Spiritual Entertainment Business
  • Samiyar

    இல்லறம்; துறவறம்.

    இல்லத்தில் வாழும் மனிதர்கள், அறவழியில் வாழும் முறை இல்லறமாகும். துறவு பூண்டவர்கள், அறவழியில் வாழும் முறை துறவறமாகும். ஆக, இரண்டு வாழ்வு முறைகளிலும், அறம் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில், அனைவரும் அறத்தை உதறி, ஒதுக்கி, புறந்தள்ளிவிட்டு வாழ முற்படுகின்றோம். யாருமே, அறத்தைக் கடைப்பிடிக்காத நிலையில், யாரையும் குறைச் சொல்ல, யாருக்கும் அருகதையில்லை.

    இல்லறத்தில் அறம் கடைப்பிடிக்கப்படுகின்ற பொழுது, இல்லத்தில் அறம், பொருள், இன்பம், செல்வம், மக்கள் செல்வம், அறிவுச் செல்வம், பொருட் செல்வம் என்று பதினாறு பேறுகளும் பெற்று வாழ்வை பரிபூரணமாக வாழ்ந்து வந்தார்கள், மனிதர்கள். அறவழியில் மனிதன் வாழும் பொழுது, வாழ்வில் வரும் துன்பங்களையும், சவால்களையும், சோதனைகளையும், துயரங்களையும் எதிர்கொள்ள, தாங்கக்கூடிய சக்தி, ஆதரவு கிடைத்தது. இன்று, இல்லறத்தில், அறம் இல்லை; இல்லறத்தில் வாழும் மனிதர்கள், துறவறம் பூண்டவர்கள்போல் வாழ்கின்றார்கள். இல்லறத்தில் வாழும் மனிதர்கள், உறவுகள் அனைத்தையும் துறந்து விடுகின்றார்கள்; நல் ஒழுக்கத்தை துறந்து விடுகின்றார்கள்; அறுசுவை உணவை துறந்து விடுகின்றார்கள்; அன்பை துறந்து விடுகின்றார்கள்; பள்ளியறையும், பாதிநேரம் மூடியே கிடக்கின்றது; அடுப்பாங்கறை எப்போது மூடியாகி விட்டது. ஆக, இன்றைய காலகட்டத்தில், இல்லறத்தில் வாழும் மனிதர்கள், அனைத்தையும் துறந்து துறவிகள் போல் வாழ்கின்றார்கள்.

    துறவறம் என்பது, அனைத்து இன்பங்களும் கிடைக்கப் பெற்று, அநுபவித்து; துன்பங்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டு; மெய்ப்பொருள் கண்டு, விழித்து; பிறகு, தான் கண்ட உண்மையை உலகத்தினவருக்கு எடுத்துறைத்து; அவர்களும் தங்களது வாழ்வின் மெய்ப்பொருளைக் காணும் வகையில்; தான் அடைந்த, அநுபவித்த அனைத்து உறவுகளையும், செல்வங்களையும் துறந்து; சொல்லாலும், செயலாலும், மனதாலும் சுடர் கொண்டு, இருள் சூழ்ந்த உலகத்தின் ஒளியாக வாழ்வது, துறவறம்.

    மனிதன், தன்னை தானே அறியும்போது, அவனுக்குள் ஞானம் என்ற ஒளி பிறக்கின்றது; ஒளி பிறக்கின்றபோது, அவன் ஞானி ஆகின்றான்; தனது ஞானத்தில், உலகில் சூழ்ந்துள்ள அறியாமை என்ற இருளை நீக்கும் முயற்சியில் தனது சிந்தையாலும், செயலாலும், சொல்லாலும் ஈடுபடுவான்; அவனே, ஞானி, துறவி ஆவான்.

