Faceless Fake Friends.
  • Facebook

    Hi Rom.

    Hi Sun oil.

    Ram. ராம் என்ற பெயரைத்தான், அந்த தேசத்து மக்களின் உச்சரிப்பதற்கு ஏதுவாக, Ram, Rom ஆக மாற்றி வைத்துக் கொண்டார். வேறு ஏதுவும், எண் ஜோசியர் சொல்லி, பெயரை மாற்றிக் கொள்ளவில்லை.
    Sun oil. பெற்றோர்கள் வைத்த பெயர், சுனில். எத்தனை முறை எடுத்துரைத்தாலும், அந்த தேசத்து மக்கள், சன் ஆயில் என்றுதான் அழைக்கின்றார்கள். அவர்களுக்கு ஏதுவாக, இவரும் தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்டார்.

    இருவரும், பேஸ்புக் நண்பர்கள். தினந்தோறும், விடாமல், உலக நடப்புகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள். அலசி ஆராய்ந்து விடுவார்கள். ஒருவர் வசிப்பது, கனடாவில். மற்றொருவர் வசிப்பது, ஆஸ்திரேலியாவில். புகைப்படங்கள், வீடியோக்கள் என்று பலதையும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், இதுவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிட்டவில்லை.

    இருவரின் origin, இந்தியா. இந்தியாவுக்கு விடுமுறைக் காலங்களில் வந்து பார்த்ததுண்டு. அங்கே வாழ்ந்த அனுபவம் இல்லை. மற்றபடி, இந்தியாவைப் பற்றிய அனைத்துவித தகவல்களையும், இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்வார்கள்.

    சமீபத்தில், அவர்கள் இருவரும் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட உரையாடல். தற்பொழுது, ஒரு இன்ட்ரஸ்டிங் புராஜக்ட் செய்து கொண்டு இருக்கின்றேன். அது என்னவென்றால், மனிதகுல origin. It is a scientific project. I take myself as a case study. I am collecting DNA information of my origin. We collect sample DNA data, back from ten thousand years ago. Each hundred year is one generation.

    Generation என்பது ஒரு தலைமுறை; அதாவது, ஒருவர் பிறந்து வளர்ந்து மற்றொரு சந்ததியை உருவாக்கிவிடும்வரை உள்ள காலப் பகுதி. ஒரு தலைமுறை பின்னோக்கி சென்றால், காந்தி, பாரதியார். இரண்டு தலைமுறை பின்னோக்கி சென்றால், கட்டபொம்மன், திப்பு சுல்தான். ஐந்து தலைமுறை பின்னோக்கி சென்றால், அக்பர், பாபர்; அதற்கும் பின்னோக்கி சென்றால், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்.
  • Facebook

    ஆக, இருபது தலைமுறை பின்னோக்கி சென்றால், அந்த காலகட்டத்தில் வாழ்ந்த நம்ம தாத்தா பாட்டிமார்கள், திருவள்ளுவருக்கு நண்பர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அல்லது, உனது DNA ஆராய்ச்சி மூலம், திருவள்ளுவரே, உனது இருபதாவது தலைமுறை தாத்தா என்று கண்டு பிடித்தாலும் ஆச்சரியமில்லை. உனது ஆராய்ச்சி எது வரைக்கும் வந்திருக்கு.

    நூறு தலைமுறைக்கு முந்தின DNA sample கிடைத்திருக்கு. அந்த DNA என்னோட DNA வுடன், ரொம்ப சரியாக பொருந்திருக்கு. அந்த DNA ஆப்பிரிக்கா கண்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் DNA ஆகும். அதன்படி பார்க்கும்போது, எனது மூலம், ஆப்பிரிக்கா கண்டத்தில் ஆரம்பிச்சு இருக்கு.

    கண்ணா, அது ஆப்பிரிக்கா கண்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் DNA அல்ல. மனிதக் குரங்குகளின் DNA வாக இருந்திருக்கும். உன்னோட மூலம் மட்டும் அல்ல. அனைத்து மனித குலத்தின் மூலமே அங்கிருந்துதான் உருவாக்கி இருந்திருக்கு. சரி, நூறு தலைமுறை பின்னோக்கி சென்று உனது மூலத்தை தேடி அலைகின்றாய்; இருபது தலைமுறை பின்னோக்கி சென்று, திருவள்ளுவரோடு உறவு கொண்டாடுகின்றாய். உன்னோட இன்றைய தலைமுறை DNA என்ன சொல்கின்றது.

    இன்றைய தலைமுறை DNA சவாலோ சவால். யாரிடம்போய் கேட்பது. பெற்றோர்கள், தற்பொழுதுதான், they got some understanding on their misunderstanding. Their fight is just come to a ceasefire. I don't want to ask my parents about my origin. Perhaps, they themselves had forgot their origin.

  • Facebook

    சரி, விடுமுறைக்கு என்ன பிளான். நான் இந்தியாவுக்கு போனாலும் போவேன்.

    நானும், இந்தியாவுக்கு விடுமுறைக்கு போவேன்.

    இந்தியாவில் எந்த சிட்டி. My grandparents live in Chennai. So, we go to Chennai.

    My grandparents live in Madras. I went long time ago, when I was a little kid.

    Hey, Madras and Chennai is the same. Perhaps, we may meet there. I have never met any of my online friends.

    Sure. I hope, Internet works there. I will ping you, when I reach Chennai. We shall meet at some restaurant place.

    இந்தியாவில், இரண்டு பேரும் ஒரே வீட்டில் வந்து இறங்கின்றார்கள். பெரியவர்களின் அறியாமையால், இன்றைய இளம் தலைமுறையினர், ஆதியும் அறியாமல்; எங்கிருந்து வந்தோம் என்று அறியாமல்; இங்கிருந்து எங்கு பயணிப்பது; எங்ஙனம் பயணிப்பது என்று அறியாமல் தவிக்கின்றனர்.
    பேஸ்புக் நண்பர்களாக இருந்த அந்த முகம் தெரியாத இருவர்; இந்தியாவில், ஒரே வீட்டில் தங்கும்போது, நெருங்கிய சொந்தம் என்ற உண்மையை உணர்ந்தார்கள். இது, அவர்களுக்கு பழக்கப்படாத உறவுமுறை. இந்த புதிய உறவுமுறையில், சிக்கி, புழுங்கி, தவிப்பதை தவிர்க்க படாதபாடு பட்டார்கள். முகம் அறியாத பேஸ்புக்கில், இனிய நண்பர்களாக பழகினார்கள். இந்த புதிய உறவு முறையின் சிக்கலினால், பழைய நட்பினையும் தொடர முடியாமல், both of them removed each other, from their friends circle.