சுருக்கமாக...
காவி தீவிரவாதம்; பாரதீய ஜனதா கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால், ராஜினாமா; தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு.
டில்லியில் நிதி அமைச்சராக இருந்து, பல பட்ஜெட்கள் போட்டாகி விட்டது. உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியாகி விட்டது. உள்துறையில் இருக்கும் பிரச்சனைகள், காஷ்மீர், நாக்ஸலைட்; இதெல்லாம் இப்போதைக்கு முடியக்கூடியதல்ல; கவுரவமாக கழண்டுக் கொள்ள, காவி தீவிரவாதம் கை கொடுக்கும்.
தமிழகம் வந்து, வருகின்ற தேர்தலுக்கு வளமான அடித்தளம் அமைக்க வேண்டியது பா.சிதம்பரத்தின் பொறுப்பு. கூட்டணியை லாகவமாக கழட்டி விடுவது யாரு? பூணைக்கு மணி கட்டுவது யாரு? இதுதான் இன்றைய மாபெரும் சவால். கூட்டணியில் இருந்து கழட்டி விட்ட கையோடு, மத்திய மந்திரி சபையிலிருந்தும் கழட்டி விடப்படுவார்கள்.
அனைவருமே, தனித்து நின்று வெற்றி பெரும் நம்பிக்கையினை அடைந்து விட்டனர். பா. சிதம்பரம் அடுத்த தமிழக முதல்வர். அவருக்கென்ன தகுதி இல்லையா? ஆகக் கூடாதா! ஆக முடியாதா?
ராகுல், தமிழகத்தை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டுள்ளார் என்று அனைவரும் அறிகின்றனர்; ஒரு சிலரைத் தவிர.