    துறவறம் என்பது நமது கலாசாரத்தின் ஓர் அங்கமாக, காலங்காலமாக இருந்து வந்திருக்கின்றது. இராமயணத்திலும் சரி, மகாபாரதத்திலும் சரி, மற்ற இதிகாசங்களிலும் சரி, துறவறம் பூண்ட துறவிகள், ஞானிகள் இருந்திருக்கின்றார்கள். துறவிகள், அரசாங்கத்திலும் முக்கிய இடத்தினை வகித்து வந்திருக்கின்றார்கள். செஸ் விளையாட்டிலும், இராஜா, இராணி அவர்களுக்கு அடுத்து ஒரு குருநாதர்; ஆக, துறவறம் என்பது நமது கலாசாரத்தின் ஓர் அங்கம். துறவிகள், ஞானிகள் அறத்தைக் கடைப்பிடித்து, மன்னர்களுக்கு, மக்களின் வாழ்வில் ஒளியாகத் திகழ்ந்து இருந்திருக்கின்றார்கள்.

    நல்லதோர் சமுதாயம் அமைய, துறவிகள் மிகவும் அவசியம்.வாழ்க்கை என்பது போராட்டம் நிறைந்தது என்ற உண்மையை, மனிதன் உணருவதில்லை; போராட்டம் இல்லாத வாழ்க்கை, மரணமாகும்; Life without struggle is death; இது மிகவும் அடிப்படை உண்மை; மனிதன் இந்த உண்மையை உணருவதில்லை. ஒரு பெண் கருத்தரிக்கின்றாள்; குழந்தை கருப்பையில் வளர்க்கின்றது; கிட்டத்தட்ட பத்து மாதம், தாயின் உடலில் உள்ளே, குழந்தை வளருகின்றது; குழந்தை, தானே வளருகின்றது; தாயின் வயிற்றில் வளரும் குழந்தை, தன் காலால் எத்தும்; தலையால் முட்டும்; அந்த சின்ன சின்ன அசைவுகள், தாய்க்கு உடலில் வலியை ஏற்படுத்தும்; ஆனால், மனதில் அப்படியோர் ஆனந்தம் பொங்கி பெருகி ஓடும்; கணவனை அழைத்து, வயிற்றில் காதை வைத்து, அல்லது கையை வைத்து, குழந்தையின் அசைவுகளை உணரச் செய்வாள், அந்த இளம் தாய்.

    ஓராம் மாசம், உடலது தளரும்; ஈராம் மாசம், இடையது நெளியும்; மூன்றாம் மாசம், முகமது சிவக்கும்; நான்காம் மாசம், நடந்தால் இளைக்கும்...என்று, தாங்களே கருவுற்றதுபோல், கவிஞர்கள் கவிதை பாடியிருக்கின்றார்கள். ஆக, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் அற்புதமானது; இந்த நிகழ்வுகள் எல்லாம் சின்ன சின்ன விசயங்கள்; முக்கியத்துவம் இல்லாத விசயங்கள்; இளம் தாயின் வயிற்றில் காது கொடுத்து, குழந்தையின் வளர்ச்சியை அறிய நேரத்தை வீணாக்குவது அறிவற்ற செயல்; ஆக, தன் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளின் அர்த்தத்தை உணர மனிதனால் முடியவில்லை; ஒவ்வொரு மனிதனின் வாழ்வின் நடக்கும் நிகழ்வுகள், ஓர் இதிகாசம் எழுதும் அளவுக்கு இருக்கின்றது. ஆனால், மனிதன் தன் வாழ்வின் உண்மையை உணரமுடியாமல் தவித்து, உண்மையைத் தேடி அலைகின்றான். இருக்குமிடத்தைவிட்டு, இல்லாத இடம்தேடி, எங்கெங்கோ அலைகின்றான்.

    ஆக, சொல்லவந்த உண்மையென்னவென்றால்; கருவுற்று இருக்கும் அந்த இளம்தாய், பதறி அடித்துக் கொண்டு, கணவனின் அலுவலகத்துக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொள்கின்றாள்; அல்லது, நம்ம கணவனுக்கு, கம்ப்யூட்டரைத் தவிர ஒன்றும் தெரியாது என்று உணர்ந்தவள், தானே ஆட்டோ பிடித்து, நேராக மருத்துவமணைக்கு சென்று விடுகின்றாள். என்னம்மா, ஏன் இந்த பதற்றம்; என்ன ஆச்சு; என்று டாக்டர்கள் வினவ, I think, the baby is dead; there is no movement in my tummy; வழக்கமாக, வயிற்றில் உதைத்துக் கொண்டு இருக்கும் என் குழந்தை; இன்னைக்கு காலையிலிருந்து, ஒரு அசைவும் இல்லை; எனக்கு பயமாயிருக்கு; அதுதான், இங்கே ஓடி வந்தேன்.

