வந்தா மலை!
  • Rajya Sabha

    தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்.

    அதையும்விட எளிதாக சொல்லுவாங்க எங்க ஊரிலே;

    Hairஐப்போட்டு Mountainஐ இழு;
    வந்தா மலை; போனா hair.

    முயற்சியை கைவிடவே கூடாது; இப்ப என்ன முடியுமோ அதைச் செய்துடனும்; இருக்கின்ற பதினெட்டு எம்.எல்.யேக்களை வைத்துக் கொண்டு, இரண்டு பேரை ராஜ்யசபா தேர்தலுக்கு நிறுத்த முடியும் என்றால்; இரண்டு வேட்புமனு தாக்கல் செய்துவிட வேண்டும். வெற்றி தோல்வியெல்லாம் கிடையாது; தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டியது - ஜனநாயக கடமை.

    Take a look at Constitution of India and read article Article 80(4). Members of Rajya Sabha shall be elected by the elected members of State Legislative Assemblies through the system of proportional representation by means of the single transferable vote.

    தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; ராஜ்ய சபா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவதில்லை; தேர்தல் கட்டாயம் நடத்த வேண்டும். மாநிலத்தின் சட்டப்பேரவையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், பொறுப்புணர்வுடன் வாக்களித்து ராஜ்ய சபாவுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நியமனம் செய்வது, இந்திய அரசியலமைப்பை இழிவுபடுத்தும் செயலாகும். எந்த வேட்பாளரும் தகுதியுடையவர் இல்லையென்று எண்ணினால், 49-a, யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று சொல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

    Now it looks like a political cartel. Pepsi and Coca-Cola used to get into a cartel agreement regarding price fixing and other arrangements. அதுபோல இருக்கு, இன்றைக்கு இந்த அரசியல் தலைவர்கள் செய்யும் காரியம். அவுங்க இஷ்டத்துக்கு அரசியலமைப்பைக் கேலிக் கூத்தாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். இது என்ன வழிமுறை; நாளைய தலைமுறையினருக்கு நாம் காட்டும் நல்வழியா இது; இன்னும் வரவர, நாடு மோசமாகிக் கொண்டுதான் போய்க்கிட்டு இருக்கு. நாளைக்கு வரும் அரசியல்வாதிகள், இதைவிட கேவலமான செயலில்தான் ஈடுபடப் போகின்றார்கள். எந்தவித தகுதியும் இல்லாதவர்கள், அவர்களுக்குள் அனுசரித்துக் கொண்டு, தேர்தல் இல்லாமல், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களாகி விடுவார்கள். தேர்தலை இல்லாமல் செய்யும் செயல், தவறான முன்னுதாரணம்.

    சட்டப்பேரவையில் இடம்பெற்று இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகளின் வாக்குரிமையை பறிக்கும் செயல் இது; அவர்கள் வாக்களிக்க வேண்டும். இன்றைய அரசியல் தலைவர்களுக்கு, அவர்களது உறுப்பினர்கள் மீதே நம்பிக்கை இல்லை; அதனால்தான் இந்த அட்ஜஸ்ட்மெண்ட்; ஒருத்தர் மட்டுமே வேட்பாளராக போட்டியிட்டாலும், கட்டாயம் ஓட்டுப்போட்டு அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேர்தலை தவிர்ப்பது, மிகவும் ஏமாற்றும் செயல்.

    இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்களத் தேர்ந்தெடுக்க 78 ஓட்டுக்கள் வேண்டும்; இவர்களிடம் இருப்பதோ 75; அதுவும் அத்தனை பேரும் அவைக்கு வந்திருந்து, செல்லாத ஓட்டாக்காமல், அதே சமயத்தில் விசுவாசத்துடன் வாக்களித்தால் மட்டுமே, 75 வாக்குக்கள் கிடைக்கும்.

    நான்கு ராஜ்யசபா உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 156 ஓட்டுக்கள் வேண்டும்; இவர்களிடம் இருப்பதோ 137; மேலே சொன்ன அதே கதை; அதைத்தவிர காங்கிரஸ் கோஷ்டிகள்.

    ஆக, இரண்டு பேருமே, பா.ம.க வோட்டுகள் இல்லாமல் அவர்களது இலக்கை அடைய முடியாது. கட்டாயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பா.ம.க ஒரு வேட்பாளரை நிறுத்தினால், தேர்தல் நடக்கும் நிலை உருவாகும். சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நம்மவர்களே; நம்மவர்கள் இன்றைய சூழ்நிலையில், கடைப்பிடிக்கும் ஒரே கொள்கை: கையிலே காசு; வாயிலே தோசை. ராஜ்யசபா சீட்டுக்கு சில கோடிகள் செலவழிப்பது செலவு அல்ல; முதலீடு.

    ஆக, கட்டாயம் சத்தியத்தை சோதித்துப் பார்த்திட வேண்டும். சிபு சோரன், ஜெகன் மோகன் ரெட்டி என்று அனைவரும் சத்திய சோதனையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் நடத்தும் சத்திய சோதனையின் மூலம், இந்திய ஜனநாயகத்தின் குறைகளைத் தெளிவாக காண முடிகின்றது; குறைகளைக் கண்டால்தான், அவைகளை அகற்ற முடியும். ஆக, ராமதாஸுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு; நடத்தி விடுங்கள், சத்திய சோதனையை. முடிவில், வந்தா மலை.