நக்ஸல் தலைவரை முன்னிலைப்படுத்துங்கள்.
  • Naxal Leader

    பழனியப்பன் சிதம்பரம், மிகச் சிறப்பாக செயலாற்றிக் கொண்டு இருக்கின்றார். அவர் மெய்ப்பொருளைக் கண்டு விட்டார்; உள்நாட்டுப் பிரச்சனையின் உண்மையினை உணர்ந்து விட்டார். Seeing is doing; மெய்ப்பொருளைக் காண்பதே அறிவு. நாம போட்டு இருக்கின்ற சட்டையில் அழுக்கு படிந்திருக்கிறது என்று கண்டு விட்டால், உடனே சலவை செய்ய ஆரம்பித்து விடுகிறோம். இன்றைய மாபெரும் சவால், சட்டையில் அழுக்கு படிந்திருப்பதை, நாம் காண்பதே இல்லை; காணாத நிலையில், எப்படி சலவை செய்யத் தோணும்.

    ஆக, சிதம்பரமும் சரி; மன்மோகன் சிங்கும் சரி; மெய்ப்பொருளை கண்டு விட்டார்கள்; கண்டவுடன், மக்கள் அனைவரும் உணரும் வகையில் தெளிவாக எடுத்துச் சொல்லி விட்டார்கள்; இந்தியாவின் இன்றைய மாபெரும் சவால் - நக்சல் பிரச்சனை; எந்தவித மூடி மறைக்கும் வேலையில், நேரத்தை வீணடிக்காமல், மக்களையும் தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். உண்மையை தெளிவாக மக்களுக்கு எடுத்துச் சொல்லும்போது, மக்களும் விழிப்புணர்வு கொண்டு, மனதாலும், சொல்லாலும், செயலாலும், முழு ஒத்துழைப்பு கொடுக்க முன்வருகிறார்கள். இதுதான் சரியான வழிமுறை. சிதம்பரம் மிகச்சிறப்பாக செயலாற்றுகின்றார். கானாடுகாத்தான் மக்கள் மட்டும் அன்றி, தமிழக மக்கள் அனைவரும், காங்கிரஸ்காரர்கள், தமிழர்கள், திராவிடர்கள் என்று எந்தப் பாகுபாடுமின்றி, இந்திய மக்கள் அனைவரும் சிதம்பரத்தின் செயலாற்றலையும், பொறுப்புணர்வையும் கண்டு முழு ஆதரவு அளிக்கின்றார்கள். இன்று அவர் எடுத்திருக்கின்ற காரியம், நல்ல தீர்வு காண வேண்டும். வெற்றி தோல்வி என்று திருவள்ளுவர் சொல்வதில்லை. மெய்வருத்தக் கூலி தரும் - அதாவது பலன் தரும். அதுதான் சரியான முறை; எல்லாத்தையும் வெற்றி - தோல்வி என்று மனிதன் வாழ்க்கையை போட்டியாகவே உருவாக்கி தவிக்கின்றான்.

    Freedom is always at the beginning; not at the end. மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, கடற்கரைக்கு சென்று, கடல் நீரில் இருந்து உப்பு எடுத்தவுடனே, பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் ஆட்டம் காணத் தொடங்கி விட்டது. சுப்பிரமணி பாரதியார் "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்,” என்று பாட ஆரம்பித்தவுடனே, சுதந்திரம் மனதளவில் அடைந்து விட்டோம். அடிமைத்தனம் என்ற மெய்ப்பொருளைக் கண்டார்கள், நம் முன்னோர்கள்; அந்த உண்மையை உணர்ந்ததால், அடிமைச் சங்கலியை உடைத்தெறியும் செயலில் ஈடுபட ஆரம்பித்தார்கள். சுதந்திரம் அடைந்தார்கள். அப்துல் கலாம் என்றைக்கு சொன்னாரோ - இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும்; அன்றே, வளர்ச்சி அடையத் தொடங்கி விட்டோம். ஆக, நக்சல் பிரச்சனையை என்று உணர்ந்தோமோ, அன்றே பிரச்சனையின் தீர்வு ஆரம்பமாகி விட்டது. நக்சல் பிரச்சனை மறைந்து தீர்வு வெளிப்படும் வேளையில், இந்தியா சுதந்திரம் அடைந்த போது, சுதந்திரப் போராட்ட தலைவர்கள் எவ்வளவு ஆனந்தம் அடைந்தார்களோ, அதே அளவு ஆனந்தம் சிதம்பரம் அடையலாம்.