  • Samiyar

    மருத்துவர்கள், பரிசோதனைகளை நடத்திவிட்டு, பயப்படத் தேவையில்லை; குழந்தை வயிற்றுக்குள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கின்றாள்; ஆக, குழந்தை, தாயின் வயிற்றுக்குள் உதைப்பது, முட்டுவது - அதுதான் வாழ்க்கை; வாழ்க்கையின் உண்மை; குழந்தை, தாயின் வயிற்றுக்குள் நடத்தும் போராட்டமே, அந்த எத்து, உதை; கருவறையில், வாழும் குழந்தை நடத்தும் போராட்டமே, அதனது வாழ்க்கை, அதனது வளர்ச்சி; போராட்டம் இல்லாத நிலையில், தாயே பயந்து விடுகின்றாள்; எத்தும் போராட்டம், முட்டும் போராட்டம் தாயின் வயிற்றுனுள் நடக்கும்போது, தாய் ஆனந்தம் அடைகின்றாள். கருவறையில் வளரும் குழந்தை, முழுவளர்ச்சி அடைந்தவுடன், எந்தவித குருநாதரின் உதவியில்லாமல், தன்னோட முயற்சியால், இயற்கையாகவே, பனிக்குடத்தை உடைத்துக் கொண்டு, புறத்தை அடைகின்றது. தாயும், கருவுற்று, பத்து மாதங்கள், தன் கர்ப்பப்பையில் சுமந்து, சுமையை சுமையாக கருதாமல், ஆனந்தமாக அநுபவித்து, மகவை ஈன்றெடுக்கின்றாள். பனிக்குடத்தை உடைத்துக் கொண்டு, பிறப்பது, அந்த குழந்தை மேற்கொள்ளும், வாழ்வின் முதல் போராட்டம்.

    ஆக, போராட்டமே வாழ்க்கை என்ற உண்மையை மனிதன் உணருவதில்லை; ஆதலால், மனிதன் வாழ்க்கையை வாழமுடியாமல் போராடிக் கொண்டு இருக்கின்றான்; வாழ்வின் உண்மையை, தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் மூலம் அறியாமல், அடுத்தவர்களின் உதவியை நாடுகின்றான்; தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, கண்டு, அறிந்து உணர்பவன் விழிப்புணர்வு கொள்கின்றான்; விழிப்புணர்வு கொண்டவன், மெய்ப்பொருளைக் காண்கின்றான்.

    ஆனால், இன்றைய காலகட்டத்தில், போலித்தனம் மிகுந்த சமூகத்தில், மனிதனால், தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறியமுடியவில்லை; உணரமுடியவில்லை; என்னதான் விழித்துப் பார்த்தாலும், மெய்ப்பொருளைக் காணவே முடியவில்லை; அங்கிங்கெனாதபடி, போலித்தனமே மெய்ப்பொருளாக நிரம்பிக் கிடக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில், மனிதனுக்கு இன்றியாமையாத தேவை - சாமியார்கள். ஆக, இன்றைய சமூகத்திற்கு, சாமியார்களின் சேவை மிகவும் அவசியம்; அதெப்படி, மேலை நாடுகளில் வாழும் மக்கள் சாமியார்கள் இல்லாமல் வாழ்கின்றார்களே என்ற கேள்வி உங்களுக்கு உதயமாகலாம்; ஆக, மேலை நாடுகளில் வாழும் மக்களின், மெய்ப்பொருள் தேவையை, இந்நாள்வரை, அவர்களின் மதகுருமார்கள் பூர்த்தி செய்து கொண்டு இருந்தார்கள்; மத குருமார்களைத்தவிர, மன தத்துவ நிபுணர்கள், அதாவது, Psychology என்ற மன தத்துவத்தை கற்று, அறிந்து, பயிற்சி மேற்கொண்ட மருத்துவர்கள், தங்களிடம் வரும் மனிதர்கள், வாழ்வின் மெய்பொருளைக் காண உதவி செய்கின்றார்கள்.

