திருடாதே, பாப்பா திருடாதே திருடாதே, பாப்பா திருடாதே திருடாதே, பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே வறுமை நிலைக்கு பயந்துவிடாதே திறமை இருக்கு மறந்து விடாதே திருடாதே, பாப்பா திருடாதே
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ திருடாதே, பாப்பா திருடாதே
திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டுத் தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது சட்டம் போட்டுத் தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது
திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது திருடாதே, பாப்பா திருடாதே
கொடுக்குற காலம் நெருங்குவதால் இனி எடுக்குற அவசியம் இருக்காது கொடுக்குற காலம் நெருங்குவதால் இனி எடுக்குற அவசியம் இருக்காது இனி எடுக்குற அவசியம் இருக்காது
இருக்குறதெல்லாம் பொதுவாய்ப் போனால் இருக்குறதெல்லாம் பொதுவாய்ப் போனால் பதுக்குற வேலையும் இருக்காது ஒதுக்குற வேலையும் இருக்காது
உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது மனம் கீழும் மேலும் புரளாது உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டா ஆஆஆஆஆஆஆ கெடுக்குற நோக்கம் வளராது
திருடாதே, பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்துவிடாதே திறமை இருக்கு மறந்து விடாதே திருடாதே, பாப்பா திருடாதே பாப்பா திருடாதே
சிவாஜி கணேசனும், கண்ணதாசனும் இணைந்து, மனிதனின் இல்வாழ்க்கை, உறவு, இன்பம், பொருள், இல்லறம், வாழ்வின் அர்த்தம் என்று எடுத்துரைத்தார்கள். எம்.ஜி.இராமச்சந்திரனும், கல்யாணசுந்தரமும் இணைந்து, பொதுவாழ்வில் மனிதனின் பண்பு, அறம், சிந்தனை, செயல்பாடு என்று பொதுவாழ்வின் அர்த்தத்தை எடுத்துரைத்தார்கள்.
ஆக, பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள், தேசத்தை வீடாகவும், தேசத்து மக்களை தனது சொந்தங்களாகவும் எண்ணி செயலாற்ற வேண்டும். எம்.ஜி.ஆர், குழந்தைகளை அன்புடன் அள்ளி எடுத்து, அரவணைத்து, பாசத்துடனும், நேசத்துடனும், முகத்தில் புன்னகை மலர சொல்கின்றார், திருடாதே பாப்பா, திருடாதே என்று. கையில் பிரம்பை எடுத்து மிரட்டிச் சொல்லவில்லை.
கல்யாணசுந்தரம் கவிதை எழுதலாம். அதெல்லாம் வறட்டு தத்துவங்கள் என்று எம்.ஜி.ஆர் ஒதுக்கிவிடவில்லை. கல்யாணசுந்தரத்தின் பாட்டுக்கு, சிறப்பான இசைவடிவம் அமைத்து, அதனை மிகவும் சிறப்பாக பாடகர்கள் பாடி, திரையில் அருமையான வீடியோவாக பதிவுசெய்து, சிறந்ததோர் சமுதாயத்தை உருவாக்கி இருக்கின்றார்கள், நம் முன்னோர்கள். அவர்கள், சான்றோர்களாவர். ஆக, குறையொன்றுமில்லை. வாழ்வோம் வாழ்க்கையை, இன்பம், பொருள், அறம் என்று அனைத்தையும் பெற்று.