  • Naxal Leader

    நக்சல் பிரச்சனை பாதிக்கப்பட்ட பகுதிகளில், வளர்ச்சி பணிகளைத் தொடங்க வேண்டும். Human being needs two kinds of freedom; freedom of movement; and freedom of expression. அந்தப் பகுதிகளில் சைக்கிள்களை குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க வழிவகுத்துக் கொடுங்கள். உடனே ஆல் இன் ஆல் அழகுராஜா சைக்கிள் பழுது பார்க்கும் நிலையம் உருவாகும். பிறகு ரிக்ஷா போக்குவரத்து; அடுத்து ஆட்டோ; அடுத்து மினிவேன்; பிறகு பஸ், லாரி என்று போக்குவரத்து ஆரம்பமாகும்.

    அதேபோல் ரேடியோ நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டும். ரேடியோ மூலம் இசை அங்கு சென்று சேரும். இசை, அங்கு கரடு முரடாக உள்ள உள்ளத்தில் ஊடுருவிச் செல்லும். இசை உள்ளத்தை இளகச் செய்யும். ஆரம்பத்தில், ரேடியோ இசைக் கேட்டு, அவர்களது இயக்கப் பாடல்களை, புது இசையில் இசையமைத்துப் பாடுவார்கள். பிறகு இயக்கத்தைவிட்டு வெளியேறி சினிமாவில் சேர்ந்து, மாபெரும் இசையமைப்பாளராக உருவாகி விடுவார்கள். நக்சல்களும் இளையராஜாவாகலாம்; இளைய ராஜாவும் நக்சல்களாகலாம். ஆக, சைக்கிள் மற்றும் ரேடியோ, இன்றைய உலகப் பிரச்சனை அனைத்தையும் தீர்த்துவிடும்.

    ஒரு பிரச்சனையை பலவித கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். பலவித வழிமுறைகளையும் கையாள வேண்டும். ஆக, வளர்ச்சி திட்டங்களைத்தவிர, நக்சல் தலைவரை முன்னிலைப்படுத்த வேண்டும். ஆக்கச் செயலானாலும் சரி, அழிவுச் செயலானாலும் சரி, தலைவன் ஒருவன் கட்டாயம் தேவை. தலைவன் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது. தலைவன் இல்லாமல் ஆக்கச் செயலும் நிறைவேறாது; தலைவன் இல்லாமல் அழிவுச் செயலும் நிறைவேறாது. ஆக, தலைவன் கட்டாயம் இருக்கின்றான். அதுவும், அந்த தலைவன் ஒருவனே; பல தலைகள் இருக்கவே முடியாது. ஒரே ஒருவன் தான்; அந்த ஒருவன் தான் தலைவன். அந்த தலைவனை முன்னிலைப்படுத்த வேண்டும். தலைவனை முன்னிலைப்படுத்தும்போது, ஆக்கச் செயலுக்கும் அவனே பொறுப்பு; அழிவுச் செயலுக்கும் அவனே பொறுப்பு என்று மக்கள் உணர்வார்கள். ஆக, தலைவனை முன்னிலைப்படுத்துங்கள். தலைவனை, உலகறியச் செய்யுங்கள்.

