைப் பொருத்தவரை, சதாம் ஹுசைன்னுக்கு அடுத்து ஆட்டம் போடுகின்ற ஆட்கள் நீங்கள்தான் என்று அறிந்து, சரியான ஆளை அனுப்பி வைச்சிருக்கார். ஒரு வழி பண்ணிடுவாங்க; இந்தம்மாவைப் பொருத்தவரை, நல்லவனுக்கு நல்லவங்க; கெட்டவனுக்கு சிம்ம சொப்பனம்.
  • இராணுவ புரட்சிக்கு தயாராகும், சரத் பொன்சேகா. Available in PDF இராணுவ புரட்சியில், மக்கள் அனைவரும், சம அடிமைகள் என்ற நிலையை அடைவர்; அதனைத் தொடர்ந்துவரும், மக்கள் புரட்சியில், மக்கள் அனைவரும், சம உரிமைகளைப் பெற்று, உண்மையான மக்களாட்சி மலரும், இலங்கையில்.
  • January Articles மெய்ஞானமும், விஞ்ஞானமும்
  • 2009 கட்டுரைகள் ஆம் ஆண்டு சொல்லப்பட்ட எழுதப்பட்ட சமுதாயம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்கள், மற்றும் கட்டுரைகள்