    இன்றைய காலகட்டத்தில், நம்ம சாமியார்களுக்கு, மேலை நாடுகளில் நல்ல கிராக்கி; நம்ம சாமியார்கள், மேலை நாடுகளுக்குச் சென்று, அந்த ஊரில் பொழப்பு நடத்தும் மனதத்துவ நிபுணர்களின் தொழிலில் பின்னடைவடையச் செய்து விடுகின்றார்கள். ஆக, சாமியார்கள் இல்லாத சமூகம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை; சாமியார்களை புறந்தள்ளிவிட்டு, மன தத்துவ மருத்துவர்களை, அதிக அளவில் உருவாக்க வேண்டும்.

    சரி, ஒத்துக் கொள்கின்றோம்; சமூகத்துக்கு மன தத்துவ மருத்துவர்கள் தேவை; மக்கள் அனைவரும், மன தத்துவ மருத்துவர்களைத் தேடி, வாழ்வின் மெய்ப்பொருளைக் காண முடியாது; ஆகவே, சமூகத்தில் சாமியார்கள் உருவாகட்டும்; ஆனால், இந்த சாமியார் வேண்டாம்; இவர் போலி; போலிச் சாமியாருக்குப் பதிலாக மெய்யான சாமியார் வேண்டும்; இந்த சாமியார், கடையை மூடிவிட்டு போகவேண்டும்; சத்தியம் கம்ப்யூட்டர் நிறுவனம் போல், இவரது நிறுவனம் இழுத்து மூடப்பட வேண்டும்; சத்தியம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை, மற்றவர்கள் எடுத்து நடத்துவதைப்போல், வேறு ஒரு சாமியார், இந்த நிறுவனத்தை தலைமைப் பொறுப்பேற்று நடத்த முன்வர வேண்டும்; அல்லது, வேறு ஒரு புது சாமியார், புது நிறுவனத்தை நிறுவ வேண்டும்.

    “Known devil is better than unknown angel,” என்று சொல்வார்கள். சாமியாரின் அகத்தில் அரங்கேறிய நிகழ்வுகள் அனைத்தும், தொலைக்காட்சி நிறுவனங்களின் சேவையால், புறத்தை அடைந்து விட்டது. தொலைக்காட்சி நிறுவனங்களின் அத்தகைய செயல், சேவையா அல்லது தொழில் தர்மமா அல்லது அறமற்ற செயலா என்பது விளங்கவில்லை; ஆனால், சாமியாரின் அகம், மற்றும் புறம் சமநிலையை அடைந்து விட்டது. அகம் புறம் சமநிலையை அடைந்து விட்டால், போலித்தனம் மறைந்து விடும்.

  • Samiyar

    தொலைக்காட்சி நிறுவனம் செய்த செயல், காவல்துறையினர் நடத்தும் என்கவுண்டர் கொலை போன்ற செயலாகும். நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவரை விசாரனை செய்து, நீதிபதி தீர்ப்பு வழங்கி, குற்றவாளிக்கு தண்டனை அளிக்காமல், காவல்துறையினரே, என்கவுண்டர் மூலம் தண்டனை வழங்குவதுபோல், தொலைக்காட்சி நிறுவனம், சாமியார் விசயத்தில் தண்டனை வழங்கி விட்டது. அந்த தண்டனையே, தூக்கு தண்டனைக்கு சமம். ஆக, அதற்குமேல் விசாரனை நடத்தி, நீதிமன்றம் தண்டனை வழங்குவது அர்த்தமற்ற செயலாகும்.