    தலைமைப் பண்பு கொண்டவந்தான் தலைவன். தலைவன் பிறக்கின்றான்; உருவாக்கப்படுவதில்லை. தலைவன் என்பவன், காற்று. காற்று, சில சமயம் தென்றலாகி செடி, கொடிகளைத் தழுவிச் செல்லும்; சில சமயம் புயல் காற்றாக உருவாகும்; சில சமயம் சூறாவலியாக சீறிப் பாயும். கொடி அசைந்து காற்று வந்ததா; காற்று வந்ததால் கொடி அசைந்ததா; காற்று கொடிகளை அசைக்கும்; சில சமயம் மரங்களையும் வீழ்த்தி விடும். தலைவர்கள் தங்களது சக்தி அறியாது, இயக்கங்களில் சிக்கிக் கொள்வார்கள்; பிறகு இயக்கங்களின் உண்மையறிந்து, மெய்ப்பொருள் கண்டு, இயக்கங்களில் தலைவனும் தொண்டனுக்கு அடிமை; தொண்டனும் தலைவனுக்கு அடிமை; என்ற உண்மையை உணர்ந்து இயக்கங்களில் இருந்து வெளியேறி விடுவார்கள். அடிமைகளுக்குத்தான் இயக்கங்கள் தேவை; சுதந்திர மனிதனுக்கு எந்தவித இயக்கமும் தேவையில்லை.

    மெய்ப்பொருள் கண்டவுடன், காந்தி காங்கிரஸில் இருந்து வெளியேறி விட்டார். மெய்ப்பொருள் கண்டவுடன், பெரியார், காங்கிரஸில் இருந்து வெளியேறி விட்டார். மெய்ப்பொருள் கண்டவுடன், அண்ணாதுரை, பெரியாரின் இயக்கத்தில் இருந்து வெளியேறி விட்டார். கண்ணதாசன் எல்லா இயக்கத்துக்குள் புகுந்து விடுதலையாகி வெளியேறி விட்டார்.

  • Naxal Leader

    மம்தா பானர்ஜியும், பிரணாப் முகர்ஜியும் ஒரே இயக்கத்தில் இருந்தார்கள். அனைத்து மாநிலங்களிலும், காங்கிரஸில் கோஷ்டிச் சண்டைதான் என்ற நிலை. மம்தா பானர்ஜி, தலைமைப் பண்பு கொண்டவர்; தன்னம்பிக்கை உடையவர்; இயக்கத்தில் சிக்கிக் கொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் அடிமையாக, கோஷ்டிச் சண்டையில் காலத்தைக் கழிக்க தயாராக இல்லை. ரிஸ்க் எடுத்து காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து வெளியேறி விட்டார். இன்று மாபெரும் வளர்ச்சி அடைந்திருக்கின்றார். நிச்சயமாக காங்கிரஸில் தொடர்ந்திருந்தால், இந்த வளர்ச்சியை அடைந்திருக்கவே முடியாது. வளர்ந்திருப்பது திரிணாமுல் காங்கிரஸ் என்ற இயக்கம் அல்ல; வளர்ந்திருப்பது தலைவர், மம்தா பானர்ஜி.

    ஆக, நக்சல் தலைவரை முன்னிலைப்படுத்துங்கள். மக்கள் அனைவரும் அறியட்டும், அந்த நக்சல் தலைவர் யார் என்று. “மாவோயிஸ்ட்கள்,” உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய வார்த்தை. அவுங்க சீனாவிலே, அவரைக் கை கழுவி விட்டாங்க; நாம எதுக்கு இன்னமும் "மாவோ" வை முன்னிலைப்படுத்த வேண்டும். அதையும்தவிர, இதிலேகூட சுயமாக நம்மால் சிந்திக்க முடியாதா; இறக்குமதி செய்ய வேண்டுமா, மாவோவின் கொள்கைகளை; பெயரும், புகழும், பழியும் - நம் உள்ளூர் தலைவனையே சென்றடையட்டும்.

