அவன் வேறு; நீ வேறு அல்ல.
அவன்தான் நீ; நீதான் அவன். அவனை புறந்தள்ளிவிட இயலாது. அவனும் வாழ்க்கையை வாழவேண்டும். அனைவரையும்போல், அவனும், வாழ்க்கையை பரிபூரணமாக, முழுமையாக வாழவேண்டும். மற்ற இருவருக்கு எடுத்துரைத்ததைப்போல், அவனுக்கும் வாழ்வின் உண்மையை உணரும்வகையில் எடுத்துரைக்க வேண்டும்.
எல்லோருக்கும் நெனப்பு. தாங்கள் பாரி என்றும், மற்றவர்கள் அனைவரும் சத்யன் என்றும். தங்களை, ஜீவா அல்லது ஸ்ரீகாந்த் என்றுகூட கருதுவதில்லை. அனைவரும், தங்களை, விஜய்க்கும் ஒரு படிமேல் என்றே எண்ணுகின்றார்கள். ஆனால், அவர்களின் செயலைக் கவனித்துப் பார்த்தால், சத்யன் தனமாகத்தான் இருக்கும்.