    தவறு செய்கின்றவனுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. ஆனால், துரோகம் செய்கின்றவனுக்கு, அவனது எஞ்சியுள்ள வாழ்க்கையே தண்டனையாகிவிடும். அந்த தொலைக்காட்சி நிறுவனமே, துரோகம் செய்தவனை தங்களது அலுவலகத்துக்குள் நுழையவிடுவதற்கு தயங்கும். அந்த ஆள் அலுவலகத்துக்குள் வரும்போது, என்ன கேமராவை மறைத்துக் கொண்டு வந்திருக்கின்றானோ என்ற பயத்துடனே இருக்கும் நிலை உருவாகிவிடும். வரலாற்றிலே பார்த்தீர்களானால், துரோகம் செய்தவர்களின் மீதுள்ள பழி அவர்களது தலைமுறைகளின் மீது தொடரும்.

    சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய, புது சாமியார்கள் தோன்றுவார்கள். பிரம்மச்சார்யம் ஒன்றுதான் முக்கியமென்றால், காம இன்பத்தை தியாகம் செய்தால், சமூகத்தில் பெரிய சாமியார் ஆகலாம் என்றால், பலர் முன்வருவார்கள். பொருளும், சமூகத்தில் மரியாதையும், மதிப்பும் கிடைக்கிறதென்றால், பலர் சாமியாராக முன்வருவார்கள். அப்படி புதிதாக உதயமாகும் சாமியார்கள், வேறு ஏதாவது புதிய தில்லுமுல்லு செய்ய நேரிடும். ஆகவே, known devil is better than unknown angel.

    ஆக, இந்த சாமியார் தண்டனை பெற்று விட்டார். அவரது அகமும் புறமும் அனைவரும் அறிவர். அவரை நம்பி ஏமாந்தோம் என்று யாரும் புகார் சொல்ல முடியாது. மக்கள், அவரைப்பற்றி நன்கு அறிந்தும், அவரைப் பிந்தொடர்ந்து செல்கின்றோம் என்றால், அவர்களது முடிவுக்கு அவர்களே பொறுப்பாவார்கள்.

    “கதவைத் திற; காத்து வரும்,” என்பது சாதரண உண்மை; ஆனால், இந்த உண்மையைக்கூட உணரும் நிலையில், மக்கள் இன்றில்லை. இன்றைய காலகட்டத்தில் வாழும் மக்களிடம், “கதவைத் திற,” என்று சொன்னால், அவர்களிடம் இருந்து வரும் பதில்:

    “அதுதான் பேன் காத்தாடி ஓடுகின்றதே; கதவை வேறு திறக்க வேண்டுமா?”

    “பேன் காத்தாடி, அறையில் தங்கி இருக்கும் காற்றை, மீண்டும் சுழலச் செய்கின்றது. Fresh காத்து, அறைக்கு வருவதில்லை. ஆக, கதவைத் திற.”

    “பேன் காத்தாடிக்குப் பதில், air-conditioner பொருத்தலாம் என்று எண்ணுகின்றேன். air-conditioner அறையைக் கூலாக வைத்திருக்கும்.”

    “air-conditioner உங்களது அறையை மட்டுமே கூலாக வைத்திருக்கும். வெளியே உள்ள air-conditioner அருகில் சென்று பாருங்கள். அனல் உஷ்ணம் கொதிக்கும்.”

    “சரி, கதவைத் திறக்கணுமா; ஜன்னல் மட்டும் திறந்தால் போதாதா?”

    “சரி, ஜன்னலையாவது திறந்து வையுங்கள்; அறைக்குள் காத்து வரட்டும்.”

    “அதில்லை. சென்ற வாரம், பக்கத்து தெருவில், ஜன்னல் வழியாக கம்பியை விட்டு, பொருட்களை எடுத்துச் சென்று விட்டார்கள்.”

    “நீங்கள் அறையில் இருக்கும்போதாவது, ஜன்னலை திறந்து வையுங்கள்.”

    “ஜன்னலைத் திறந்து வைத்தால், கொசு, பூச்சி வந்திடுமே?”

    ஆக, இப்படிப்பட்ட சமூகத்தில், “கதவைத் திற, காத்து வரும்,” என்று சொல்ல ஒரு சாமியார் கட்டாயம் வேண்டியிருக்கு.

