Yes. That was a farewell speech from Manmohan Singh on the floor of the Parliament on December 27, 2011.
Manmohan was bidding farewell to the old, ineffective legislature. Manmohan is now welcoming the dawn of true, real Democracy in India.
Now in India, it is Democracy of the people; Democracy for the people; Democracy by the people. The nation is now proud of you. You, all Members of Parliament, you did deliver the excellent performance on the floor of Parliament.
Can not ask for any thing more. The speech on the floor was wonderful, effective, real, true from the heart. No faking; no praising; no shouting; no running.
For our health, we go to doctors. The doctors discuss among themselves and start the treatment. All doctors may not agree. They may express different and sometimes opposite point of view. But the collective, whole perspective is for better health.
The nation and its people health is in your hands. It's all of your responsibilities to build a strong, healthier, working, effective nation; not only for the current generations; but also for the future generations.
When you deliver excellent performance, people will regard you as the Founding Fathers and Mothers of Modern India.
திருவிளையாடல் படத்தில், அம்மையும், அப்பனும் அமர்ந்திருப்பார்கள். பிள்ளையார், முருகன் அருகில் நின்றுகொண்டு இருப்பார்கள். அப்பொழுது, நாரதர், அங்கு மாங்கனியைக் கொண்டு வருவார். மாங்கனியை அடைவதற்கு, அப்பன் சிவன், தனது மகன்களுக்கு போட்டி ஒன்றினை அறிவிப்பார். உலகத்தை, முதலில் சுற்றி வலம் வருகின்றவருக்கு, பரிசாக, இந்த மாங்கனியை அளிக்கலாம் என்று தீர்மானித்து எடுத்துரைப்பார்.
உடனே, முருகன், தனது வாகனமான மயில்மீது ஏறி, உலகை வலம் வருவார். பிள்ளையார், அவையில் உள்ள சான்றோர்களிடம் வினவுவார். அம்மை அப்பன் வேறு; உலகம் வேறா. அம்மை அப்பன்தானே உலகம். அம்மை அப்பனை சுற்றி வலம் வந்தால், உலகத்தையே வலம் வந்ததாகத்தானே அர்த்தம். ஆக, பிள்ளையார், அம்மை அப்பனை சுற்றி வலம் வந்து, மதித்து, மரியாதை அளித்து வணங்கி, மாங்கனியைப் பெற்றுக் கொள்வார்.
பிறகு, முருகன் வந்து, தனது நியாயமான கோபத்தை வெளிப்படுத்த; தாய், முருகனுக்கு எடுத்துரைத்த கதையாக அமைந்ததுதான் திருவிளையாடல். ஏ.பி. நாகராஜனின் அருமையான திரைக்காவியம்; நமது பொக்கிஷம்.
ஆக, இந்திய மக்கள் வேறு, பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்கள் வேறு அல்ல. நமது பாராளுமன்ற உறுப்பினர்கள்தான், இந்திய தேசத்து குடிமக்கள்; குடிமக்களின் பிரதிநிதிகள்.
ஆக, பாராளுமன்ற உறுப்பினர்களை வணங்குவது, இந்திய தேசத்து மக்கள் அனைவரையும் வணங்குவதற்கு இணையாகும். மகத்தான மக்கள் பணிக்கு, உங்கள் அனைவரையும், தலை வணங்கி, வாழ்த்துகின்றோம்.
பொதுவாழ்வில் ஈடுபடுகின்றவர்கள், ஆரம்பத்திலேயே திட்டங்களைத் தீட்டி, வரவு கணக்குப்போட்டு, களத்தில் இறங்குவதில்லை. தனது சுயநலத்தினைத்தாண்டி, பொதுநலத்துக்காக, உணர்வு உந்த, களத்தில் குதிக்கின்றார்கள்.
மக்களும், சும்மா எல்லோருக்கும், எப்பொழுதும் ஆதரவை அள்ளி வழங்குவதில்லை. மக்கள், சீர்தூக்கிப் பார்த்துத்தான், முடிவெடுக்கின்றார்கள். ஆக, மக்கள் ஆதரவு பெற்று, களத்தில் நிற்பது என்பது, எளிதான செயல் அல்ல.
மக்கள் ஆதரவுடன், பேர், புகழ் மற்றும் பொறுப்பு வந்து சேர்கின்றது. தனது முன்னால், மக்களின் வரிப்பணம் கொட்டிக் கிடக்கின்றது. கை வைத்தாலும், யாருக்கும் தெரியாது என்ற நிலை. அந்த தருணத்தில், யாராக இருந்தாலும், கொஞ்சம் எடுத்து பையில் வைக்கத்தான் செய்வான். எடுக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். என்ன ஒண்ணு; சமீப காலமாக, கொஞ்சமாக மக்களுக்காக ஒதுக்கிவிட்டு, மொத்தத்தையும் சுருட்டிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
ஆக, மொழங்கையை நக்கத்தான் செய்வான். மரத்தின்மீது ஏறி, தேனீக்களிடம் கொட்டு வாங்கி, தேனை எடுக்கின்றவன், மொழங்கையில் வழிந்தோடும் தேனை நக்கத்தான் செய்வான்.
நீ ஏறு; நீ மரத்தில் ஏறுய்யா; தேனீக்களிடம் கொட்டு வாங்கி; அப்படியே ஒரு சொட்டு தேனும் வீணாக்காமல், நீ ஏறிக் கொண்டு வா. கொண்டு வந்து, மக்களுக்கு சிந்தாமல், சிதராமல் கொடு. அப்பக்கூட, மக்கள், தங்கள் கையில் கிடைத்த தேனைவிட்டுவிட்டு, உன் மொழங்கையைத்தான் பார்ப்பார்கள். நீ, உன் மொழங்கையில் வழிந்தோடும் தேனையும் வழித்து எடுத்து, மொத்தமாக் கொடுத்துட்டு போ.
என்னதான் சிறப்பான சேவை ஆற்றினாலும், மக்கள், உனக்கு அப்படியே டபுள் மஹாத்மா என்று பட்டத்தை அள்ளி வழங்கிவிடப் போவதில்லை. இறுதியில், நன்றியுணர்வு இல்லாத மக்கள் என்று திட்டி தீர்த்துவிட்டு, நீ களத்தில் இருந்து வெளியேறுவாய்.
அதற்கு, அவெங்க, மொழங்கையை நக்கிவிட்டுப் போகட்டும். நீங்களும், மரத்தில் ஏற மாட்டேங்க; சும்மா, வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, ஒட்டு மொத்தமாக ஊழல், இலஞ்சம் என்று கூட்டத்தோடு கோவிந்தா மட்டும் போடுவீர்கள்.
அவெங்க திருந்திட்டாங்க; தேன், அவெங்களுக்கு திகட்டி விட்டது. நீங்கத்தான் இன்னும் திருந்தவில்லை. அவெங்க, இனி மக்கள் சேவையை சிறப்பாகவே ஆற்றுவார்கள். நீங்க, உங்க வேலையைப்போய் பாருங்க. நீ, உன் அலுவலகத்தில் இருந்து, பேப்பர், பென்சில், பேனா வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல், முதலில் நடந்து காட்டு. இந்தியாவில் இருந்து ஊழல், தானாகவே மறைந்து போய்விடும்.