    நக்சலைட், தீவிரவாதி - இதெல்லாம் ஏதோ டாக்டர், இன்ஜினியர் பட்டங்கள் மாதிரித்தான் இருக்கின்றது. உண்மையென்னவென்றால், இவர்கள் அனைவரும் அவர்கள் சார்ந்திருக்கும் இயக்கங்களின் அடிமைகள். அந்த உண்மையை அவர்களுக்கு உணர வைக்க வேண்டும். ஆக, தலைவரை முன்னிலைப்படுத்துங்கள்; தலைவன் யார் என்று தெரியாத நிலையில், ஏதாவது பெயரை எடுத்து விடுங்கள். நக்சல் தலைவன், சோமன்னா என்று; அந்த இயக்கத்தில் இருக்கும் அனைவரும், சோமன்னாவின் அடிமைகள் என்று தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். சும்மா, நக்சலைட், தீவிரவாதி, என்றால், அது என்னமோ அவர்களுக்கு பெருமை சேர்க்கும் சொல்லாக அமைந்து விடுகிறது. அவர்களும் பெருமையாக, ஆமாம், நான் நக்சலைட்; நான் தீவிரவாதி என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

    ஆக, தலைவனை முன்னிலைப்படுத்துங்கள். மற்றவர்கள் தலைவனின் அடிமை என்று எடுத்துச் சொல்லுங்கள். நக்சலைட் என்று இயக்கத்தை முன்னிலைப்படுத்தும்போது, உங்களையும் அறியாமல், மாபெரும் தவறை நீங்கள் செய்கிறீர்கள். அந்த இயக்கத்தில் உள்ள அடிமைகள் அனைவரையும் ஒருங்கிணைக்கின்றீர்கள். பல் வேறு மாநிலங்களில், பிரிந்து செயல்படும் கூட்டங்களை, ஒருங்கிணைப்பது நீங்கள். தலைவனை முன்னிலைப்படுத்துங்கள்; சகோதர யுத்தம் தொடங்கும்; இயக்கங்கள் அழியும்; இயக்கங்கள் அழியும்போது, அடிமைகள் விடுதலை அடைவார்கள். சுதந்திரம் அடைந்த தலைவன், ஆக்கச் செயலில் ஈடுபடுவான்.

    தலைவன் இல்லாத இயக்கங்கள், சமுதாயத்துக்கு சீர்கேடுதான் விளைவிக்கின்றது. கல் தோன்றி மண் தோன்றாத காலத்தில் இருந்து இயங்கும் இயக்கம் - கம்யூனிஸ்ட். அந்த இயக்கத்தில் சிக்கி வெளிவர முடியாமல் போன தலைவர்கள் ஏராளம். ஆக, இயக்கங்களை முன்னிலைப்படுத்துவதை நிறுத்துங்கள். தலைவனை முன்னிலைப்படுத்துங்கள். இதேதான் சர்வதேச பிரச்சனைக்கும் தீர்வு காண வழி. அல்-கெய்தா, தாலிபான் என்பதற்கு பதிலாக, பின் லேடனை முன்னிலைப்படுத்துங்கள்; இயக்கத்தில் சகோதர யுத்தம் உருவாகும்; இயக்கங்கள் இயற்கையாகவே அழியும். தலைவனை முன்னிலைப்படுத்தும்போது, தலைவன் திருந்தி ஆக்க வேலையில் ஈடுபட வாய்ப்பு உண்டு; அப்படி இல்லாவிடினும், ஹிட்லரோடு அழிவு செயல் நின்றது. ஹிட்லரை முன்னிலைபடுத்தாமல், நாசி இயக்கம் முன்னிலைப்படுத்தப்பட்டு இருந்தால், கம்யூனிசமாக சமுதாயத்துக்கு தொடர்ந்து சீர்கேட்டினை விளைவிக்கும். ஆக, நக்சல் தலைவன் யார் என்று கண்டு, உலகறியச் செய்யுங்கள். சிதம்பரம் எடுக்கும் முயற்சிகளுக்கு, பலன் நிச்சயம் கிடைக்கும்.