    People always have needs; all their needs are not satisfied; most of their wants are not satisfied. The purpose of any business organization is to identify the unsatisfied wants of the people and build services or products to meet those demands of the people.

    இன்றைய காலகட்டத்தில், மக்களுக்கு எக்கச்சக்கமான பிரச்சனைகள் இருக்கு; மக்கள், தங்களது பிரச்சனைகளைப் புரிந்து, அதற்கான தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுவதில்லை; மக்கள், பிரச்சனைகளை மறக்கவே முயல்கின்றார்கள்; பிரச்சனையை மறந்து, ஒரு சில மணி நேரமாவது பரவசம் அடையும் வழிகளைத் தேடி அலைகின்றார்கள். ஆக, மக்களின் தேவையெல்லாம் - கேளிக்கை; எண்டர்டெயின்மெண்ட். மக்களாட்சியில் கேளிக்கை; ஆன்மீகத்தில் கேளிக்கை; விளையாட்டில் கேளிக்கை; அலுவலகத்தில் கேளிக்கை; குடும்பத்தில் கேளிக்கை. ஆக, கேளிக்கை என்பது நல்லதோர் பிஸினஸ்.

    பிஸினஸ் பிஸினஸ்மாதிரி பண்ண வேண்டும்; துறவறம் துறவறமாக பண்ண வேண்டும். ஆனால், இன்றைய சாமியார்கள், துறவறத்தை பிஸினஸ் போன்று பண்ணுகின்றார்கள். அதுதான் இன்றைய பிரச்சனை. The organizational structure is almost similar to that of Coco-Cola. They do have departments like, sales, marketing, legal,accounting and human resources. They do allocate resources and budget for promotional activities, advertising and marketing activities. So, spiritual entertainment business has a great potential; and if you do it right, it will be a very successful one. Have your organization registered with state and central governments; pay your sales and income taxes promptly; pay salary and allowances to your staff and employees; give them stock options and bonuses too; have your legal departments to handle all the legal issues; have your oversees departments handle operations in other countries.

    துறவறம் பூண்டு வாழ்ந்த துறவிகளும், இந்திய கலாசாரத்தில் உண்டு. துறவிகளுக்கு உறவுகள் இல்லை; சொத்துக்களை சேமிக்கும் செயலில் ஈடுபடுவதில்லை; துறவிகளுக்கு, அரசாங்கம், சட்டம், திட்டம், நீதித்துறை, சிறைச்சாலை, தண்டனை என்று எதுவும் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. புகழ்ச்சியை துறந்த துறவிக்கு, இகழ்ச்சி எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது. கட்டில் படுக்கையை துறந்த துறவிக்கு, ஜெயில் எந்தவித வித்தியாசத்தையும் ஏற்படுத்த முடியாது.

    ஆக, இன்றைய காலகட்டத்தில், படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை; எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கவில்லை; ஆதலால், சாமியார் ஆகிவிட்டேன் என்று அவசர அவசரமாக துறவறம் பூண்டு; துறவறம் என்றால் என்னவென்றுகூட அறியாமல், துறவறம் பூண்டு, துறவறத்தையும் பிஸினஸ்ஸையும் போட்டு குழப்பி, பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றார்கள்.

    துறவறம் என்று சொல்லி, தப்பான காரியங்களில் ஈடுபட்டுவிட்டு, பிறகு சட்டத்தின் உதவியைக் கொண்டு, பாதுகாப்பு தேடுவது, துறவறத்தை இழிவுபடுத்தும் செயலாகும். உண்மையான துறவிகள், வழக்கறிஞர்களை வைத்துக் கொண்டதில்லை; அரசன் தண்டனை அளித்தாலும், அவனிடம் கெஞ்சி கூத்தாடி தப்பிக்க முயற்சிக்கவில்லை. ஆக, துறவறத்தை துறந்து விட்டு, பிஸினஸை பிஸினஸாக நடத்துங்கள்; நல்ல ஆடிட்டர், வழக்கறிஞர்களை சம்பளத்துக்கு அமர்த்தி, வியாபாரத்தை சிறப்பாக நடத்துங்கள்.